Advertisment

Election 2019: வேட்புமனுத் தாக்கலுக்கு நாளை கடைசி நாள்- முக்கிய வேட்பாளர்கள் இன்று மனுத் தாக்கல்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சென்னையில் தனது பிரச்சாரத்தை துவங்குகிறார். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டிருக்கிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
kanimozhi, karti p.chidambaram and Key candidates filing nominations

Election Campaign Live Updates: எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பரபரப்பான பிரச்சாரத்தை அனைத்துக் கட்சிகளும் தொடங்கிவிட்டன. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சென்னையில் தனது பிரச்சாரத்தை துவங்குகிறார். தென் சென்னை, வட சென்னை, மத்திய சென்னை ஆகிய மூன்று தொகுதி வேட்பாளர்களையும் ஆதரித்து, தொடர்ந்து 3 நாட்களுக்கு தனது பிரச்சாரத்தைத் தொடர்கிறார்.

Advertisment

இதற்கிடையே தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் திருக்கழுக்குன்றத்தில் தனது பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்.

 

Live Blog

Election 2019 LIVE UPDATES: CM Edappadi K Palaniswami campaign at chennai: முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையில் பிரசாரம்



























Highlights

    14:00 (IST)25 Mar 2019

    வேட்புமனுத் தாக்கலுக்கு நாளை கடைசி நாள்: முக்கிய வேட்பாளர்கள் இன்று மனுத் தாக்கல்

    ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் தமிழ்நாட்டில், வேட்புமனுத் தாக்கல் செய்ய நாளை (மார்ச் 26) கடைசி நாள். இதையொட்டி இன்று முக்கிய வேட்பாளர்கள் பலர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

    தூத்துக்குடியில் போட்டியிடும் விஐபி வேட்பாளர்களான கனிமொழி (திமுக), தமிழிசை (பாஜக) ஆகிய இருவரும் அடுத்தடுத்து வேட்புமனுத் தாக்கல் செய்தனர். முன்னதாக தூத்துக்குடி மாவட்ட திமுக முன்னாள் செயலாளரான மறைந்த என்.பெரியசாமி நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார் கனிமொழி.

    தென்காசியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் டாக்டர் கிருஷ்ணசாமி, மதுரையில் அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன், திருச்சியில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசர், சிவகங்கையில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் ஆகியோரும் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

    13:13 (IST)25 Mar 2019

    இரட்டை இலை சின்னத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி:

    புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தென்காசி தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டியிடுவதாக முதலில் கூறியிருந்தார். ஆனால் இன்று தனது நிலைப்பாடை மாற்றிக்கொண்டு, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டால், வெற்றிவாய்ப்பு அதிகம் என ஆளும்தரப்புக்கு கிடைத்த புலனாய்வு அறிக்கையைத் தொடர்ந்து கிருஷ்ணசாமி தனது நிலையை மாற்றிக்கொண்டதாக தெரிகிறது.

    ஈரோடு தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டியிடுவதாக கூறியிருந்த மதிமுக, நேற்று உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக நிலைப்பாடை மாற்றியது குறிப்பிடத்தக்கது. அதேபோல விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிட்டபோதும், அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் விழுப்புரத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதும் கவனிக்கத்தக்கது.

    12:20 (IST)25 Mar 2019

    குக்கர் சின்னம் வழங்க முடியாது: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் வாதம்

    டிடிவி தினகரனை துணைப் பொதுச்செயலாளராகக் கொண்ட அமமுக.வுக்கு குக்கர் சின்னம் வழங்க எதிர்ப்பு தெரிவித்து இன்றைய விசாரணையில் தேர்தல் ஆணையம் வாதிட்டது. ‘டிடிவி தினகரன் தனது கட்சியை பதிவு செய்யவில்லை. எனவே பதிவு செய்யாத கட்சிக்கு சின்னம் ஒதுக்கீடு செய்ய முடியாது’ என குறிப்பிட்டனர் தேர்தல் ஆணைய வழக்கறிஞர்கள்.

