Bihar Election 2020 Nithish Kumar Tamil News : கடந்த செவ்வாய்க்கிழமை, மூன்று கட்டங்களாக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் முடிவுகளின்படி முன்னறிவித்த பெரும்பாலான வெளியேறும் கருத்துக் கணிப்புகளுக்கு எதிராக, பாஜக-ஜே.டி (யு) - (என்டிஏ) கூட்டணி பீகாரில் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளத் தயாராகி வருகிறது.
கோவிட் கட்டுப்பாடுகளின் தேவை, நடந்து முடிந்த பீகார் தேர்தல் வாக்கெடுப்பின் எண்ணிக்கையை மாலை வரை தள்ளியது. இறுதியாக, இரவு 11 மணியளவில் பரபரப்பு அதிகரித்த நிலையில், 243 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் ,கிராண்ட் அலையன்ஸ் பெற்ற 110 இடங்களுக்கு எதிராக மொத்தம் 125 இடங்களைப் பெற்று என்.டி.ஏ, பீகார் தேர்தலில் வெற்றிபெற்றது.
சமீபத்திய கணிப்புகளின்படி என்.டி.ஏ-ஐ பொறுத்தவரை, ஜே.டி (யு) 43 இடங்களுக்குச் சரிந்த போதிலும், நிதீஷ்குமார் 4.0 சாத்தியமான வெற்றியை எதிர்நோக்கியிருந்தார். ஆனால், 74 இடங்களைப் பெற்று கூட்டணியில் மிகப்பெரிய கட்சியாக பாஜக உயர்ந்துள்ளது.
தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு சிராக் பாஸ்வானின் தந்தை ராம் விலாஸ் பாஸ்வான் இறந்ததைத் தொடர்ந்து, சிராக் எல்.ஜே.பி கட்சியின் தலைமையை ஏற்றுக்கொண்டார். ஆனால், எல்.ஜே.பி போட்டியிட்ட 137 இடங்களில் ஒன்றை மட்டுமே வென்றது. அக்டோபர் 2000-ல் அக்கட்சி தொடங்கப்பட்டதிலிருந்து அதன் மோசமான செயல்திறன் இதுதான். ஆனால் பஸ்வான் கட்சி, சுமார் 75 இடங்களில் ஜே.டி.யுவின் வாய்ப்புகளைப் பெரிதும் பாதித்தது.
ஜே.டி.யுவை சேதப்படுத்தும் எல்.ஜே.பி-யின் "வேலையை" கச்சிதமாக முடித்துவிட்டதாகவும், சிராக் பாஸ்வானின் அரசியல் எதிர்காலம் "இப்போது பாஜகவைப் பொறுத்தது" என்றும் பீகாரில் உள்ள அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
பிரச்சாரத்தின்போது முதலமைச்சர் நிதீஷ் குமாருக்கு எதிரான தாக்குதல்களில் பாஸ்வான் இடைவிடாமல் நின்றார். கடந்த செவ்வாய்க்கிழமை வாக்குகள் எண்ணும்போதும் கூட அவர் விடவில்லை. “கடினமான காலங்களிலும் நான் தைரியத்தை இழக்கவில்லை. பீகாரின் பெருமைக்காகத் தனியாகத் தேர்தலில் போட்டியிடும் போதும் நான் பதற்றமடையவில்லை. ஆனால், 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோதும், மூன்று கூட்டணிகளின் உதவியைச் சிலர் நாடுகின்றனர்”என்று பாஸ்வான் இந்தி மொழியில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
நிதீஷ் குமார் கூட்டணிக்கு, மிகவும் பின்தங்கிய வகுப்பினர் (ஈபிசி) மற்றும் பெண் வாக்காளர்கள் "அமைதியான ஆதரவாளர்களாக" இருந்ததன் விளைவாகவே அவர் வெற்றிபெற்றிருக்கிறார். மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அடுத்த கேள்வி, முதலமைச்சராக அவரது எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதுதான். ஜே.டி.யூ மற்றும் பாஜகவினர், குறைந்தபட்சம் இப்போதைக்காவது அவர் தொடர்ந்து ஆட்சியில் இருப்பார் என்று உறுதியளித்துள்ளனர்.
"எங்களுடைய அமைதியான EBC மற்றும் பெண் வாக்காளர்களின் கருத்துக்கள் மற்றும் வெளியேறும் வாக்கெடுப்புகளில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்றாலும் அவர்களைப் பற்றி நாங்கள் எப்போதும் பேசிக் கொண்டிருப்போம்" என்று பீகார் ஓபிசி கமிஷன் முன்னாள் உறுப்பினர் ஜக்நாராயன் சிங் கூறினார்.
மூத்த ஜே.டி.யூ தலைவரும், பீகார் முன்னாள் EBC கமிஷனின் தலைவருமான உதய்காந்த் சவுத்ரி மூன்றாம் கட்டத்திற்கு முன்னர், EBC வாக்காளர்களில் பெரும்பாலோர் இன்னும் தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறார்கள் என்று கூறியிருந்தார். மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூட, தேசிய ஜனநாயகக் கூட்டணி, EBC மற்றும் பெண் வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கும் வரை, கிராண்ட் அலையன்ஸ் எதிரான நன்மையைப் பெற்றிருக்கும் என்பதை மீண்டும் வலியுறுத்தினார்.
அரசாங்க ஆளுகைக்கான புதிய யோசனைகள் மற்றும் கோவிட் நிர்வாகத்தில் சிறப்பான செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தாலும், சாலைகள் மற்றும் பாலங்களைக் கட்டியெழுப்புவதிலும், கிராமங்களுக்கு அதிகாரத்தைக் கொண்டுவருவதிலும் நிதீஷ் குமார் முன்பு செய்த நல்ல பணிகளே அதிகப்படியான வாக்காளர்களை ஈட்டியது என்பத்தைதான் இந்த 2020 சட்டமன்ற முடிவுகள் வலியுறுத்துகின்றது.
"எங்கள் தலைவர் நிதீஷ் குமார், வெளியேறும் வாக்கெடுப்பு முடிவுகளுக்குப் பிறகு பதவி நீக்கம் செய்யப்பட்டார். ஆனால், நல்லாட்சி என்பது எப்போதும் வெற்றியைக் கொடுக்கும் என்பதை அவர் மீண்டும் நிரூபித்துள்ளார். எந்தவொரு முதலமைச்சரும் மூன்று முறை மாநிலத்திற்குச் சேவை செய்த பின்னர் ஆட்சிக்கு எதிரான ஒருவித எதிர்ப்பை சந்திக்க நேரிடும். ஆனால் நிதீஷ் குமார், பிரதமர் நரேந்திர மோடியுடன் அதனை வெற்றிகரமாகப் போராடியுள்ளார்" என ஜே.டி (யு) தேசிய செய்தித் தொடர்பாளர் கே.சி. தியாகி கூறுகிறார்.
பீகாரின் முதல் முதலமைச்சர் டாக்டர் ஸ்ரீகிருஷ்ணா சிங்கின் பாதைகளைப் பின்பற்றியிருந்தாலும், நிதீஷ் குமார் தொடர்ந்து நான்காவது முறையாகத் தலைமை வகிக்க முடியும். ஆனால், சுதந்திரத்திற்கு முன்பு சிங் மாநிலத்தின் பிரதமராகப் பதவி வகித்திருந்தால் மட்டுமே அது சாத்தியமாகியிருக்கும்.
மேலும், 2010 மற்றும் 2020-ம் ஆண்டுகளின் இடையே நிதீஷ் குமார் ஆட்சியில் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. 2010-ம் ஆண்டில், அவருக்குக் கீழ் உள்ள என்.டி.ஏ, மொத்தம் 243 இடங்களில், 206 இடங்களை வென்றது. இதில் அவருடைய கட்சி மட்டும் 115 இடங்களில் வெற்றிபெற்றது. 2020-ம் ஆண்டில், ஓர் மூத்த அரசியல்வாதியால் கட்டளையிடப்பட்ட சூழ்நிலையை அவர் எதிர்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், ஜே.டி (யு), ஆர்.ஜே.டி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் இணைந்து அரசாங்கத்தை அமைப்பதற்கான எண்களைக் கொண்டிருப்பதால் நிதிஷ்குமாரைக் கையாள்வதில் பாஜக எச்சரிக்கையாக இருக்கும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. “நிதீஷ் குமாரைப் புண்படுத்தும் எதையும் பாஜக செய்யாது. நாங்கள் ஒரு இளைய கூட்டணியாக இருக்கலாம். ஆனால், அவருடைய தலைமையில்தான் தேர்தல் நடைபெற்றது. நிதீஷ் குமார் பாஜகவுக்கு இன்றியமையாததாகவே இருப்பார்” என்று ஜே.டி (யூ) தலைவர் ஒருவர் கூறினார்.
நிதீஷ் குமார் முதலமைச்சராக இருக்கும் அதே வேளையில், தேசிய கட்சி அரசாங்கத்தை அமைப்பதில் "ஒரு பெரிய நோக்கத்தைக் கொண்டிருக்கும்" என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன. "நிதீஷுடனான கடந்தகால அரசாங்கத்தைப் போல் இல்லாமல், பாஜக தன்னை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். பீகார் அரசியலை இருமுனை ஆக்குவதில் நாங்கள் கிட்டத்தட்ட வெற்றி பெற்றுள்ளோம். நிதீஷ்குமார் அரசியல் காட்சியில் இருந்து வெளியேறினால், அது பீகாரில் ஆர்ஜேடிக்கு எதிரான பாஜகவாக உருவெடுக்கும்” என்றும் அந்தத் தலைவர் கூறினார்.
இந்தத் தேர்தல் வலுப்படுத்தியது என்னவென்றால், என்.டி.ஏ-வின் “சமூக சேர்க்கை”, ஆர்.ஜே.டி பக்கம் இருந்த ஆட்சிக்கு எதிரான அலைகளை எவ்வாறு விஞ்சியது என்பதுதான்.
மேலும், ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி யாதவ் தனது 251 பொதுக் கூட்டங்கள் மூலம் வாக்காளர்களுடன் நன்கு இணைந்திருக்கிறார். பெரும் கூட்டத்தை ஈர்த்து, 10 லட்சம் வேலைவாய்ப்பு வழங்குவதாக அவர் அளித்த வாக்குறுதியுடன் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால், தன் கட்சியின் பாரம்பரிய முஸ்லீம்-யாதவ் பிட்ச் தவிர வேறு எதைக் கொண்டு வரும் என்ற கேள்வியையும் அவர் எதிர்கொண்டார்.
பீகாரில், அரசியலில் இரண்டு எதிர் துருவங்கள் ஒன்று சேரும்போது, தோற்பவர் எப்போதும் மூன்றாம் தரப்பு என்பதை என்.டி.ஏ மீண்டும் நிரூபித்திருக்கிறது. இது, கடந்த நான்கு சட்டமன்றத் தேர்தல்களில் பீகாரில் சோதிக்கப்பட்ட சூத்திரமாக மாறியுள்ளது. 2015-ம் ஆண்டு லாலு பிரசாத் மற்றும் நிதீஷ் குமார் ஆகியோர் ஒன்றாக இணைந்து பாஜக-வை தோல்வியடைய வைத்ததே அதற்கான சமீபத்திய உதாரணம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.