Advertisment

187 இடங்களில் உதயசூரியன்; எத்தனை இடங்களில் போட்டியிடுகிறது இரட்டை இலை?

கடந்த முறை தேர்தலில் நின்ற சில எம்.எல்.ஏக்களுக்கும், முக்கிய பங்காற்றிய அமைச்சர்களுக்கும் இடம் அளிக்கப்படவில்லை

author-image
WebDesk
New Update
Assembly Elections 2021 : AIADMK vs DMK alliances and seat sharing

Assembly Elections 2021 : AIADMK vs DMK alliances and seat sharing : நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் பல்முனை போட்டிகள் நிலவுவதற்கான கூறுகள் அதிகமாகவே இருக்கின்றது. கருணாநிதி மற்றும் ஜெயலலிதா என்று இரண்டு பெரிய தலைவர்கள் இல்லாமல் நடக்கும் இந்த தேர்தலில் அதிமுக மற்றும் திமுகவின் போட்டிகள் எவ்வாறு இருக்கும்? அவர்களின் கூட்டணிகள், தொகுதிப்பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் குறித்து ஒரு சிறப்பு பதிவு.

Advertisment

திமுகவும் கூட்டணி கட்சிகளும்

பொதுத்தேர்தலில் இருந்தே தன்னுடைய கூட்டணி கட்சிகளை சிந்தாமல் சிதறாமல் பாதுகாத்து வருகிறது திமுக. காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் என்று கட்சிகளுக்கு பேச்சுவார்த்தை மூலமாக இடங்கள் ஒதுக்கப்பட்டுவிட்டன. அதே நேரத்தில் எந்தெந்த கட்சிகள் எந்தெந்த சின்னங்களில் போட்டியிடுகிறார்கள் என்பதும் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. ஆனால் வேட்பாளர்கள் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள், சி.பி.ஐ., சி.பி.ஐ (எம்), மதிமுக, மற்றும் விசக கட்சிகளுக்கு தலா ஆறு தொகுதிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு மூன்று தொகுதிகள், மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 தொகுதிகள் என்று இதுவரை தொகுதி பங்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆதி தமிழர் பேரவை, தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் மக்கள் விடுதலை கட்சி போன்ற சிறிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளது திமுக. நான்கு சிறிய கட்சிகள் மற்றும் வைகோவின் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளன. 60 தொகுதிகள் கூட்டணிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 47 தொகுதிகள் தவிர்த்து 187 தொகுதிகளில் உதயசூர்யன் சின்னத்தில் தமிழக மதசார்பற்ற கூட்டணி போட்டியிடுகிறது.

அதிமுகவும் - இறுதியில் பிரிந்து சென்ற தேமுதிகவும்

அதிமுக, பாஜக, தமாக, பாமகவுடன் கூட்டணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்ட தேமுதிக கடைசியில் கூட்டணியில் இருந்து விலகியது. உள் ஒதுக்கீட்டில் 10.5% வன்னியர் சமூகத்திற்கு தற்காலிகமாக ஒதுக்கப்பட்ட பிறகு பாமகவுடனான கூட்டணி உறுதி செய்யப்பட்டது. 23 இடங்களில் பாமகவிற்கு போட்டியிடும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

பாஜகவிற்கு எத்தனை சீட்டுகள் ஒதுக்கப்படும் என்று நிலவிய குழப்பத்திற்கு நடுவே, மார்ச் 5ம் தேதி இரவு பாஜகவிற்கு 20 சீட்டுகள் ஒதுக்கப்பட்டு இரு கட்சியினருக்கும் இடையே ஒப்பந்தம் உறுதியானது.

8 ஆண்டுகளுக்கு பிறகு 2019ம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது அதிமுகவுடன் கூட்டணி வைத்தது தேமுதிக. அந்த கூட்டணி சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

171 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. இதில் கடந்த முறை தேர்தலில் நின்ற சில எம்.எல்.ஏக்களுக்கும், முக்கிய பங்காற்றிய அமைச்சர்களுக்கும் இடம் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் 12 தொகுதிகளில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. தமிழக மாநில காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. 185 முதல் 190 வரையிலான இடங்களில் இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Dmk Admk Tamil Nadu Assembly Elections 2021 Dmk Vs Aiadmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment