1 வருடம் இரவு, பகல் பாராமல் உருவாக்கப்பட்ட காங்கிரஸ் தேர்தல் அறிக்கை: கவனிக்க வேண்டிய அறிவிப்புகள் மற்றும் ரியாக்‌ஷன்ஸ்!

54 பக்கம் அடங்கிய தேர்தல் அறிக்கை

Congress manifesto Lok Sabha elections 2019
Congress manifesto Lok Sabha elections 2019

Congress manifesto Lok Sabha elections 2019 : 2019 லோக்சபா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் இன்று வெளியிட்டது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த அறிக்கையை வெளியிட்டார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை 54 பக்கங்களை உள்ளடக்கியது.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பு மேடையில் பேசிய ராகுல் காந்தி காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்த பல தகவல்களை பகிர்ந்துக் கொண்டார். குறிப்பாக தேர்தல் அறிக்கை எப்படி தயார் செய்யப்பட்டது? தேர்தல் அறிக்கையை தயார் செய்யும் 19 பேர்க் கொண்ட குழுவில் இடம் பெற்றிருந்தவர்கள் யார்? என பல தகவல்களை விவரித்தார்.

அத்துடன், 1 லட்சம் மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டு அவர்களின் அனைத்து தேவைகளையும் விரிவாக கேட்டறிந்த பின்னரே 54 பக்கம் அடங்கிய தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டது எனவும் கூறினார்.

Congress manifesto Lok Sabha elections 2019 highlights : காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஹைலைட்ஸ் மற்றும் தலைவர்களின் ரியாக்‌ஷன்ஸ்!

1. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட இழப்பை சரிசெய்யும் வகையில் “நியாய்” என்ற குறைந்தப்பட்ச வருவாய் திட்டம் அமல் படுத்தப்படும். இந்த இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும்.

2. 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக அதிகரிக்கப்படும்.

3. தமிழகம் உள்பட நீட் தோ்வை எதிா்க்கும் மாநிலங்களுக்கு நீட் தோ்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

4. புதிதாக தொழில் தொடங்குபவா்கள் 3 ஆண்டுகள் உரிமம் பெறத் தேவையில்லை.

5. புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்படும்.

6. இலங்கையுடனான மீனவா்களின் பிரச்சினை தீா்க்கப்படும்.

7. அரசு வேலை வாய்ப்பில் பெண்களுக்கு 33 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப்படும்.

8. அரசுத் தோ்வுக்கான கட்டணம், விண்ணப்பக் கட்டணம் ரத்து செய்யப்படும்.

9. விவசாயத்துறைக்கு தனி பட்ஜெட்.

10. விவசாயிகள் வாங்கிய கடனை திரும்ப செலுத்தவில்லை என்றால் அது கிரிமினல் குற்றமாக கருதப்படாது.

11. அரசு துறையில் காலியாக உள்ள 22 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.

12. தற்போது நடைமுறையில் இருக்கும் ஜிஎஸ்டி திட்டம் ரத்து செய்யப்படும். வரி விகிதம் ஒரே அளவில் இருக்கும்.

13. கல்விக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% நிதி ஒதுக்கப்படும். தனியார் காப்பீட்டு நிறுவனங்களை தவிர்த்து, பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் பலப்படுத்தப்படும்.நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை இலவச மற்றும் கட்டாய கல்வி அமல்படுத்தப்படும்.

இந்த திட்டங்கள் அனைத்து 5 முக்கிய அம்சமாக பிரித்து ராகுல் காந்தி வெளியிட்டார்.

தலைவர்கள் ரியாக்‌ஷன்ஸ்:

நிடி ஆயோக் அமைப்பின் முன்னாள் துணை தலைவர், அரவிந்த் பனகாரியா:

“நாட்டின் அடிப்படை பொருளாதாரம் புரியாமல் பேசுகிறார் ராகுல்.
ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளவர்கள் அதற்கான வருவாய் வழிமுறை குறித்து பேசவில்லை. ஐந்து கோடி பேருக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்க, ஆண்டுக்க, 3.6 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும். இது, நாட்டின் மாெத்த பட்ஜெட்டில், 13 சதவீதம் ஆகும். நாட்டின் பாதுகாப்புக்காக செலவிட்டடும் தொகையை விட அதிகம்.

அப்படி இருக்கையில், இவ்வளவு பெரிய தொகையை எப்படி ஒதுக்க முடியும். அதற்கான வருவாய் வழி என்ன என்பது குறித்து யாரும் வாய் திறக்கவில்லை. அடிப்படையில் இந்த அறிவிப்பை திட்டமாக மாற்றி செயல்படுத்துவது நடைமுறை சாத்தியமற்றது” என்று கூறினார்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஹைலைட்ஸ்: நீட் தேர்வு ரத்து, பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு, 100 நாள் வேலை வாய்ப்பு இனி 150 நாள்!

டி.கே.எஸ் இளங்கோவன் (திமுக செய்தித்தொடர்பாளர்)

காங்கிரசின் தேர்தல் அறிக்கை மோடி ஆட்சியின் சீர்கேடுகளை சரிசெய்யக்கூடியது. இதை கண்டிப்பாக மக்கள் வரவேற்பார்கள். தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் அனைத்தும் மக்களுக்காவே சிந்திக்கப்பட்டவை.

வைகைச்செல்வன் (அதிமுக செய்தித்தொடர்பாளர்)

காங்கிரசின் தேர்தல் அறிக்கை தேர்தல் அரசியலுக்கானது. இது வெறும் வாக்கு வங்கிகளுக்காக வெளியிட்டப்பட்ட ஒரு தேர்தல் அறிக்கை மட்டுமே.

காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி:

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மிகச் சிறந்த முறையில் மக்களுக்கு தேவையான திட்டங்களுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார். வரும் காலங்களில் காங்கிரஸ் தொடர்ந்து ஆட்சி செய்ய போவதற்கு இந்த தேர்தல் அறிக்கையையே மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

Get the latest Tamil news and Election news here. You can also read all the Election news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Congress manifesto lok sabha elections

Next Story
‘ரஃபேல்’ புத்தக பறிமுதல் விவகாரத்தில் திருப்பம்: தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பிக்கவில்லை என அறிவிப்புElection commission seized Books on Rafale deal, ரபேல் ஊழல் புத்தகம் பறிமுதல்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com