முதல்முறை வாக்களிக்க உள்ளீர்களா? நீங்கள் செய்ய வேண்டியதும், செய்ய கூடாததும் என்ன?

முதல்முறை வாக்களிக்கும் வாக்காளர்கள் பின்பற்றவேண்டிய விதிமுறைகளும், செய்யக்கூடாத செயல்களையும் தேர்தல் ஆணையம் பட்டியலிட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த தேர்தலில், 13,09311 வாக்காளர்கள் முதல்முறையாக வாக்களிக்க உள்ளனர். இதில் முதல்முறை வாக்களிக்கும் வாக்காளர்கள் என்ன செய்ய வேண்டும் என்ன செய்ய கூடாது என்பது குறித்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

முதல் முறையாக வாக்காளிப்பவர்களுக்கு உதவிக்குறிப்புகள், முதல் முறையாக வாக்களிப்பது எப்படி:

இந்திய தேர்தல் ஆணையம் தனது தேர்தல் வாக்காளர்கள் பட்டியல்களை ஆண்டு தொறும் புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது, ஒவ்வொரு ஆண்டும், 18 வயதை பூர்த்தி செய்த லட்சக்கணக்கான புதிய வாக்காளர்களை தங்களை வாக்காளர் பட்டியலில் இணைத்துகொண்டுள்ளனர். அவர்கள் தங்களை வாக்காளர் பட்டியலில் இணைத்துக்கொள்ள வசதியாக தேர்தல் ஆணையம் பல்வேறு முகாம்களை நடத்தி வருகிறது. இதில்  பெரும்பாலும், இந்த முதல் முறையாக பொதுத் தேர்தல்கள் அல்லது சட்டமன்றத் தேர்தல்கள் என வாக்களிப்பு விவரங்களை அமைப்பதில் வாக்காளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

இதில் 2019 ஆம் ஆண்டில், மேற்கு வங்கத்தில் மட்டும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்களார்கள் முதல் முறையாக வாக்களித்தனர். அசாமில், மார்ச் 27 முதல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வரும் மாநில சட்டசபை தேர்தலில் 12, 81,918 முதல் முறையாக வாக்களிக்க உள்ளனர். தமிழகத்தில், முதல் முறையாக 13,09311 வாக்காளர்கள் முதல்முறையாக உள்ளனர். கேரளாவில் 18-19 வயதுக்குட்பட்டவர்களில் சுமார் 2.99 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர், அவர்கள் இந்த சட்டசபை தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்க உள்ளனர்.

இந்த ஆண்டு முதல் முறையாக வாக்காளர்கள் வாக்களிக்க உள்ள ​​இளம் வாக்காளர்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றி பார்ப்போம்.

புதிய வாக்காளர்கள் என்ன செய்ய வேண்டும்?

தேர்தல் ஆணையத்தின் வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் உங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சரிபார்க்க வேண்டும்.

உங்கள் வாக்குச் சாவடிக்குச் சென்று சரிபார்க்கவும். இந்த முறை, கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. ஒரு வாக்குச் சாவடிக்கு 1000 வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும்.

உங்கள் வாக்குச் சாவடியில் வாக்களிக்கும் நேரத்தை சரிபார்க்கவும். பொதுவாக, வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை தொடரும். ஆனால் இந்த முறை கொரோனா தொற்று பாதிப்பை மனதில் வைத்து வாக்களிக்க ஒருமணி நேரம் கூடுதலாக வழக்கப்பட்டுள்ளது. இதில் கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்ட நோயாளிகள் வாக்களிக்க கடைசி நேரம் ஒதுக்கப்படலாம். அந்த நேரத்தில் வாக்களிக்க உங்களை அனுமதிக்கக்கூடாது.

ஒரு வாக்குச் சாவடியில், ஒவ்வொன்றும் தனித்தனி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கொண்ட பல கவுண்டர்கள் / அறைகள் உள்ளன. எனவே, நீங்கள் உங்கள் வாக்குச் சாவடி செல்லும்போது, அங்கு ​​வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரைச் சரிபார்க்கும் அதிகாரிகள் இருப்பார்கள், மேலும் நீங்கள் எந்த கவுண்டரில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவீர்கள் என்பதை உங்களுக்குத் தெரிவிப்பார்கள்.

வாக்களிக்கும் முன் உங்கள் தொகுதியிலிருந்து போட்டியிடும் வேட்பாளர்களின் சுயவிவரத்தை சரிபார்க்கவும்.

முகமூடி அணிவது மற்றும் சமூக இடைவெளி போன்ற கொரோனா தொற்று வழிகாட்டுதல்களைப் பின்பற்றுங்கள்.

ஆதார் அல்லது ஓட்டுநர் உரிமம் போன்ற கூடுதல் அடையாள அட்டையை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்.

ஒரு வி.வி.பி.ஏ.டி இயந்திரம் ஈ.வி.எம் உடன் இணைக்கப்படும். நீங்கள் ஈ.வி.எம்மில் உள்ள பொத்தானை அழுத்திய பின் கட்சி / வேட்பாளரின் சின்னம் / பெயரை இது பிரதிபலிக்கும். VVPAT இன் சீட்டுக்கும் நீங்கள் அழுத்திய பொத்தானுக்கும் இடையில் ஏதேனும் முரண்பாடு இருந்தால், இது குறித்து தலைமை அதிகாரியிடம் தெரிவிக்கவும்.

முதல் முறையாக வாக்காளர்கள் செய்யக்கூடாத செயல் :

உங்கள் EPIC- வாக்காளர் அடையாள அட்டையை எடுத்துச் செல்ல மறக்காதீர்கள். அட்டை இல்லாமல் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமான பணியாக இருக்கும்.

வரிசையில் நிற்கும்போதும், சமூக இடைவெளியை பராமரிக்கும் போதும் உங்கள் முறை வரும் வரை காத்திருக்க வேண்டும்.

உங்கள் மொபைல் தொலைபேசியை ஈ.வி.எம் அறைக்குள் கொண்டு செல்ல வேண்டாம்.

ஈவிஎம் பொத்தானை அழுத்தும்போது செல்பி கிளிக் செய்ய முயற்சிக்காதீர்கள். இது உங்களை சிக்கலில் ஆழ்த்தக்கூடும்.

ஒன்றுக்கு மேற்பட்ட பொத்தான்களை அழுத்த முயற்சிக்க வேண்டாம், உங்கள் வேட்பாளருக்கான பொத்தானை அழுத்தும்போது கவனமாக இருங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Election news here. You can also read all the Election news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Assembly election 2021 first time voter what you must do

Next Story
அதிமுக திடீர் புகார்: ஸ்டாலின், உதயநிதி உள்பட 5 தலைவர்கள் தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய மனு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com