Tamil Nadu Elections 2021 Dates Live Updates: தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, மற்றும் அசாம் ஆகிய 4 மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரேதேசத்திற்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ளார். அதன்படி ஏப்ரல் 6ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது
ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நான்கு மாநிலங்களிலும், ஒரு யூனியன் பிரதேசத்திலும் (புதுச்சேரி) பிரச்சாரம் செய்யத் தொடங்கியுள்ளனர்.
LIVE: #ElectionCommissionOfIndia announcing the schedule for holding General Elections to the Legislative Assemblies of Assam, Kerala, Puducherry, Tamil Nadu & West Bengal. #AssemblyElections2021 #ECI https://t.co/yS9EwLsH5w
— Election Commission of India #SVEEP (@ECISVEEP) February 26, 2021
அதோடு அந்தந்த மாநிலங்களில் உள்ள மாநில கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பரபரப்பான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக, திமுக, கமலின் மநீம போன்ற கட்சிகள் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
2020 நவம்பரில் நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பிறகு, இந்த மாநிலங்களுக்கான தேர்தல்கள் கொரோனா தொற்று அச்சத்திற்கு மத்தியில் நடத்தப்பட உள்ளது. பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஏற்படுத்தப்பட்ட அதே நெறிமுறையை தேர்தல் ஆணையம் செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் நேற்று முன்தினம் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. காலை 11 மணி முதல் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் துணை ஆணையர்கள் சுஷில் சந்திரா, ராஜீவ் குமார் உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து,இன்று மாலை 4.30 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் அதிகாரிகள் தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான முக்கிய அறிவுப்புகளை வெளியிட்டுள்ளனர். அதோடு 5 மாநிலங்களின் தேர்தல் தேதியையும் அறிவித்துள்ளனர்
மேற்கு வங்கத்தில் 294 இடங்களுக்கும், தமிழ்நாட்டில் 234 இடங்களுக்கும், கேரளாவில் 140 இடங்களுக்கும், அசாமில் 126 இடங்களுக்கும், புதுச்சேரியில் 30 இடங்களுக்கும் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” t.me/ietamil
Live Blog
“சட்ட மன்ற தேர்தல் அறிவிப்பு தேதி பற்றிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழுடன் இணைந்திருங்கள்”
Assembly Election date and schedule announcement live update:
தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் நேற்று முன்தினம் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. காலை 11 மணி முதல் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் துணை ஆணையர்கள் சுஷில் சந்திரா, ராஜீவ் குமார் உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மேற்வங்கத்தில் 8 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அசாம் மாநிலத்தில் மார்ச் 27 முதல் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது
அரசு ஊழியர்களையோ, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகளையோ பணியிட மாற்றம் செய்யக் கூடாது. யாருக்கும் பதவி உயர்வும் அளிக்கக் கூடாது, வேறு வழியில்லை என்றால், தேர்தல் ஆணைய ஒப்புதல் பெற்ற பிறகு இடமாற்றமோ, பதவி உயர்வோ வழங்கலாம்.அரசின் செலவில் தொலைக்காட்சி, ஊடகங்கள், நாளிதழ்களில் விளம்பரம் செய்யக்கூடாது. அரசு ஊழியர்களையோ, அரசு வாகனங்களையோ பரப்புரைக்கு பயன்படுத்தக் கூடாது.
“அனைத்து மாநில தேர்தல்களிலும், வாக்குப்பதிவுக்கான நேரம் கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிக்கப்படும். வேட்புமனு தாக்கல் செய்பவர்களுடன் இருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். வீடு, வீடாக வாக்கு சேகரிக்க 5 பேர் மட்டுமே செல்லவேண்டும்” என்று புதிய கட்டுப்பாடுகளையும், அறிவிப்புகளையும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.
ஒரு கட்சி பொதுக்கூட்டம் நடத்தும் இடத்தை ஒட்டியுள்ள இடங்களில் இன்னொரு கட்சி பேரணி செல்வதை தவிர்க்க வேண்டும். ஒரு கட்சியினர் ஒட்டிய பரப்புரை அறிக்கைகளை மற்றும் விளம்பரங்களை இன்னொரு கட்சியினர் அகற்ற அல்லது கிழிக்கக் கூடாது
வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் கொடுப்பது, வாக்காளர்களை உணர்வுபூர்வமாக தூண்டிவிடுவது, ஆள்மாறாட்டம் செய்வது, வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்குள் வாக்கு சேகரிப்பது, வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணி நேரங்களுக்குள் பொதுக்கூட்டம் நடத்துவது, வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளை செய்வது போன்ற ‘ஊழல் நடவடிக்கைகளை‘ கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தவிர்க்க வேண்டும்.
மற்ற கட்சிகளின் பரப்புரைக் கூட்டங்களில் குழப்பம் விளைவிக்கக் கூடாது. அனுமதி பெறாமல் தனியார் இடங்களைப் பரப்புரைக்கு பயன்படுத்தக் கூடாது.தொலைக்காட்சி, கேபிள் நெட்வொர்க், ரேடியோ போன்றவற்றில் பரப்புரை விளம்பரங்களை வெளியிட, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 3 நாட்களுக்கு முன்னதாகவே தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்.
