Advertisment

543 தொகுதிகளில் தேர்தல் நடைபெறாத ஒரே ஒரு தொகுதி : வேலூர் மக்களின் கருத்து என்ன ?

போட்டியிடுபவர்களுக்கு இது ஒரு நல்ல விளையாட்டு. ஆனால் இந்த தேர்தல் மூலம் எங்களுக்கு என்ன பயன்?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Constituency number 543 Vellore

Constituency number 543 Vellore

Arun Janardhanan

Advertisment

Constituency number 543 Vellore : நடைபெற்று முடிந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இருக்கும் வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தல் நடைபெறவில்லை. வருமான வரித்துறையினரால் கைப்பற்றப்பட்ட கோடிக்கணக்கான பணம் குறித்த அறிக்கை தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து இம்முடிவை அறிவித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

வேலூரில் இருக்கும் திருமதி. ஜெ. ஜமுனாவை சந்தித்து பேசினோம். பஞ்சாயத்திற்கு சொந்தமான நிலம் ஒன்றில் துப்புரவு மற்று மேற்பார்வைப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். தேர்தல் நடந்திருந்தால் மட்டும் என்ன நடந்திருக்கும். போட்டியிடுபவர்களுக்கு இது ஒரு நல்ல விளையாட்டு. ஆனால் இந்த தேர்தல் மூலம் எங்களுக்கு என்ன பயன் என்று கூறியவாறே வேலைக்கு கிளம்புகின்றார்.

ஜமுனா வேலூர் மாவட்டத்தில் இருக்கும் காட்பாடியைச் சேர்ந்தவர். 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இரண்டாம் கட்டமாக தமிழகத்திற்கு தேர்தல் நடத்தப்பட்டது. ஏப்ரல் 18ம் தேதி வேலூர் தவிர்த்த அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.

மேலும் படிக்க : வேலூரில் தேர்தல் நடக்காமல் போனதிற்கு காரணங்கள் என்னென்ன?

மார்ச் மாத இறுதி மற்றும் ஏப்ரல் மாத துவக்கத்தில் திமுக துரைமுருகன் மற்றும் அவருடைய மகன் வீட்டில் சோதனைகள் நடத்தப்பட்டது. அந்த பகுதியின் திமுக பிரமுகர்கள் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான தொழிற்சாலைகளில் சோதனை நடத்தப்பட்டடது. சோதனை முடிவில் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டது. பின்னர் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் துரைமுருகன், அந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையத்தின் தவறு என்று கூறிவிட்டார்.

இது ஜனநாயத்திற்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல். வேலூர் மக்கள் இந்த முடிவால் கடும் கோபத்தில் இருக்கின்றனர். அதிமுகவோ, திமுகவோ வெற்றி பெறட்டும் ஆனால் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்று துரைமுருகன் கூறியுள்ளார்.

9 முறை காட்பாடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் துரைமுருகன். இவருடைய மகன் தான் தற்போது நடைபெற்ற தேர்தலின் போது திமுக சார்பில் வேலூர் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

Constituency number 543 Vellore

வேலூரில் சிறுபான்மையின மக்கள் தொகை 30% ஆகும். அதில் 21% மக்கள் இஸ்லாமியர்கள். இவர்கள் தான் 1806ம் ஆண்டு நடைபெற்ற வேலூர் சிப்பாய் கழகத்திற்கு காரணமாக அமைந்தவர்கள். இந்தியாவில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்திற்கான முதல் அடிக்கல் இங்கு தான் எடுத்து வைக்கப்பட்டது.

மிக குறைவான சம்பளத்திற்கே இங்கு வேலைக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி மற்றும் பணமதிப்பிழக்க நீக்கத்தால் பெரும் அளவிற்கு இழப்புகளை சந்தித்துள்ளது இங்கிருக்கும் தோள் பதனிடும் தொழிற்சாலை.  சமீபகாலமாக மணற்கொள்ளை மற்றும் தண்ணீர் பற்றாக்குறையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் இங்கிருக்கும் மக்கள்.

திமுக மற்றும் அதிமுக இந்த தொகுதியில் வெற்றியினைப் பெறுவதற்கான சாதகமான சூழலை எதிர்நோக்கி காத்திருந்தனர். துரை முருகன் கூறிப்பிடும் போது இத்தொகுதி மக்கள் இங்கு தேர்தல் நடக்கவில்லை என்று கோபத்தில் இருப்பதாக கூறினார். ஆனால் மக்களிடம் கேட்கும் போது, அரசியல்வாதிகள் எல்லாருமே ஊழல் செய்பவர்கள் தான். அதற்காக ஒரே ஒரு தேர்தலை நிறுத்தி என்ன நடந்துவிடப் போகிறது. ஒரு மாதம் கழித்து தேர்தல் நடந்தாலும், ஒரு வருடம் கழித்து தேர்தல் நடந்தாலும் இப்படித்தான் வாக்காளர்களுக்கு பணம் தந்துவிடப் போகிறார்கள் என்கிறார் - வேலூரில் வேலை பார்த்து வரும் ஆசிரியர் கவிதா பூபாலன்.

கதிர் ஆனந்தை கைது செய்தார்களா இல்லை அவரை வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை செய்தார்களா என்று கேள்வி எழுப்புகிறார் ராமச்சந்திரன். மேலும் ஆர்.கே.நகரிலும் தான் இப்படி பணம் கொடுத்து கையும் களவுமாக பிடிபட்டார்கள். ஆனால் என்ன ஆனது அவர்களுக்கு என்றும் கேள்வி எழுப்பினார் அவர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து கோடிக் கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டது. இருப்பினும் அவர் தொடர்ந்து அமைச்சராக தன் பணியை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறார்.

மக்கள் பணம் வாங்குவார்கள் தான் ஆனால், எப்போதும் தாங்கள் விரும்பிய தலைவர்களுக்கே வாக்களிப்பார்கள். ஒரு தனிநபரின் தவறுக்காக எப்படி மொத்த தேர்தலையும் ரத்து செய்ய முடியும். தேர்தல் ஆணையம் இந்த முடிவினை எடுப்பதற்கு முன்பு, தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சியில் இது போன்று தேர்தல் நிறுத்தப்பட்டதே, குற்றத்தில் ஈடுபட்ட எத்தனை நபர்களுக்கு அவர்களால் தண்டனை வாங்கித் தரப்பட்டது என்பதை மக்களிடம் கூறி இருக்கலாம்  என்றும் கேள்வி எழுப்புகின்றனர் இவ்வூர் மக்கள்

இது தொடர்பான முழுமையான செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

2016 சட்டமன்ற தேர்தலின் போது, மே மாதம் சி.பி.அன்புநாதன் என்ற கரூரை சேர்ந்த தொழில் அதிபர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 5 கோடி ரூபாய் பணமும், பணம் எண்ணும் இயந்திரமும் கைப்பற்றப்பட்டது.

டிசம்பர் 2016ம் ஆண்டு, பணம் மதிப்பிழக்கம் நடைபெற்ற ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் சேகர் ரெட்டி வீட்டில் 9.63 கோடி கைப்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Vellore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment