இன்று தமிழகம், கேரளம், அசாம், புதுவை மற்றும் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற அம்மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அதிகாரப்பூர்வமான தகவல்களை எங்கே பெறுவது என்பதில் அனைவருக்கும் குழப்பம் நீடிக்கும். எனவே உங்களின் கவலைகளை போக்குவதற்காக தேர்தல் ஆணையம் இணையம் மற்றும் செயலியை ஏற்கனவே அறிமுகம் செய்திருக்கிறது. அதில் எப்படி முடிவுகளை பார்ப்பது என்பதை கீழே காண்போம்.
கொரோனா தொற்றுக்கு மத்தியில் நடைபெற்ற தேர்தல் என்பதால் வாக்கு எண்ணும் மையங்களுக்குள் செல்ல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தேர்தல் ஆணையம். தேர்தல் முடிவுகளுக்கு பிறகு வெற்றிக் கொண்டாட்டங்களுக்கும் தடை விதித்திருப்பதால் இந்த டிப்ஸ் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
Tamil Nadu Election Results 2021 Live: தபால் வாக்குகளில் திமுக முன்னிலை
தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வமான இணைய தளமான eciresults.nic.in-க்கு சென்று நீங்கள் முடிவுகளை அறிந்து கொள்ளலாம். அல்லது Voter Helpline App என்ற செயலியை கூகுள் ப்ளேஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். உள்ளீடாக நீங்கள் உங்களின் செல்போன் எண்ணை தர வேண்டும். அது உங்களுக்கு ஒ.டி.பி. ஒன்றை அனுப்பும். பிறகு ஹோம் ஸ்க்ரீனில் நீங்கள் எந்த மாநிலங்களின் தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ள வேண்டுமோ அறிந்து கொள்ளலாம். இந்த செயலிகள் யூசர் ஃப்ரெண்டிலியாக இருப்பது உங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி அளிக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil