பா.ஜ.க கூட்டணி தமிழகத்தில் 30 இடங்களுக்கு மேல் பெறும் – அமித்ஷா

பெங்களூருவில் இரவு 8 மணிக்கு நடைபெற இருக்கும் ரோட் ஷோவில் கலந்து கொள்ள உள்ளார் அமித் ஷா. 

Tamil Nadu News Today Live Updates
Tamil Nadu News Today Live Updates

BJP leader Amit Shah Visits Tamil Nadu Today : தேர்தல் பிரச்சாரம் உச்ச கட்டத்தில் இருக்கின்ற நிலையில், தமிழக பாஜக தலைவர்களை ஆதரித்து பேசுவதற்காக இன்று தமிழகம் வந்துள்ளார் பாஜக தலைவர் அமித் ஷா. இன்று மூன்று இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் தங்களின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பேச உள்ளார் அமித் ஷா.

தூத்துக்குடி தொகுதியில், பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.  பாஜக வேட்பாளார்கள் எச்.ராஜா மற்றும் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரையும் ஆதரித்து சிவகங்கை மற்றும் கோவையிலும் வாக்கு சேகரிக்க உள்ளார் அமித் ஷா.

 

மேலும் படிக்க : இது என்னடா பாஜகவுக்கு வந்த புது சோதனை… கட்சித் தொப்பியை அணிய மறுக்கும் அமித் ஷா பேத்தி

அமித் ஷா தூத்துக்குடியில் தற்போது பேசி வருகிறார். அதன் லைவ்வை பார்க்க

Live Blog

15 மற்றும் 16 தேதிகளில் நரேந்திர மோடி மற்றும் நிதின் கட்கரி தமிழகம் வருகை புரிய உள்ளனர்.


17:12 (IST)02 Apr 2019

பா.ஜ.க திட்டங்கள்

ராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்யும், ராணுவ பூங்காக்களை நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். 

17:00 (IST)02 Apr 2019

அமோக வெற்றி

தமிழகத்தில் 30 இடங்களுக்கு மேல், பா.ஜ.க கூட்டணி அமோக வெற்றி பெறும் என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. நாம் இந்தத் தேர்தலில் வென்று எதிர்க்கட்சிகளை மோசமான தோல்வியடையச் செய்ய வேண்டும். 

16:58 (IST)02 Apr 2019

2 மத்திய அமைச்சர்கள்

தமிழகத்தை சேர்ந்த இருவரை பா.ஜ.க மத்திய அமைச்சராக்கியுள்ளது. 

16:57 (IST)02 Apr 2019

சிவகங்கையில் அமித்ஷா

பா.ஜ.க வேட்பாளர் ஹெச்.ராஜாவை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்  பா.ஜ.க தலைவர் அமித்ஷா 

15:29 (IST)02 Apr 2019

ஊழல்வாதிகளாக நாங்கள் இல்லை – அமித் ஷா

கனிமொழி,ராஜா, சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் போன்ற ஊழல்வாதிகளாக நாங்கள் இல்லை.  தமிழக வளர்ச்சிக்காக பாஜக பல்வேறு நலத்திட்டங்களை வருங்காலத்தில் இந்த அரசு கொண்டு வரும். 39+1 தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றி பெற வையுங்கள். உங்களின் வளர்ச்சியை நாங்கள் பார்த்துக் கொள்வோம் என்று தூத்துக்குடியில் தன் உரையை முடித்துக் கொண்டு தற்போது சிவகங்கை தொகுதி வேட்பாளரான எச். ராஜாவை ஆதரித்து பேசுவதற்காக புதுக்கோட்டை சென்றுள்ளார்.

15:22 (IST)02 Apr 2019

தமிழகத்திற்கு கொண்டு வந்த செயல் திட்டங்கள்

வருமானவரி வரம்பு தளர்த்தப்பட்டது குறித்தும், மீனவர்கள் நலன்களை பாதுகாக்க ஒரு குழுவையும், மதுரையில் எய்ம்ஸ் கட்ட, தேசிய நெடுஞ்சாலை 23,000 கோடி ரூபாய் என பாஜக செய்த சாதனைகளையும், தமிழகத்திற்கு ஒதுக்கிய நிதிகளையும் பட்டியலிட்டு வருகிறார் அமித் ஷா. 

15:19 (IST)02 Apr 2019

பாஜக ஒதுக்கிய நிதி

காங்கிரஸ் ஆட்சியில் 13வது நிதிக் கமிஷன் 94 ஆயிரம் கோடி ரூபாயை தமிழகத்திற்கு ஒதுக்கியது. பாஜகவோ தமிழ்நாட்டிற்கு 16வது நிதிக்குழு அதைவிட அதிக அளவில் நிதி  ஒதுக்கியுள்ளது. 

15:17 (IST)02 Apr 2019

காஷ்மீரை விட்டுத் தரமாட்டோம்

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் காஷ்மீரில் இருக்கும் சிறப்பு சட்டத்தினை வாபஸ் செய்வோம் என்று கூறியுள்ளனர். ஆனால் காஷ்மீரை நாங்கள் எப்போதும் விட்டுத்தர மாட்டோம். 

15:15 (IST)02 Apr 2019

திமுகவும் காங்கிரஸூம் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசி வருகிறார்கள்

மொத்த நாடும் பாகிஸ்தான் மீது புல்வாமா தாக்குதலால் மிகுந்த கோபத்துடன் இருக்க திமுகவும் காங்கிரஸூம் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசி வருகின்றார்கள்.

மதியம்  புதுக்கோட்டையில் எச்.ராஜாவிற்கு ஆதரவாக பிரச்சாரம்.  மாலை 6 மணிக்கு, கோவை சிவானந்தா காலனியில் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக பிரச்சாரம்.  அதை முடித்தவுடன் பெங்களூருவில் இரவு 8 மணிக்கு நடைபெற இருக்கும் ரோட் ஷோவில் கலந்து கொள்ள உள்ளார் அமித் ஷா.

Get the latest Tamil news and Election news here. You can also read all the Election news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bjp leader amit shah visits tamil nadu today and campaigns for bjp candidate tamilisai soundararajan

Next Story
இந்தியாவின் நம்பர்.1 பணக்காரர்… ஆச்சர்யமூட்டும் சில தகவல்கள்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com