30.8 லட்சம் வரை மட்டுமே ஒரு வேட்பாளர் சட்டமன்ற தேர்தலில் செலவிட வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில் 140 தொகுதிகளுக்கு ஏப்.6ல் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
அசாம் மாநிலத்தில் 126 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் மார்ச் 2 தேதி முதல் ஆரம்பமாகும்.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
வேட்புமனு தாக்கல் செய்யும் தேதி மார்ச் 12ம் முதல் மார்ச் 19 வரை. வேட்புமனு பரிசீலனை செய்யும் தேதி மார்ச் 20, வேட்புமனு திரும்ப பெற மார்ச் 22 தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
மே 2 ம் தேதி 5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களின் முடிவுகள் வெளியிடப்படும்
சாதி, மத, மொழி மற்றும் இன ரீதியாக வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பரப்புரையில் ஈடுபடக் கூடாது. கோயில், மசூதி, தேவாலயம் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் தேர்தல் பரப்புரை செய்யக்கூடாது.ஒரு கட்சி, மற்ற கட்சிகளை கொள்கை, செயல் திட்டங்கள், கடந்த கால செயல்பாடுகள் அடிப்படையில் விமர்சிக்கலாமே தவிர, தனி நபர்களின் சொந்த வாழ்க்கை குறித்த விமர்சனம் கூடாது.
அரசு விழாக்களில் அமைச்சர்கள் வாக்கு சேகரிக்கும் முயற்சியில் ஈடுபடக் கூடாது. வாக்குச்சாவடிக்கோ, வாக்கு எண்ணும் இடத்திற்கோ அமைச்சர்கள் செல்ல அனுமதியில்லை. வேட்பாளராகவோ, வாக்காளராகவோ அல்லது கட்சியின் அதிகாரபூர்வ ஏஜெண்டாகவோ இருந்தால் மட்டுமே வாக்குச்சாவடிக்கோ, வாக்கு எண்ணும் இடத்திற்கோ அமைச்சர்கள் செல்லலாம்.
உரிய ஆவணங்களின்றி அதிகளவில் பணம், தங்கம் போன்ற விலையுயர்ந்த பொருட்கள், பரிசுப்பொருட்களை எடுத்துச்செல்ல தடைவிதிக்கப்படும்.பொது மைதானங்கள், ஹெலிபேட் போன்றவற்றைப் பயன்படுத்த அனுமதிப்பதில் கட்சி பேதம் பார்க்கக் கூடாது.
கட்சித்தலைவர்களின் சிலைகள், அரசியல் கட்சிகளின் சின்னங்கள் போன்றவை மூடி மறைக்கப்படும்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பின்னர் தேர்தல் முடியும் வரை, ஆட்சியில் உள்ள அரசு புதிய நலத் திட்டங்களை அறிவிக்கக் கூடாது. ஆனால், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த எந்த தடையும் இல்லை.புதிய கட்டிடங்கள், மேம்பாலங்கள், சாலைகள் திறப்புவிழா போன்ற ரிப்பன் வெட்டும் நிகழ்ச்சிகள் எதுவும் அரசால் நடத்தப்படக்கூடாது.
5 மாநிலங்களில் மொத்தம் 2.7 லட்சம் வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது
5 மாநிலங்களில் மொத்தம் 824 தொகுதிகளில் 18.66 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்
தமிழத்தில் மொத்தம் 88,936 வாக்கு செலுத்தும் மையங்கள் அமைக்கப்படவுள்ளன. கடந்த தேர்தலை விட 34.73 சதவிகிதம் வாக்குச்சாவடிகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன.
டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதிகளை அறிவித்து வருகிறார்.
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பல்வேறு கோரிக்கைகளை ஆளும் அதிமுக கட்சியும், எதிர்க்கட்சியான திமுகவும் சமர்பித்துள்ளன
சட்ட மன்ற தேர்தல் தேதியை குறித்து அறிவிப்பு வெளியிட இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, அறிவிப்பு வெளியிடும் அரங்கிற்கு விரைந்துள்ளார்.
2020 நவம்பரில் நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பிறகு, இந்த மாநிலங்களுக்கான தேர்தல்கள் கொரோனா தொற்று அச்சத்திற்கு மத்தியில் நடத்தப்பட உள்ளது. பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஏற்படுத்தப்பட்ட அதே நெறிமுறையை தேர்தல் ஆணையம் செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் 62.6 மில்லியன் மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். எனவும் சோழிங்கநல்லூர் சட்டசபையில் 694,845 வாக்காளர்களுடன் அதிக தகுதி வாய்ந்த வாக்காளர்கள் உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
தமிழகத்திற்கு இதுவரை மொத்தம் 15 சட்டமன்ற பொதுத்தேர்தல்கள் நடைபெற்று உள்ளன. இந்த ஆண்டு (2021) நடை பெற இருப்பது 16 சட்டமன்ற பொதுத் தேர்தல் ஆகும்.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் மார்ச் 5-ம் தேதி வரை விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.
தேர்தல் நடக்கவுள்ள தமிழகம், மற்றும் கேரளா உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கும் பாதுகாப்பு பணிகளுக்காக துணை ராணுவத்தினர் அனுப்பப்பட உள்ளனர் என்று கடந்த திங்கள் கிழமை இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
தமிழகத்தில் எதிர்வரும் சட்ட மன்ற தேர்தல்களில் வெற்றி பெற ஆர்வமாக உள்ள திமுக அக்கட்சியின் சின்னமான ‘உதய சூரியன்’ மீது போட்டியிட விரும்புவர்களுக்கு விண்ணப்ப படிவங்களை கடந்த பிப்ரவரி 17 முதல் விநியோகிக்கத் தொடங்கியுள்ளது. விண்ணப்ப படிவங்களை ஒப்படைக்கும் பிநடந்து வருகிறது.
மேற்கு வங்கத்தில் 294 இடங்களுக்கும், தமிழ்நாட்டில் 234 இடங்களுக்கும், கேரளாவில் 140 இடங்களுக்கும், அசாமில் 126 இடங்களுக்கும், புதுச்சேரியில் 30 இடங்களுக்கும் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, மற்றும் அசாம் ஆகிய 4 மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரேதேசத்திற்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு அறிவிக்க உள்ளது.