காலிச் சேர்களுடன் நடந்த பொதுக்கூட்டம்... புகைப்படம் எடுத்த ஊடகவியலாளார்களுடன் மல்லுக்கு நின்ற காங்கிரஸார்... விருதுநகரில் பரபரப்பு!

இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்களை முன் வைக்கின்றனர் மக்கள்

Congress workers attacked photojournalists : தேர்தலுக்கு இன்னும் சரியாக 10 நாட்களே இருக்கின்ற நிலையில், பொதுக்கூட்டங்களும், பிரச்சாரங்களும் துரித கதியில் நடைபெற்று வருகின்றன. ஏப்ரம் மாதம் என்பதால், பல்வேறு பகுதியில் வெயில் கொளுத்து வாங்குகிறது.

தொண்டர்களுக்கும் மக்களுக்கும் இந்த வெயிலோ சூடோ ஒரு பிரச்சனையாகவே இருக்காது, அவர்களுக்குப் பிடித்த கட்சியினவர் வாக்கு சேகரிக்க வந்துவிட்டால். ஆனால் சில இடங்களில் பிடிக்காத அரசியல்வாதிகளையும், கட்சிகளையும், மக்கள் புறக்கணித்தும் வருகின்றனர் சில இடங்களில்.

நேற்று விருதுநகர் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு தலைவர்களும், கட்சியின் முக்கிய உறுப்பினர்களும் கலந்து கொண்டனரே தவிர, மக்கள் யாரையும் காணவில்லை. இதனை கண்ட ஊடகவியல் துறையைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் தங்களின் கேமராக்களில் அதை புகைப்படமாக பதிவு செய்தனர்.

Congress workers attacked photojournalists – வீடியோ

இதனை பார்த்துக் கொண்டிருந்த கட்சி உறுப்பினர்களுக்கு கோபம் வர புகைப்படம்  எடுக்கக்கூடாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருபக்கமும் பேச்சுவார்த்தை முற்றியதைத் தொடர்ந்து கைகலப்பு ஏற்பட்டது. அரசியல் கட்சியினர் ஊடகவியலாளர்களை தாக்க, அந்த வீடியோ தற்போது சமூக வலைதளம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது.  ஊடகவியலாளர்களை தாக்கியது தொடர்பாக அக்கட்சியினர் மீது கடுமையான விமர்சனங்கள் பல்வேறு தரப்பில் இருந்தும் முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : நம்ம நிர்மலா சீதாராமனா இது? என்னா கோபம்! என்னா கலாய்! பேச்சுக்கு விசில் பறக்குது.

Get all the Latest Tamil News and Election 2019 News at Indian Express Tamil. You can also catch all the latest Lok Sabha Election 2019 Schedule by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close