Advertisment

பாதுகாப்புத் துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பயன்படுத்தப்பட்ட தேசத்துரோக தண்டனை சட்டப்பிரிவு 124ஏ ரத்து செய்யப்படும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Congress 2019 Election Manifesto

Congress 2019 Election Manifesto

Congress 2019 Election Manifesto : நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி காங்கிரஸ் சார்பில் நேற்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் பாதுகாப்புத்துறை சம்பந்தமான பல்வேறு முக்கிய அம்சங்களை முன்வைத்திருந்தது காங்கிரஸ் கட்சி.

Advertisment

குறிப்பாக காஷ்மீர் மற்றும் இதர வடகிழக்கு மாநிலங்களில் இன்று வரை நடைமுறையில் இருக்கும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் ( Armed Forces (Special Powers) Act), அமைதி குறைவான பகுதிகளுக்கான சட்டம், தேசத்துரோக தண்டனைச் சட்டப்பிரிவு 124ஏ, மற்றும் குற்றவியல் அவதூறு சட்டம் ஆகியவற்றை மறு பரிசீலனை செய்து மாற்றங்கள் மற்றும் ரத்து ஆகியவறை கொண்டு  வருவது தொடர்பாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆணையம் பாராளுமன்றத்தின் கீழ் செயல்படும்

54 பக்க தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்த மற்றொரு முக்கியமான பாதுகாப்பு அம்சம், தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கு (National Security Adviser) தனி அலுவலகம் அமைத்துத் தரப்படும். தேசிய பாதுகாப்பு ஆணையம் (National Security Council) வருங்காலத்தில் பாராளுமன்ற கண்காணிப்பிற்கு கீழ் கொண்டுவரப்பட்டு, அதற்கான சட்ட திட்டங்கள் வரையறுக்கப்படும் என்றும் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியிருந்தார்.

National Security Advisory Board - விரிவு செய்யப்படும்

தேசிய பாதுகாப்பு ஆணையம் மற்றும் அரசாங்கத்திற்கு ஆலோனைகள் வழங்கும் குழுவாக தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியம் (NSAB (National Security Advisory Board)) விரிவுபடுத்தப்படும் என்றும், பல்வேறு துறைகளில் இருந்து அனுபவமிக்க வல்லுநர்கள் அங்கு பணியில் அமர்த்தப்படுவார்வகள் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Chief of Defence Staff

சீஃப் ஆஃப் டிஃபென்ஸ் ஸ்டாஃப் (Chief of Defence Staff ) என்ற பணியிடம் ஒன்று உருவாக்கப்படும். அதன் அதிகாரியாக செயல்படுபவர் அரசிற்கு பாதுகாப்புத்துறை சம்பந்தமாக தேவைப்படும் ஆலோசனைகளையும், தேசிய பாதுகாப்பு ஆணையத்திற்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்குவார்.

கார்கில் போர் நடைபெற்ற தருணத்தில் துணை பிரதமராக இருந்த எல்.கே. அத்வாணி Chief of Defence Staff  என்ற பணியிடத்தை உருவாக்க வேண்டும் என்பதில் திட்டவட்டமான இருந்தார். அவரைப் போலவே மறைந்த முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரும் இந்த பணியிடம் ஒன்றை உருவாக்கி பொறுப்புகளை அளிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

நீதிபதி ஜீவன் ரெட்டி கமிட்டியின் ஒப்புதலை இப்போதாவது நிறைவேற்றுமா காங்கிரஸ் ?

சீஃப் ஸ்டாஃப் ஏற்கனவே பலமுறை பாஜகவால் முன்னெடுப்பு செய்யப்பட்ட நடவடிக்கையாக இருந்தாலும், ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் தொடர்பான முடிவினை காங்கிரஸ் எடுப்பது இதுவே முதல் முறை.. மன்மோகன் சிங் ஆட்சியின் போது, அருணாச்சலப் பிரதேசத்தில் நீக்கப்பட்டது போலவே ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தை நீக்கவும் அல்லது திருத்தங்கள் மேற்கொள்ளவும் நீதிபதி ஜீவன் ரெட்டி தலைமையிலான கமிட்டியும் (Justice Jeevan Reddy Committee), நிர்வாக சீர்திருத்த ஆணையமும் (Administrative Reforms Commission (ARC)) வலியுறுத்தி வந்தன. ஆனால் அதற்கு மௌனத்தை மட்டுமே பதிலாக கொடுத்தார் மன்மோகன் சிங்.

சிதம்பரம் கருத்து

தேசிய பாதுகாப்பினை மனதில் வைத்துக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த அறிக்கையில், ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியில் நடைமுறையில் இருக்கும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் மற்றும் அமைதிக்குறைவான பகுதிகளுக்கான சட்டம் இரண்டிலும் தேவையான மாற்றங்களை கொண்டு வர முடிவு செய்துள்ளது காங்கிரஸ்.

AFSPA சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, பாதுகாப்புத் துறை மற்றும் மனித உரிமை என இரண்டிற்கும் முக்கியத்துவம் அளிக்கின்ற வகையில் அது மாற்றி அமைக்கப்படும். குறிப்பாக வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுதல், பாலியல் வன்முறை, மற்றும் துன்புறுத்தல் ஆகியவற்றிற்கு இனி இடம் இருக்காது” என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். வடகிழக்கு நீதிமன்றம் ஒன்று கட்டாயமாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு காணாமல் போவர்கள் பற்றிய விசாரணையை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. மனித உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இதில் சட்ட மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க : காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஹைலைட்ஸ்: நீட் தேர்வு ரத்து, பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு, 100 நாள் வேலை வாய்ப்பு இனி 150 நாள்!

முல்லப்பள்ளி ராமச்சந்திரன் - 2013ம் ஆண்டு கூறிய கருத்து

காங்கிரஸ் ஆட்சியின் கீழ் மத்திய இணை அமைச்சராக பதவி வகித்த முல்லப்பள்ளி ராமச்சந்திரன் ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் பற்றி பாராளுமன்றத்தில், பிப்ரவரி 27,2013ல் “ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்திருத்தம் என்பது கூடுமான வரையில் மனித்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என்றும் அதன் மாற்றங்கள் குறித்து அரசு ஆலோசனை செய்து வருகிறது என்றும் கூறியிருந்தார்.  நீதிபதி ஜீவன் ரெட்டி கமிட்டியும், நிர்வாக சீர்த்திருத்த ஆணையமும் அதைத்தான் வேண்டியது.

தேசத்துரோக தண்டனை சட்ட நீக்கம்

2012ம் ஆண்டு கார்டூன் வரைகலைஞர் அசீம் திரிவேதியை தேசத்துரோக வழக்கில் கைது செய்தது காங்கிரஸ் அரசு. ஆனால் 78 ஆண்டுகள் கழித்து, பிரிட்டிஷார் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்தை நீக்குவது குறித்து அறிக்கை வெளியிடுகிறது காங்கிரஸ். இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று காங்கிரஸ் தரப்பு தங்களின் நியாயத்தை முன்வைக்கின்றது.

முன்னாள் சட்ட அமைச்சர் கபில் சிபில் “பாஜக ஆட்சியில், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் படித்த மாணவர்கல் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்ட போது அதனை எதிர்த்தார் அவர். அந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

All India Congress General Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment