90 கோடி வாக்களர்களின் தேர்தல் திருவிழா ! சில புதிய தகவல்கள் உங்களுக்காக...

கிரிமினல் வழக்குகள் பதியப்பட்ட 186 நபர்களை 2014ம் ஆண்டு தேர்தல் மூலமாக பாராளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்துள்ளனர் மக்கள்.

Biggest General Election 2019 :  2019ம் ஆண்டிற்கான மக்களவைத் தேர்தல் தேதிகளை நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. 7 கட்டமாக நடைபெறும் இந்த தேர்தலுக்கான வேட்பாளர்கள் மனுதாக்கல் முதல் தேர்தல் முடிவுகள் அறிவிப்பு வரை எந்தெந்த தேதிகளில் என்ன என்ன முக்கிய நிகழ்வுகள் அரங்கேற உள்ளன என்பதையும் அறிவித்துவிட்டன.

Biggest General Election 2019

900 மில்லியன்

900 மில்லியன் (90 கோடி) வாக்காளர்கள் இந்த முறை வாக்குப்பதிவு செய்ய உள்ளனர். 2014ம் ஆண்டிற்கான தேர்தலில் 815 மில்லியன் (81.5 கோடி) வாக்காளர்கள் வாக்கு பதிவு செய்தனர். இந்தியாவில் முதன்முறையாக தேர்தல் நடைபெற்ற போது சுமார் 173 மில்லியன் (17.3 கோடி) நபர்கள் வாக்குபதிவு செய்ய தகுதியானவர்களாக இருந்தனர்.

85 மில்லியன்

2014 முதல் 2019 வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 85 மில்லியன் (8.5 கோடி) புதிய வாக்காளர்கள் உருவாகியுள்ளனர்.

15 மில்லியன்

18 முதல் 19 வயது வரை உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 15 மில்லியன் ஆகும். வாக்களிக்க இருக்கும் வாக்களர்களில் மூன்றில் இரு பங்கினர் 35 வயதிற்கு குறைவானவர்கள்.

38,325

38,325 மூன்றாம் பாலினத்தவர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.

1.1 மில்லியன்

1.1 மில்லியன் மின் அணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இந்த தேர்தலுக்கு தேவைப்படுகின்றன.

8,251

8,251 வேட்பாளர்கள் கடந்த தேர்தலில் போட்டியிட்டனர். 3,626 கட்சிகள் களம் இறங்கியுள்ளன. இதில் 1,841 கட்சிகள் தேர்தல் ஆணையத்தால் அடையாளங் காணப்பட்டுள்ளன.

545 லோக் சபா இடங்களில் 2 இடங்கள் தவிர 543 தொகுதிகளுக்கான தேர்தல்கள் நடைபெற உள்ளன.

கிரிமினல் வழக்குகள் பதியப்பட்ட 186 நபர்களை 2014ம் ஆண்டு தேர்தல் மூலமாக பாராளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்துள்ளனர் மக்கள்.

16 மில்லியன்

16 மில்லியன் லிட்டர் மதுபானங்கள் 2014ம் ஆண்டு தேர்தலின் போது கைப்பற்றப்பட்டன.

மேலும் படிக்க : மார்ச் 19ல் வேட்புமனுத் தாக்கல்! தமிழக தேர்தல் அட்டவணை முழு விவரம்!

Get all the Latest Tamil News and Election 2020 News at Indian Express Tamil. You can also catch all the latest Lok Sabha Election 2019 Schedule by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close