தமிழகத்தில் விழுப்பிரம் மற்றும் சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் எதிர்க்கொள்ளும் பிற கட்சி வேட்பாளர்கள் பட்டியலுக்கான தொகுப்பு.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின், இரு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று அறிவித்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி வேட்பாளர்கள்
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில், தனிச்சின்னத்தில் தான் மீண்டும் போட்டியிடுவதாகவும், விழுப்புரம் தொகுதியில் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என்றும், திருமாவளவன் தெரிவித்தார். இன்னும் ஓரிரு நாட்களில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றும், மீண்டும் மோடி ஆட்சி வேண்டாம் என்று எண்ணத்தை முன்னிறுத்தி, பரப்புரையில் ஈடுபடுவோம் என்றும், திருமாவளவன் தெரிவித்தார்.
இந்நிலையில் விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் விசிக.வுக்கு எதிராக அதிமுக கூட்டணி கட்சியான பாமக போட்டியிடுகிறது. பாமக வேட்பாளராக வடிவேலு இராவணன், விசிக.வின் வேட்பாளரான ரவிகுமாரை எதிர்த்து போட்டியிடுகிறார். இதே விழுப்புரம் தொகுதியில், அமமுக கட்சியை சேர்ந்த வானூர் என். கணபதி போட்டியிடுகிறார்.
சிதம்பரத்தில், விசிக தலைவர் திருமாவளவனை எதிர்த்து அதிமுக நேரடியாக மோதுகிறது. அதிமுக-வை சேர்ந்த பொ. சந்திரசேகர் போட்டியிடுகிறார். இதே சிதம்பரத்தில் விசிக-வை நேரடியாக எதிர்த்து போட்டியிடும் அமமுக சார்பாக டாக்டர் இளவரசன் களத்தில் இறங்குகிறார்.