DMDK State Party Status : 2005ம் ஆண்டு நடிகர் விஜயகாந்த் தே.மு.தி.கவினை துவங்கினார். அடுத்த ஆண்டிலேயே தனித்து போட்டியிட்டு தமிழகத்தில் 8.38 % வாக்குகளை அவருடைய கட்சி பெற்றது. 2009ம் ஆண்டு நடைபெற்ற 15வது மக்களவைத் தேர்தலில் தே.மு.தி.க 10.3 வாக்குகளை சேகரித்தது.
தமிழகத்தில் அவருடைய கட்சியின் வளர்ச்சி மிகவும் பிரம்மிப்புடன் பார்க்கப்பட்ட நிலையில், 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. கட்சி, அதிமுகவுடன் கூட்டணி வைத்தது. அதில் இருந்து தே.மு.தி.கவின் வாக்கு வங்கிகள் சரியத் துவங்கின. அன்றைய தேர்தலில் 7.9% வாக்குகளைப் பெற்றது தே.மு.தி.க.
மாநில கட்சிக்கான அங்கீகாரம் என்றால் என்ன?
அதன் பின்னர் 2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மேலும் வாக்குவங்கிகள் சரியத்துவங்கி 5.1% அடைந்தது. ஒரு கட்சி மாநிலக் கட்சி என்ற அந்தஸ்தினைப் பெற வேண்டும் என்றால் தோராயமாக 6% வாக்குகளை வைத்திருக்க வேண்டும். அல்லது ஒரு நாடாளுமன்ற தொகுதியிலோ, இரண்டு சட்டமன்ற தொகுதியிலோ வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் முக்கியமான விதியாகும்.
தொடர்ந்து சரிவைச் சந்தித்த தேமுதிக
தற்போது நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக + அதிமுக + பாமக+ தேமுதிக - என்று மாபெரும் கூட்டணி போட்டியினை சந்தித்தது. ஆனால் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தங்களின் வெற்றியை பதிவு செய்ததோடு, பாஜக, பாமக, தேமுதிகவின் தற்போதைய நிலையை கேள்விக்குறியாக்கிவிட்டது என்றும் கூற வேண்டும். அதிமுக தேனியில் மட்டும் வெற்றி பெற ஏனைய கட்சிகள் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.
தேமுதிகவின் வாக்கு வங்கிகள் 5.1%த்தில் இருந்து 2016 சட்டமன்ற தேர்தலில் 3%மாக குறைந்தது. நடைபெற்று முடிந்த தேர்தலில் 2.19% வாக்குகளைப் பெற்றிருப்பதால் மாநில கட்சிக்கான அந்தஸ்த்து ரத்தாகும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் தேமுதிக வருங்காலத்தில் நடைபெறும் தேர்தல்களில் முரசு சின்னத்தில் நின்று போட்டியிட முடியாத சூழலும் உருவாகியுள்ளது.
மேலும் படிக்க : Tamil Nadu By Election Results : துல்லிய விபரங்களுடன் 2019 சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்