வலி.. வேதனை.. ஒற்றைக் காலில் நின்று பிரசாரம் செய்யும் கமல்ஹாசன்! அக்ஷரா உருக்கமான பதிவு

Akshara Hassan post about Kamal Hassan தனது தந்தை ஒரு உண்மையான போராளி .அவர் எதை விரும்புவாரோ அதை செய்வார்.

Akshara Hassan post about Kamal Hassan தனது தந்தை ஒரு உண்மையான போராளி .அவர் எதை விரும்புவாரோ அதை செய்வார்.

author-image
WebDesk
New Update
Akshara Hassan post about Kamal Hassan pain gone viral Tamil News

Akshara Hassan post about Kamal Hassan pain gone viral Tamil News

Akshara Hassan post about Kamal Hassan pain gone viral Tamil News : அக்ஷரா ஹாசன் வெளியிட்ட கமலின் பரப்புரை புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

மக்கள் நீதி மய்யம் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் தான் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியிலும்  வாக்கு சேகரித்து வருகிறார். பாஜக சார்பில் வானதி சீனிவாசனும் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். கமல் மீது பல்வேறு விமர்சனங்கள் வானதி தரப்பில் இருந்து வைக்கப்படுவதால் கமல் தனது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளார்.

publive-image
Akshara Hassan Post about Kamal Hassan

இந்த நிலையில் கடந்த வாரம் கோவை பூ மார்க்கெட் பகுதியில் கமல் நடைபயிற்சி மேற்கொண்டு வாக்கு சேகரித்தபோது அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆர்வத்துடன் பொதுமக்கள் கூடினர். அப்போது அவருடைய காலை கூட்டத்தில் இருந்தவர்கள் மிதித்துள்ளனர். சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட காலிலே மிதித்ததால் காலில் வீக்கம் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவரின் ஆசேலானை பெற்று சிறுது நாட்கள் ஓய்வில் இருந்த கமல் மீண்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு துணையாக மகள் அக்ஷரா ஹாசன் பிரச்சார வண்டியிலயே பயணம் செய்கிறார்.

தற்போது அக்ஷரா ஹாசன் பிரச்சாரத்தின் போது எடுத்து புகைப்படம் ஒன்றை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் கமல் பிரச்சார வண்டியில் அடிபட்ட காலை தூக்கியபடி ஒரு காலில் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். மேலும் தனது தந்தை ஒரு உண்மையான போராளி .அவர் எதை விரும்புவாரோ அதை செய்வார். எல்லா வலிகளையும் கடந்து வருவார் என பதிவிட்டுள்ளார்.

Advertisment
Advertisements

கமலுக்கு ஆதரவாக தேர்தல் களத்தில் அக்ஷரா துணை நிற்பது இளைஞர்களையும் மக்களையும் கவர்ந்து வருகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Akshara Haasan Kamal Haasan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: