/tamil-ie/media/media_files/uploads/2018/12/IMG-20181214-WA0006.jpg)
by election dmk candidates name
by election dmk candidates name : திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பட்டியல் அதிகாரபபூர்வமாக வெளியாகியுள்ளது.
4 தொகுதி இடைத்தேர்தல்:
வரும் 18ம் தேதி தமிழகத்தில் நடக்கும் லோக்சபா தேர்தலுடன் காலியாகவுள்ள 22 சட்டமன்ற தொகுதிகளில் 18க்கு மட்டுமே இடைத்தேர்தல் நடக்கிறது.அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணமடைந்ததால் அந்த தொகுதியும் காலியானது.
இந்நிலையில் கடைசி 7 வது கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்கும் மே 19ம் தேதி இந்த 4 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதற்காக வேட்பு மனு தாக்கல் வரும் 29ம் தேதி தொடங்குகிறது. 30ம் தேதி மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. வாபஸ் பெற கடைசி நாள் மே 2 ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டது.
ஆட்சியைத்தக்கவைத்துக்கொள்ள அதிமுக குறைந்தபட்சம் 6 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஒருவேளை 20-க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக வெல்லும் பட்சத்தில் அது அதிமுக ஆட்சிக்கு ஆபத்தாக முடியும் வாய்ப்பு உள்ளது.இந்நிலையில், 4 தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர்கள் பெயர் பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார்.
திமுக வேட்பாளர்கள் பட்டியல்.
அரவக்குறிச்சியில் – முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.
திருப்பரங்குன்றம் – டாக்டர் சரவணன்
ஒட்டப்பிடாரம் – காசி விஸ்வநாதன்
சூலூர் – முருகேசன்.
டாக்டர் சரவணனும், செந்தில் பாலாஜியும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைத்ததால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற செந்தில் பாலாஜி, தினகரன் அணியில் சேர்ந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.