AMMK party symbol Gift Pack Trending : அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் இம்முறை போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பொதுச்சின்னத்தை வழங்க வேண்டும் என்றும் குக்கர் சின்னத்தை தங்களின் கட்சி சின்னமாக ஒதுக்கித் தரவேண்டும் என்று மனுதாக்கல் செய்திருந்தார் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்.
வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய இருந்த இறுதி நாளான மார்ச் 26 வரை அக்கட்சிக்கு எந்த சின்னமும் ஒதுக்கப்படவில்லை. குக்கர் சின்னம் பதிவு செய்யப்பட்ட கட்சிக்கே வழங்க இயலும் என்றும், இன்று பதிவு செய்தாலும் சின்னம் கிடைக்க சுமார் 30 நாட்கள் ஆகும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியது. பின்பு அக்கட்சி வேட்பாளர்கள் அனைவரும் ஒரே சின்னத்தில் போட்டியிட முடிவாகி பரிசுப்பெட்டி சின்னத்தை அக்கட்சிக்கு தேர்தல் ஆணையம் இன்று காலை ஒதுக்கியது.
இன்று காலையில் இருந்து பரிசுப்பொட்டி மற்றும் Giftpack என்ற இரண்டு ஹேஷ்டாக்குகளும் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றது.
மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் 59 வேட்பாளர்களுக்கும் “பரிசுப்பெட்டி” சின்னத்தை ஒதுக்கிய இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள். #ElectionCommissionOfIndia #giftbox #தேர்தல்ஆணையம் pic.twitter.com/a9yKuLv7l0
— TTV Dhinakaran (@TTVDhinakaran) 29 March 2019
ஒரே நாளில் மக்கள் மத்தியில் இந்த பரிசுப்பெட்டி சின்னத்தை விரைவில் கொண்டு சேர்ப்போம் என்று கூறியுள்ளார் பெரம்பூர் தொகுதி வேட்பாளர் வெற்றிவேல். சமூக வலைதளங்களான ட்விட்டர், ஃபேஸ்புக் வாயிலாக மிக விரைவாக மக்கள் மத்தியில் சேர்க்க இயலும் என தனியார் செய்தித் தொலைக்காட்சிக்கு அவர் பேட்டியளித்தார்.
அமமுக சார்பில் தேனி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கும் தங்க தமிழ்ச்செல்வன் “மக்கள் மத்தியில் பரிசுப்பெட்டி சின்னத்தை மக்களிடம் தெரிவித்து வெற்றிபெறுவோம்” என்று கூறினார்.
ரூ.20 டோக்கன் அளித்த அமமுகவிற்கு பரிசுப்பெட்டி சின்னம் மிகவும் பொருத்தமான ஒன்று. ஆனால் இம்முறை மக்கள் ஏமாற மாட்டார்கள். அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்து வீடு திரும்புவார்கள் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இவ்விவகாரம் குறித்து பேசியுள்ளார்.
அமைச்சர் ஜெயகுமார், இரட்டை இலைக்கு முன்னால் எந்த சின்னமும் வெற்றி பெறாது என்று கூறியுள்ளார்.
அரசியல் வட்டாரத்தில் மட்டுமலாமல், நெட்டிசன்கள் மத்தியிலும் இன்று பேசும் பொருளாகியுள்ளது பரிசுப் பெட்டி.
#TTVDinakaran gets Gift box symbol for the forthcoming election … !!!
இனிமே 2000 Rs aah Gift Box la வெச்சு குடுக்கலாம் … !!! #பரிசுப்பெட்டி pic.twitter.com/KID0X27884— We Luv Coimbatore (@weluvcoimbatore) 29 March 2019
“A New Beginning”#TTVDinakaran #AMMK #giftbox #பரிசுப்பெட்டி
— Gomathi Sivam ???? (@GomatiSivam) 29 March 2019
The Weapon might be different. But remember a soldier is always a soldier!! Congratulations ???????? @TTVDhinakaran #AMMK #GiftBox #பரிசுபெட்டி #பரிசுப்பெட்டி #TTVDhinakaran #TTVDinakaran pic.twitter.com/3FgRI9nuYy
— MOHANAVEL (@mohanvelz) 29 March 2019
Vote for #GiftBox #பரிசுப்பெட்டி #GIFTPACK pic.twitter.com/mWVNk8ZicB
— Vijayan (@Vijayan08780466) 29 March 2019
களத்தில் எங்களை மிஞ்ச எவனுமில்லை.. #Vote4GiftPack #GIFTPACK #பரிசுப்பெட்டி #TTVGIFTPACK pic.twitter.com/5UkZtKZCJP
— Kavisri Dinesh (@kavisridineshg) 29 March 2019
The symbol of love …
The symbol of tamils…#பரிசுப்பெட்டி #Giftpack pic.twitter.com/e34lXk3w2v— Kumaraguru V (@Kumaraguru_VK) 29 March 2019
GIFTBOX……GIFT SENT FROM HEAVEN BY AMMA to PEOPLE OF TAMILNADU..#பரிசுப்பெட்டி
— Arul Mariappan (@ArulMariappan) 29 March 2019
Get all the Latest Tamil News and Election 2021 News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Lok Sabha Election 2019 Schedule by following us on Twitter and Facebook
Web Title:Ammk party symbol gift pack trending in social media twitter reactions
பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை எப்போது? 3 நாட்களில் முடிவெடுக்கும் ஆளுநர்
கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வருவதை வரவேற்கிறேன் : தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ்அழகிரி
டிராகன் பழத்திற்கு சமஸ்கிருத பெயர் : குஜராத் முதல்வரின் நடவடிக்கைக்கு காரணம் என்ன?
சீரம் இன்ஸ்டிடியூட்-ல் திடீர் தீவிபத்து : 5 பேர் பலியானதாக தகவல்