தேர்தல் நேரத்தில் ராமர் கோவில் விவகாரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு… நிலத்தை தரக் கோரி நீதிமன்றத்தில் மனு…

0.313 ஏக்கர் நிலத்தை தவிர்த்து மற்ற நிலங்கள் தங்களுக்கு வேண்டும் ராம ஜென்ம பூமி நியாஸ் வேண்டுகோள்

By: Updated: January 30, 2019, 09:58:41 AM

Ayodhya land dispute issue : தேர்தல் நேரத்தில் ராமர் கோவிலின் நிலத்தினை திருப்பித் தரக் கோரி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்திடம் மனுதாக்கல் செய்துள்ளது.  1992ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டதிற்கு பின்பு, அந்த மசூதி அமைக்கப்பட்ட இடம் யாருக்கு சொந்தமானது என்பது ரீதியாக பல்வேறு பிரச்சனைகளும் சர்ச்சைகளும் எழுந்துள்ளன.

சர்ச்சைக்குரிய நிலத்தைத் தவிர மற்ற நிலங்கள் வேண்டும்

தற்போது மத்திய அரசு, அயோத்தியில் அமைந்திருக்கும்  67.703 ஏக்கர் நிலத்தை, அந்நிலத்தின் உரிமையாளர்களிடமே திருப்பி அளிக்கக் கோரி மனு தாக்கல் செய்துள்ளது. அதில் 42 ஏக்கர் நிலமானது ராம ஜென்மபூமி நியாஸ் எனப்படும் ட்ரெஸ்டிற்கு சொந்தமானது. ராம ஜென்மபூமி நியாஸ் மத்திய அரசிடம் தங்களில் நிலத்தை திருப்பி அளிக்குமாறு கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, மத்திய அரசு இந்த முடிவிற்கு வந்துள்ளது.

பாபர் மசூதி இடிப்பிற்கு பின்பு, 1993ம் ஆண்டு முதல் 67.703 ஏக்கர் நிலமும் தற்போது நீதிமன்றக் கட்டுப்பாட்டில் உள்ளது. பாபர் மசூதி அமைக்கப்பட்டிருந்த 0.313 ஏக்கர் நிலத்தை தவிர்த்து மற்ற நிலங்கள் தங்களுக்கு வேண்டும் என்று அந்த மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டிக்கிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கின்ற நிலையில் ராமர் கோவில் விவகாரத்தை கையில் எடுத்துள்ளது மத்திய அரசு.

மூன்று மாநிலத் தேர்தல்களை நாடாளுமன்ற தேர்தலுடன் நடத்த பாஜக முடிவு

Get all the Latest Tamil News and Election 2020 News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest General Election 2019 Schedule by following us on Twitter and Facebook

Web Title:Ayodhya land dispute issue poll pressure on government to show action on ram temple

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X