    அப்போது, ‘குக்கர் சின்னம் ஏன் வழங்கக்கூடாது?’ என்பதற்கு விரிவான காரணங்களை நீதிபதிகள் கேட்டனர். அதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில் பதில் கூறவில்லை. நாளை காலை இதற்கான பதிலை தெரிவிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    12:05 (IST)25 Mar 2019

    குக்கர் வழக்கு: இன்று உத்தரவு

    இரட்டை இலை சின்னம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இடைகால நடவடிக்கையாக தங்களுக்கு குக்கர் சின்னம் கேட்டு டிடிவி தினகரன் தரப்பு முறையிட்டது. அது தொடர்பாக இன்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    11:24 (IST)25 Mar 2019

    ப.சிதம்பரம் குழு தேர்தல் அறிக்கை தயாரிப்பு

    மக்களவைத் தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் ப.சிதம்பரம் குழு தயாரித்துள்ள தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இறுதி செய்ய உள்ளார். 

    11:05 (IST)25 Mar 2019

    நிரந்தர சைக்கிள் சின்னம் கேட்டு ஜி.கே.வாசன் முறையீடு

    மக்களவைத் தேர்தலில் த.மா.க-வுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தச் சின்னத்தை நிரந்தரமாக தங்கள் கட்சிக்கு ஒதுக்க சொல்லி உயர் நீதிமன்றத்தில் ஜி.கே.வாசன் முறையீடு செய்துள்ளார். 

    10:46 (IST)25 Mar 2019

    3 தொகுதி தேர்தல் - மார்ச் 28-ல் விசாரணை

    தி.மு.க-வின் மனுவை ஏற்று திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நடத்தக் கோரும் வழக்கை விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவிப்பு.  

    10:43 (IST)25 Mar 2019

    தேர்தலில் போட்டியிடவில்லை - கமல்

    மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்களை ஆதரித்து ஊர் ஊராக பரப்புரை செய்யவிருப்பதால், அதற்கு எனக்கு நேரம் வேண்டும். ஆகவே இந்தத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை என ம.நீ.ம தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். 

    10:38 (IST)25 Mar 2019

    பாரிவேந்தர் வேட்பு மனு தாக்கல்

    தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றிருக்கும், ஐ.ஜே.கே கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் பெரம்பலூர் மக்களவை தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். 

    10:26 (IST)25 Mar 2019

    மீனவர்களுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

    காஞ்சிபுரம் பிரச்சாரத்தின் போது மீனவ மக்களை சந்தித்த ஸ்டாலின், மீனவ மக்களின் நலனைப் பாதுகாக்கும் திட்டங்களை அமல் படுத்துவோம் என்றார். 

    10:20 (IST)25 Mar 2019

    காஞ்சிபுரம் - பட்டிபுலம் பகுதியில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்

    காஞ்சி மக்களவைத் தொகுதி வேட்பாளர் க.செல்வத்தை ஆதரித்து, மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்துக் கொண்டிருக்கிறார். திருப்போரூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளருக்கும் அவர் வாக்கு சேகரித்தார். 

    10:05 (IST)25 Mar 2019

    இறுதி கட்டத்தை எட்டும் வேட்பு மனு தாக்கல்

    நாளையுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைவதால், இன்று பெரும்பாலான வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    10:01 (IST)25 Mar 2019

    ஓசூர் அ.ம.மு.க வேட்பாளர்

    ஓசூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.ம.மு.க வேட்பாளராக புகழேந்தி போட்டியிடுவார் என டி.டி.வி தினகரன் அறிவித்துள்ளார். 

    09:53 (IST)25 Mar 2019

    நெல்லை அ.ம.மு.க வேட்பாளர் மாற்றம்

    திருநெல்வேலி தொகுதியின் அ.ம.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த ஞான அருள்மணி தற்போது மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மைக்கேல் ராயப்பன் அ.ம.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

    2019 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பிரசாரத்தை வேகப்படுத்தியிருக்கின்றன. முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையிலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருக்கழுக்குன்றத்திலும் இன்று பிரசாரத்தை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
    Edappadi K Palaniswami M K Stalin General Election
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment