Advertisment

42 எம்எல்ஏ-க்களுக்கு கல்தா: முதல்வர் பழனிசாமி அதிரடி ஏன்?

அதிமுகவில் 42 சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

author-image
WebDesk
New Update
aiadmk denied seats for 42 sitting MLAs, admk seats denied to 42 sitting MLAs, admk, aiadmk, சீட் கிடைக்காத சிட்டிங் எம்எல்ஏக்கள், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், tamil ndu assembly election 2021, rajavarman, minister baskaran,

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி தலைமை நேற்று மாலையிட்டது. அதன்படி, அதிமுகவில் 42 சிட்டிங் எம்.எல்.ஏ.க்களுக்கு தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

Advertisment

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. அதிமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை இறுதி செய்ததையடுத்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் கூட்டாக 171 வேட்பாளர்கள் பட்டியலை நேற்று (மார்ச் 10) வெளியிட்டனர். முன்னதாக, முதல்கட்டமாக 6 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டனர். இதன் மூலம் அதிமுக சார்பில் 177 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது.

இதில், அமைச்சர்கள் பாஸ்கரன், நிலோஃபர் கபில், வளர்மதி ஆகிய 3 அமைச்சர்களைத் தவிர மற்ற அனைத்து அமைச்சர்களும் மீண்டும் அவர்களுடைய தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கபப்ட்டுள்ளது. அதே போல, தற்போது அதிமுகவில் எம்.எல்.ஏ.க்களாக உள்ள பெரும்பாலானவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அதிமுகவில் தற்போது எம்.எல்.ஏ.க்களாக உள்ள 42 சிட்டிங் எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் போட்டியிடுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பது வேட்பாளர்கள் பட்டியல் மூலம் தெரியவந்துள்ளது.

அதிமுக சார்பில் இந்த தேர்தலில் போட்டியிட மிண்டும் வாய்ப்பு அளிக்கப்படாத, சீட் கிடைக்காத 42 சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் யார் யார் என்ற பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1.திருத்தனி - நரசிம்மன்

2.கே.வி.குப்பம் - லோகநாதன்

3.வாணியம்பாடி - நிலோபர் கபில் (அமைச்சர்)

4.ஊத்தங்கரை - மனோரஞ்சிதம்

5.பர்கூர் - வீ.ராஜேந்திரன்

6.கள்ளக்குறிச்சி - பிரபு

7.கங்கவல்லி - மருதமுத்து

8.ஆத்தூர் - சின்னதம்பி

9.ஓமலூர் - வெற்றிவேல்

10.மேட்டூர் - செம்மலை

11.சங்கக்ரி - எஸ்.ராஜா

12.சேலம் (தெற்கு) - சக்திவேல்

13.வீரபாண்டி - மனோன்மணி

14.சேந்தமங்களம் - சந்திரசேகர்

15.பெருந்துறை - தோப்பு வெங்கடாசலம்

16.அந்தியூர் - ராஜா கிருஷ்ணன்

17.பவானி சாகர் - ஈஸ்வரன்

18.குன்னூர் - ராமு

19.மேட்டுப்பாளையம் - ஓ.கே.சின்னராசு

20.பல்லடம் - நடராஜன்

21.கவுண்டம்பாளையம் - ஆறுகுட்டி

22.கிணத்துக்கடவு - சண்முகம்

23.வால்பாறை - கஸ்தூரி வாசு

24.கிருஷ்ணராயபுரம் - கீதா

25.ஸ்ரீரங்கம் - வளர்மதி

26.மண்ணச்சநல்லூர் - பரமேஸ்வரி

27.பெரம்பலூர் - தமிழ்ச்செல்வன்

28.பண்ருட்டி - சத்யா பன்னீர்செல்வம்

29.விருத்தாச்சலம் - கலைச்செல்வன்

30.மயிலாடுதுறை - ராதாகிருஷ்ணன்

31.பேராவூரணி கோவிந்தராஜூ

32.பட்டுக்கோட்டை - வி.சேகர்

33.கந்தர்வக்கோட்டை - ஆறுமுகம்

34.சிவகங்கை - பாஸ்கரன் (அமைச்சர்)

35.அறந்தாங்கி - ரத்தினசாபாபதி

36.கம்பம் - ஜக்கையன்

37.ஸ்ரீவில்லிப்புத்தூர் - சந்திரபிரபா

38.ராமநாதபுரம் - மணிகண்டன்

39.அம்பாசமுத்திரம் - முருகையா பாண்டியன்

40.நாங்குநேரி - ரெட்டியார் நாராயணன்

41.சோளிங்கர் - சம்பத்

42.சாத்தூர் - ராஜவர்மன்

அதிமுகவில் இந்த 42 சிட்டிங் எம்.எல்.ஏ.க்களுக்கும் சீட் கொடுக்கப்படாமல் கல்தா கொடுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு சீட் கொடுக்கப்படாததற்கு காரணம் கட்சித் தலைமை முதல்வர் பழனிசாமி அதிருப்தி அடைந்ததுதான் காரணம் என்று கூறப்படுகிறது. சிலர் தனிப்பட்ட காரணங்களால் போட்டியிடவில்லை என்று கூறப்படுகிறது.

இதில் சாத்தூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜவர்மன் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை சந்தித்ததையடுத்து அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தற்போது ராஜவர்மன் அமமுகவில் இணைந்துள்ளார். இதே போல, கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபுவும் டிடிவி தினகரனை போய் சந்தித்தது ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.

Aiadmk Admk Tamil Nadu Assembly Elections 2021
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment