DMK announces list of LS constituencies allotted to allies: திமுக கூட்டணிக் கட்சிகளின் அதிகாரபூர்வ தொகுதி பட்டியல் இன்று வெளியானது. சில கட்சிகளுக்கு தொகுதிகள் மாற்றப்பட்டது, ஏமாற்றம் ஆகியிருக்கிறது. மு.க.ஸ்டாலின் இனி இதில் மாற்றங்கள் செய்வாரா?
திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் தொகுதி இறுதிப் பட்டியல்:
திமுக
1.தூத்துக்குடி
2.தென்காசி
3.நெல்லை 4.திண்டுக்கல்
5.தர்மபுரி
6.பொள்ளாச்சி 7.சேலம்
8.அரக்கோணம்
9.மயிலாடுதுறை 10.தஞ்சாவூர்
11.கடலூர்
12.ஸ்ரீபெரும்புதூர் 13.திருவண்ணாமலை 14.கள்ளக்குறிச்சி 15.காஞ்சிபுரம்,
16.நீலகிரி
17.வேலூர்
18.தென் சென்னை
19.மத்திய சென்னை
20.வட சென்னை.
காங்கிரஸ்
1.கன்னியாகுமரி
2.விருதுநகர்
3.சிவகங்கை, 4.தேனி,
5.திருச்சி,
6.கரூர்,
7.கிருஷ்ணகிரி, 8.ஆரணி,
9.திருவள்ளுர்
10.புதுவை.
மதிமுக
1.ஈரோடு
விடுதலைச் சிறுத்தைகள்
1.சிதம்பரம் 2.விழுப்புரம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
1.மதுரை
2.கோவை
இந்திய கம்யூனிஸ்ட்
1. நாகப்பட்டினம்
2.திருப்பூர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
1.இராமநாதபுரம்
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி
1.நாமக்கல்
இந்திய ஜனநாயக கட்சி
1.பெரம்பலூர்.
திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு கேட்ட தொகுதிகள் கிடைத்ததா?- ஒரு பார்வை
திமுக கூட்டணியில் 10 தொகுதிகள் வாங்கியிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு 5 தொகுதிகளே அந்தக் கட்சி எதிர்பார்த்தவை. அதாவது, கன்னியாகுமரி, விருதுநகர், சிவகங்கை, தேனி, புதுச்சேரி ஆகியவையே அவை!
மற்றபடி திருநாவுக்கரசருக்காக ராமநாதபுரம் கேட்ட நிலையில், திருச்சி கிடைத்திருக்கிறது. கரூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர் தொகுதிகளை வேண்டா வெறுப்பாகவே காங்கிரஸ் பெற்றுக்கொண்டிருப்பதாக தெரிகிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஜாக்பாட்டாக கேட்ட இரு தொகுதிகளே (சிதம்பரம், விழுப்புரம்) கிடைத்திருக்கிறது. மார்க்சிஸ்ட் கட்சிக்கும் மதுரை, கோவை தொகுதிகளில் பெரிய கஷ்டம் இல்லை. எனினும் காங்கிரஸ் கோட்டையான கன்னியாகுமரி மீது மார்க்சிஸ்ட் ஒரு கண் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாகப்பட்டினம், தென்காசி தொகுதிகளை விரும்பியது. ஆனால் நாகப்பட்டினத்துடன் அதிமுக கோட்டையான திருப்பூரும் வழங்கப்பட்டிருக்கிறது. தென் மாவட்டங்களில் பீட்டர் அல்போன்ஸுக்காக திருநெல்வேலியை கைப்பற்ற நினைத்த காங்கிரஸின் முயற்சி பலிக்கவில்லை.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு கிடைத்த தொகுதிகளில் அதிருப்தி இல்லை. ஐ.ஜே.கே. கட்சி கள்ளக்குறிச்சியை எதிர்பார்த்து சமூக வலைதளங்களில் பிரசாரமும் தொடங்கிவிட்ட நிலையில், பெரம்பலூர் வழங்கப்பட்டிருக்கிறது.
சில கட்சிகளுக்கு தொகுதிகள் மாற்றம், ஏமாற்றமாக இருக்கிறது. திமுக.வைப் பொறுத்தவரை சென்னையின் 3 தொகுதிகள், வேலூர், கள்ளக்குறிச்சி, அரக்கோணம், தூத்துக்குடி, ஸ்ரீபெரும்புதூர் என குறிப்பிட்ட வேட்பாளர்களுக்காக தக்கவைக்க நினைத்த அத்தனை தொகுதிகளையும் தன் வசம் வைத்துக் கொண்டிருக்கிறது.