Advertisment

பாஜக கூட்டணியால் மங்கும் இபிஎஸ் பலம்

பெண்மணி ஒருவர் ஏன் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தது? மோடி தமிழகத்திற்கு என்ன செய்திருக்கிறார் என்று கேள்வி எழுப்பினார்.

author-image
WebDesk
New Update
பாஜக கூட்டணியால் மங்கும் இபிஎஸ் பலம்

Manoj C G 

Advertisment

goodwill for EPS in central, south Tamil Nadu : தெற்கு மற்றும் மத்திய தமிழக பகுதிகளில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆளும் கட்சியின் மீது எந்த ஒரு அதிருப்தியும் இல்லை என்பது தெரிய வருகிறது. ஆனாலும் மக்களால் ஏற்றுக் கொள்ள இயலாததாக இருக்கிறது மோடி மற்றும் அமித் ஷாவின் முன்பு எடப்பாடி பழனிசாமி நடந்து கொள்ளும் விதம். தற்போதைய தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவிற்கு 20 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 188 இடங்களில் போட்டியிட்டது பாஜக. அதில் 180 இடங்களில் டெபாசிட்டை இழந்தது மற்றும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. அன்றைய தேர்தலில் பாஜகவின் வாக்கு வங்கி 2.84 சதவீதமாக இருந்தது.

பாஜகவின் பயம் மிகவும் அதிகமாக இருக்கின்றது ஏனென்றால் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்பு அதிமுகவை திறம்பட செயல்பட வைத்தற்காக பழனிச்சாமியின் திறன் அதிகமாக போற்றப்பட்டது. ஆனால் நினைவில் கூறிக் கொள்ளும் வகையில் எந்தவிதமான சாதனைகளையும் மேற்கொள்ளவில்லை. கருணாநிதி மற்றும் ஜெயலலிதா போன்ற பெரிய ஆளுமைகள் இல்லாத நேரத்தில் நடைபெறும் இந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி இறங்கு முகத்தை கண்டு வருகிறார்.

6.12 சதவீதம் கிறித்துவர்கள் 5.86 சதவீதம் இஸ்லாமியர்கள் பாஜகவுடன் அதிமுக வைத்திருக்கும் கூட்டணியால் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். சிவகங்கையில் பிறந்து மதுரை மேலூர் பகுதியில் வசித்துவரும் ராஜேஸ்வரி என்பவர் இதுநாள் வரையில் ஜெயலலிதாவிற்கு வாக்களித்தேன் ஆனால் இந்த முறை பார்ப்போம் என்று கூறியுள்ளார். பெயர் கூற விரும்பாத பக்கத்துக் கடை வியாபாரியான பெண்மணி ஒருவர் அதிமுக ஏன் பாஜகவுடன் கூட்டணி வைத்தது? மோடி தமிழகத்திற்கு என்ன செய்திருக்கிறார் என்று கேள்வி எழுப்பினார்.

விருதுநகர் மாவட்டம் வளையப்பட்டியில் வசிக்கும் ஈஸ்வரி என்பவர் அம்மாவின் கட்சி என்பதால் அதிமுகவிற்கு வாக்களிப்பேன் என்று கூறியுள்ளார். ஒரு சில தொகுதிகளை தவிர்த்து கமல் ஹாசனின் மக்கள் நீதி மையமோ தினகரனின் அமமுக கட்சியோ மிகப்பெரிய போட்டியாளராக இருப்பதாக தெரியவில்லை. சில இடங்களில் அமமுக கட்சி அதிமுகவின் வாக்கு வங்கியை பிரிக்கலாம்.

மதுரை திருமங்கலம் அருகே லாரி ஓட்டும் விஜய் என்பவர் எடப்பாடி பழனிச்சாமி நரேந்திர மோடியின் கால்களில் விழுந்து விட்டார் என்று நம்புகிறார். இதற்கு முன்பு இதே பாணியில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவின் காலில் விழுந்தது குறிப்பிடத்தக்கது. நான் பல்வேறு இடங்களுக்கு லாரி ஓட்டி செல்கின்றேன். ஆனால் எந்த ஒரு மாநிலமும் இப்படி மத்திய அரசுக்கு அடிபணிந்து இல்லை என்கிறார். அவர் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் சொந்த ஊர்க்காரரான இவர் இதுநாள் வரையில் அதிமுகவிற்கு வாக்களித்தார். இம்முறை அப்படி அவர் செய்யப் போவதில்லை என்பதையும் தெளிவுபடுத்தி உள்ளார்.

பாஜக உடனான கூட்டணி தேர்தலுக்கானது மட்டும் தான் என்றும் அது எப்போதும் சித்தாந்தங்களை ஒன்று சேர்க்காது என்றும் திருநெல்வேலியில் உள்ள அதிமுக கட்சி நிர்வாகி சக்திவேல் கூறியுள்ளார். பாஜகவிற்கு 20 தொகுதிகளில் மட்டும் தான் வழங்கப்பட்டுள்ளது என்றும் அதை தாண்டி அவர்களால் செயல்பட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தென்காசியில் உள்ள ஆசிஸ் கனி என்பவர் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்து இருக்க கூடாது என்றும் இந்த ஒரே காரணத்திற்காக தற்போது இஸ்லாமியர்கள் திமுகவிற்கு வாக்களிக்க முடிவு செய்து இருப்பதாகவும் கூறியுள்ளார், தென்காசியில் அமமுக கட்சி இஸ்லாமிய வேட்பாளரை நிறுத்தி இருந்தாலும் அது வெற்றிக்கான வாய்ப்பாக பார்க்க முடியாது. இதுதொடர்பாக எந்தவிதமான சமுதாய அறிவிப்பும் வெளியாகவில்லை ஆனாலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்து இருப்பதால் அக்கட்சிக்கு வாக்களிக்க கூடாது என்று அனைவரும் முடிவெடுத்துள்ளனர் என்றார்.

திமுக தலைவர் திருச்சி சிவா மக்கள் அதிமுகவின் ஆட்சியால் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்று கூறியுள்ளார். சிறுபான்மையினர் வாக்குகள் குறித்து பெரிதும் தெளிவற்று இருக்கும் நிலையில், அதிமுக பெண்களின் வாக்குகளை குறி வைத்துள்ளது ஜெயலலிதாவின் பலமாக கருதப்படும் இந்த வாக்கினை பெறுவதற்காக இலவச வாஷிங் மெஷின் மற்றும் பொது போக்குவரத்தில் கட்டணச் சலுகை ஆகியவற்றை அறிவித்துள்ளது அதிமுக.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment