நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில், இன்று முதல் அதிமுக சார்பாக போட்டியிடுபவர்கள் விருப்ப மனு அளிக்கும் பணி இன்று தொடக்கம்.
2019ம் நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணியில், அனைத்து கட்சிகளும் மும்முரமாக இறங்கியுள்ளது. தனித்து போட்டிடுவது மற்றும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என பேச்சுவார்த்தை மற்றும் களப்பணிகளை ஆளும் கட்சி உட்பட எதிர்க்கட்சிகளும் கவனித்து வருகிறது.
அதிமுக விருப்ப மனு விண்ணப்பம்
அந்த வகையில், திமுக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில், பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், தேர்தலில் போட்டியிட விருப்பமுடையவர்கள் இன்று முதல் அவர்களது விருப்ப மனுவை சமர்ப்பித்து வரலாம் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக வெளியான அறிக்கையில், “இன்று முதல் 10-2-2019 ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ரூ.25,000 கட்டணம் செலுத்தி விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து வழங்கலாம்” என்று குறிப்பிட்டிருந்தது.
எனவே இன்று காலை 10 மணி முதல் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அதிமுகவினர் தயாராகி வருகின்றனர்.