அமேதியில் பேரணியாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல் காந்தி

வேட்புமனு தாக்கல் செய்யும் போது ப்ரியங்கா காந்தி மற்றும் சோனியா காந்தி, மற்றும் ராபர்ட் வத்ரா ஆகியோர் ராகுலுடன் இருந்தனர்

வேட்புமனு தாக்கல் செய்யும் போது ப்ரியங்கா காந்தி மற்றும் சோனியா காந்தி, மற்றும் ராபர்ட் வத்ரா ஆகியோர் ராகுலுடன் இருந்தனர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Amethi Constituency Congress President Rahul Gandhi Filed Nomination

Amethi Constituency Congress President Rahul Gandhi Filed Nomination

Amethi Constituency Congress President Rahul Gandhi Filed Nomination : நடைபெற இருக்கும் 17வது நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு இடங்களில் போட்டியிடுகிறார் ராகுல் காந்தி. கேரள மாநிலம் வயநாட்டில் இருந்தும், உத்திரப் பிரதேசம் மாநிலம் அமேதியிலும் போட்டியிடுகிறார் அவர்.

Advertisment

கேரளாவில் வருகின்ற 23ம் தேதி தேர்தல் துவங்குவதால் சென்ற வாரம் (ஏப்ரல் 4) தன்னுடைய சகோதரி ப்ரியங்கா காந்தி மற்றும் கேரள காங்கிரஸ் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில் இன்று அமேதியில் வேட்பு மனுவினை தற்போது தாக்கல் செய்தார் ராகுல் காந்தி.

கோலகலமாக பேரணியில் சென்று வேட்பு மனு தாக்கல் செய்யும் ராகுல் காந்தி

அவர் கலந்து கொண்ட பேரணியில் ப்ரியங்கா காந்தி, அவருடைய கணவர் ராபர்ட் வத்ரா ஆகியோரும் கலந்து கொண்டனர். வேட்புமனு தாக்கல் செய்யும் போது ப்ரியங்கா காந்தி மற்றும் சோனியா காந்தி, மற்றும் ராபர்ட் வத்ரா ஆகியோர் ராகுலுடன் இருந்தனர்.

Advertisment
Advertisements

இந்த தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக தரப்பில் இருந்து, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி போட்டியிடுகிறார். காங்கிரஸ் தலைவர்களின் வருகையை ஒட்டி காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என அங்கு பெரிய கூட்டமே திரண்டு அவர்களை வரவேற்றுள்ளது.

மூன்று முறையாக அமேதியின் நாடாளுமன்ற உறுப்பினராக ராகுல் காந்தி

2004ம் ஆண்டில் அவர் 3,90,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2009ம் ஆண்டு தேர்தலில் வாக்கு வித்யாசம் 4,64,000 என்றிருந்தது. ஆனால் 2014 தேர்தலில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்ட மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானியை வெறும் 1,07,000 வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : நேரு குடும்பத்தின் தென்னகப் பாசத்தின் காரணம் என்ன தெரியுமா  ?

Rahul Gandhi General Election

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: