மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் முதல்வர்... டெல்லியில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு

இந்த 7 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே மாதம் 12ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த 7 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே மாதம் 12ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Delhi Lok Sabha Elections Congress Candidates List

Delhi Lok Sabha Elections Congress Candidates List

Delhi Lok Sabha Elections Congress Candidates List : டெல்லியில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது காங்கிரஸ் கட்சி.  மொத்தம் 7 தொகுதிகளை உள்ளடக்கிய டெல்லியில், 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.  வடகிழக்கு டெல்லியில், டெல்லியின் முன்னாள் முதல்வர் ஷீலா தீக்‌ஷித் போட்டியிடுகின்றார்.

Advertisment

அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களின் பட்டியல்

சாந்தினி சௌக் - ஜெ.பி.அகர்வால்

வடகிழக்கு டெல்லி - ஷீலா தீக்‌ஷித்

Advertisment
Advertisements

கிழக்கு டெல்லி - அரவிந்தர் சிங் லவ்லி

புது டெல்லி - அஜய் மக்கான்

வடமேற்கு டெல்லி (தனித்தொகுதி) - ராஜேஷ் லிலோத்தியா

மேற்கு டெல்லி - மஹாபல் மிஷ்ரா

தேர்தல் தேதி மற்றும் தொகுதிகள்

இந்த 7 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே மாதம் 12ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. டெல்லி தெற்கு தொகுதிக்கான வேட்பாளர்கள் மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இது நாடாளுமன்றத்தின் ஆறாவது கட்ட தேர்தல் களங்களில் ஒரு மாநிலமாக பார்க்கப்படுகிறது.

சாந்தினி சௌக், வடகிழக்கு டெல்லி, கிழக்கு டெல்லி, புது டெல்லி, வடமேற்கு டெல்லி, மேற்கு டெல்லி, தெற்கு டெல்லி என 7 தொகுதிகளை உள்ளடக்கியது டெல்லி. காங்கிரஸ் கட்சியினர் ஆம் ஆத்மியினருடன் கூட்டணியாக களம் இறங்கலாம் என்று முடிவு செய்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள். ஆனால் அந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை ஒட்டி தனித்து போட்டியிடுகின்றனர்.

Delhi General Election

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: