Advertisment

BJP TMC clash : டெல்லியின் பொறுப்பற்ற தலைவர்களால் மேற்கு வங்கத்தின் பாரம்பரியம் சேதமடைந்துள்ளது - மம்தா கடும் விமர்சனம்

தாக்குதல் மூலமும் எங்களை பயமுறுத்திவிடலாம் என மம்தா பானர்ஜீ நினைக்கிறார் - அமித் ஷா

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
BJP TMC clash

BJP TMC clash

Santanu Chowdhury

Advertisment

BJP TMC clash : 7ம் மற்றும் இறுதி கட்ட நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற 19ம் தேதி நடைபெறுவதை ஒட்டி, அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று கொல்கத்தா பல்கலைக்கழக சாலையில் அமித் ஷா நடத்திய பொதுக்கூட்டத்தின் போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணியினருக்கும், பாஜகவினருக்கும் கடுமையான தள்ளு முள்ளு ஏற்பட்டது.

கல்கத்தா பல்கலைக் கழகம் சாலை மற்றும் பிந்தன் சாரணி சாலையில் அமைந்திருக்கும் பண்டித் ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் கல்லூரிக்கு அருகே கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பாட்டில்கள், செங்கல்கள், கற்கள் என கையில் கிடைத்ததை வைத்து ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி தாக்கியுள்ளனர். சிலர் படுகாயம் அடைந்த நிலையில், காவல்துறையினர் அமித் ஷாவின் பிரச்சாரத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

இந்த கலவரத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த பிரச்சனைகளுக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

BJP TMC clash - வீடியோ

மேலும் படிக்க : தேசிய பாதுகாப்பு முதல் காஷ்மீர் மக்களின் பிரச்சனை வரை ! என்ன சொல்கிறார் அமித் ஷா ?

இந்த தாக்குதலை யார் முதலில் துவங்கியது என்ற கேள்விக்கு மட்டும் பதில் கிடைக்கவே இல்லை. திரிணாமுல் காங்கிரஸார் பாஜகவை குறை சொல்கிறார்கள். பாஜகவினர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரை குறை சொல்கின்றார்கள்.

கல்லூரி சாலை வளாகத்திற்குள் சென்ற போது பாஜகவினர் தான் தண்ணீர் பாட்டில்களை எடுத்து தாக்கிக் கொண்டிருந்தனர். செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் மீதும் தண்ணீர் பாட்டில்கள் வீசப்பட்டது.

BJP TMC clash - தலைவர்களின் கருத்துகள்

இந்த தாக்குதலின் காரணமாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜீ மற்றும் அமித் ஷாவிற்கு மத்தியில் தீவிரமான கருத்தும்மோதல்கள் ஏற்பட்டுள்ளது.

மோடி இது குறித்து பேசுகையில் “ஜனநாயகம் இங்கு சிக்கித் தவிக்கின்றது. பாஜகவா, திரிணாமுல் காங்கிரஸா, மத்திய அரசா அல்லது மாநில அரசா என்பது இப்போது பிரச்சனையில்லை. ஆனால் வங்க மக்கள், வங்க மாநில ஆட்சியினால் பெரிய அளவில் பாதிக்கப்படுள்ளனர்” என்று கூறியுள்ளார்.

அமித் ஷாவோ இந்த நாளை ஜனநாயத்தின் கருப்புப் பக்கம் என்று கூறியுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் எங்களின் வளர்ச்சியினை கலவரத்தின் மூலம் தடுத்து நிறுத்திவிடலாம் என்று நினைக்கின்றார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், கலவரத்தின் மூலமும் தாக்குதல் மூலமும் எங்களை பயமுறுத்திவிடலாம் என மம்தா பானர்ஜீ நினைக்கிறார். பாஜக மேற்கு வங்கத்தில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுவிடும் என்ற பயம் மம்தாவிற்கு. எங்களுடைய கட்சித் தொண்டர்கள், செய்தியாளர்கள் இந்த தாக்குதல் மூலம் பலத்த காயம் அடைந்துள்ளனர். ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமே இல்லை என்றும் அவர் மேற்கோள் காட்டினார்.

நேற்று நள்ளிரவில், தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையம், கொல்கத்தாவில் நடைபெற்ற தாக்குதல்கள் குறித்து முறையே இரண்டு கட்சிகளும் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மம்தாவின் பதில் தாக்குதல் : டெல்லியின் பொறுப்பற்ற அரசியல்வாதிகளால் ஏற்பட்ட விளைவுகள் இவை என குற்றச்சாட்டு

பதிலுக்கு மம்தா பானர்ஜியும் “வெளியாட்கள் மேற்கு வங்கத்திற்குள் நுழைந்து தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கி ஆதாயம் தேடுகின்றார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். வித்யாசகர் கல்லூரியில் இருந்து பேசிய அவர், மொத்த கல்லூரியும் இந்த தாக்குதலால் நாசமடைந்துள்ளது, வித்யாசகரின் சிலை முற்றிலும் சேதமடைந்துள்ளது.

இரண்டு வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டதோடு, மாணவர்களும் தாக்கப்பட்டுள்ளனர். என் வாழ்நாளில் இவ்வளவு கீழ்த்தரமான நிகழ்வினை கண்டதே இல்லை” என்று கூறியுள்ளார்.

ராஜஸ்தான் மற்றும் பிஹாரில் இருந்து குண்டர்களை கொண்டு வந்து பாஜக இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. அமித் ஷாவுக்கு கல்கத்தா பல்கலைக் கழகம் மற்றும் வித்யாசாகர் கல்லூரியின் அருமை பற்றி என்ன தெரியும் ? பாஜக ஏன் கல்வி நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துகிறது என்றும் கேள்வி எழுப்பினார்.

வித்யாசாகரின் 200வது பிறந்தநாள் விழாவை கொண்டாடினோம் நாங்கள். ஆனால் டெல்லியில் இருந்து வந்த பொறுப்பற்ற தலைவர்களோ மேற்கு வங்கத்தின் தனிச்சிறப்பினை அழித்துவிட்டனர் என்றும் மம்தா பானர்ஜீ கூறியுள்ளார்.

கல்லூரி சாலை வளாகத்தில் 6 மணிக்கு பிறகு, அமித் ஷா வருகை தந்த பிரச்சார வாகனத்தைப் பார்த்து மாணவர்கள் ”கோ பேக்” என்றும், சௌகிதார் திருடன் என்றும் கோஷமிட்டனர். பாஜகவினர் பதிலுக்கு ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் எழுப்பினர்.

அமித் ஷா புகைப்படம் தாங்கிய பதாகை காவல்துறையினர் வைத்திருந்து பாதுகாப்பு வளையத்திற்கு அருகே யாராலோ தூக்கி வீசப்பட்டது. ஏ.பி.வி.பி மற்றும் பாஜகவினர் மாணவர்களை தாக்கத் துவங்கினர். சிறிது நேரத்தில் கலவரம் மிகப் பெரிய அளவில் உருவெடுத்தது. பிந்தன் சாரணி சாலையில் அமைந்துள்ள வித்யாசாகர் கல்லூரில் 7 மணிக்குப் பிறகு கலவரம் மூண்டது.

Bjp Amit Shah Tmc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment