Advertisment

அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள் என்ன ?

அதிமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டார். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
aiadmk election manifesto 2019

aiadmk election manifesto 2019

aiadmk election manifesto 2019 : தமிழக தேர்தல் களம் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்ற நிலையில் இன்று காலை தங்களின் தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து அதிமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டார்.

Advertisment

aiadmk election manifesto 2019 : முக்கிய அம்சங்கள் இதோ !

aiadmk election manifesto 2019 தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அதிமுகவினர்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் முதல்வர், துணை முதல்வர், மற்றும் முக்கிய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

அம்மா தேசிய வறுமை ஒழிப்புத் திட்டம்

அம்மா தேசிய வறுமை ஒழிப்புத் திட்டம் மூலமாக மாதாந்திர நேரடி உதவித் தொகை ரூ.1500-ஐ, வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள், நிலமற்ற விவசாயக் கூலிகள், ஆதரவற்ற பெண்கள், கைம்பெண்கள், முதியவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

எம்.ஜி.ஆர். தேசிய வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டுத் திட்டம்

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் புதிய வேலைவாய்ப்புகளை பெற எம்.ஜி.ஆர். தேசிய வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டுத் திட்டம்.

நீர் பாசனம், நீர் மேலாண்மைத் திட்டம்

அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் மூன்று நீர் மேலாண்மைத் திட்டம் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. வெள்ளக்காலங்களில் கடலில் கலக்கும் தண்ணீரை வறட்சி மிகுந்த பகுதியில் செலுத்திடவும், நிலத்தடி நீரின் அளவை உயர்த்திடவும் வழி செய்யும் வகையில் இந்த திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

நொய்யல் ஆற்றையும், மேற்கு தொடர்ச்சி மலையையும் மையமாக கொண்டு, பருவகாலங்களில் பெறப்படும் மழை நீரை தொண்டாமுத்தூர் ஒன்றியப் பகுதி, மதுக்கரை வனச்சரகம், நண்டக்கரை, முண்டன்துறை, கோவைப்புதூர், போளுவாம்பட்டி வனச்சரகம் ஆகிய பகுதிகளில் தடுப்பணைகள் அமைத்து மழை நீர் சேகரிக்கப்படும்.

காவேரி நதியின் மேல் உள்ள மோகனூர் தடுப்பணையில் இருந்து நாமக்கல் மாவட்டத்தின் மோகனூர், நாமக்கல், புதுச்சத்திரம், எருமைப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு வரப்படும்.

திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் நீராதாரம் பெற அக்னியாறு, தெற்கு வெள்ளாறு, மணிமுத்தாறு, வைகை, குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டம் கொண்டு வரப்படும்.

வங்கிக் கடன்கள் தள்ளுபடி

மாநில மற்றும் தேசிய வங்கிகளில் மாணவர்கள் பெற்ற கல்விக் கடனை ரத்து செய்ய வேண்டும் என்றும், விவசாயிகளின் கடன் சுமையை குறைக்கும் வகையில் புதிய திட்டங்கள் கொண்டு வரப்படும்

கல்வி

பொதுப்பட்டியலிருந்து மாநிலப்பட்டியலுக்கு கல்வி கொண்டுவரப்படும். நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு விலக்கு பெறப்படும்.

இடஒதுக்கீடு

தனியார் துறை வேலைவாய்ப்புகளிலும் இடஒதுக்கீட்டினை வழங்க வழிவகை செய்யப்படும்.  இஸ்லாமிய, கிருத்துவ மதங்களுக்கு மாறும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் சாதி சான்றிதழில் மாற்றம் ஏதும் இல்லாமல் மதம் மாற்ற சட்டம் இயற்றப்படும்.

இலங்கை விவகாரம்

இலங்கையில் நடைபெற்ற இனப்படு கொலை தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

7 தமிழர்களை விடுதலை செய்ய மத்திய அரசையும், குடியரசுத் தலைவரையும் வலியுறுத்தும்.

இதர அறிவிப்புகள்

அலுவல் மொழியில் ஒன்றாக தமிழை அறிவிக்க வேண்டும்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக காவேரி டெல்டா பகுதி அறிவிக்கப்படும்.

புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தப்படும்.

மேலும் படிக்க : DMK Election Manifesto 2019: ‘நீட் ரத்து; கல்விக் கடன் ரத்து; 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு’ – திமுக தேர்தல் அறிக்கை

General Election Aiadmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment