Arun Janardhanan
Dhinakaran fails to bag single seat : திமுக மற்றும் அதிமுக கூட்டணியால் மொத்தமாக வெளியேற்றப்பட்டது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம். நடைபெற்று முடிந்த தேர்தலில் கட்சியின் தலைவர் டி.டி.வி. தினகரன் உட்பட ஒருவரும் ஒரு தொகுதியிலும் கூட வெற்றி பெறாதது அக்கட்சியின் முடிவின் துவக்கமாக பார்க்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை வெளியான தேர்தல் முடிவுகள், 2018ம் ஆண்டு அதிமுகவில் இருந்து தினகரனும், சசிகலாவும் வெளியேற்றப்பட்ட பிறகு, தன்னுடைய கட்சி மற்றும் அரசியல் அபிலாஷைகளை வெளியிட்ட தினகரனுக்கு இது மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.
தொடர்ச்சியான குழப்பங்களின் விளைவாகவே இந்த தோல்வி பார்க்கப்படுகிறது. இதற்கு பெரும்பாலும் பாஜக காரணம். அப்போதைய முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு பாஜக தமிழகத்தில் மெல்ல தன்னுடைய வேரை ஊன்றியது. அது திமுகவின் உணர்வை உடைத்தது மட்டும் இல்லாமல் அந்த தேசிய கட்சியுடன் கட்டாய கூட்டணிக்கும் இட்டுச் சென்றது.
சுரங்க தொழில் அதிபர் சேகர் ரெட்டிக்கு தொடர்பான இடங்களில் தொடர் வருமான வரிசோதனையினர் மற்றும் புலனாய்வு முகமையின் சோதனை, இடைக்கால பொதுச்செயலாளராக அப்போது இருந்த சசிக்கலாவிற்கு எதிராக பன்னீர்செல்வம் ஏற்படுத்திய சர்ச்சை, உயர்மட்ட அதிமுக அமைச்சர்களைக் குறிவைத்து தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனைகள் போன்றவை ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு தமிழக அரசியலில் நுழைவதற்கு பாஜக நுழைவதற்கு வழிவகுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த கொந்தளிப்பைத் தொடர்ந்து: இரண்டு அதிமுக பிரிவையும் ஒன்றிணைத்தல், இறுதியாக சசிகலாவை கட்சியிலிருந்து வெளியேற்றுதல் போன்றவை நிகழ்ந்தது. இது மீண்டும் பாஜகவின் திட்டங்களில் ஒன்றாக இருந்தது.
தினகரன் கட்சி முழுமையாக தோல்வியை சந்திக்க, முந்தைய சட்டமன்றத்தில் ஒரு இடம் கூட பெறாத பாஜக இம்முறை நான்கு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. வானதி ஸ்ரீனிவாசன், நயனார் நாகேந்திரன் உள்ளிட்டோர் வெற்றியாளர்களில் அடங்குவர். மற்றொரு பக்கம் பாஜகவுடன் மிகவும் நெருக்கமாக பழகிய அதிமுக அமைச்சர்களும் தோல்வி அடைந்துள்ளனர். கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு சசிக்கலாவிற்கு எதிராக அறிக்கைகள் விட அனுமதிக்கப்பட்ட ஒரே அமைச்சர் ஜெயக்குமார் தோல்வி அடைந்தார். பன்னீர்செல்வத்திற்கு துணையாக இருந்த, ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்த மஃபாய் பாண்டியன்னும் தேர்தலில் தோல்வியுற்றார்.
ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக சசிகலா சிறைக்கு சென்ற போதும் கூட, அதிமுகவை காப்பாற்ற இருக்கும் ஒரே ஒரு தலைவர் சசிகலா என்று அதிமுகவின் ஒரு பிரிவினர் நம்பினர். “அந்த அத்தியாயம் முடிந்துவிட்டது போல் தெரிகிறது. புத்துயிர் பெற வாய்ப்பில்லை. அதிமுக அல்லது பாஜக போட்டியிட்ட அனைத்து இடங்களையும் இழந்து தினகரன் ஏன் போராட வேண்டும்? என்று சசிகலாவை மறைமுகமாக ஆதரித்து வந்த மூத்த அதிமுக தலைவர் ஒருவர் கூறினார்.
சசிகலா தொடர்ந்து அரசியலில் இருந்து விலகியே இருப்பார் என்று அவருடைய குடும்ப உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர். தினகரன் ஒன்று அல்லது இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தால் கூட அவருடைய அதிகாரத்தை உறுதிப்படுத்த காரணங்கள் இருக்கும். அவருடைய இடம் இப்போது என்ன? பாஜக இன்னும் அவருடைய பழைய வழக்குகளை வைத்து அச்சுறுத்திக் கொண்டிருக்கும் போது ஏன் சசிகலா தினகரனின் அரசியல் வாழ்க்கைக்காக ரிஸ்க் எடுக்க வேண்டும்? கடந்த நான்கு ஆண்டுகள் சிறையில் கழித்ததை அவர் மறக்கவே மாட்டார் என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil