தேமுதிக கூட்டணியில் இழுபறியா? என்கிற கேள்விக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்தார். தவிர இன்றைய கூட்டணி வேட்டையில் அதிமுக.வுக்கு புதிய தமிழகம் கட்சியும், திமுக.வுக்கு பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயகக் கட்சியும் வந்து சேர்ந்தன.
அதிமுக - பாஜக கூட்டணியில் இணக்கமாக இருந்த ஐஜேகே தலைவர் பாரிவேந்தர், அங்கிருந்து விலகி, திமுக அணியில் இணைந்திருக்கிறார். புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி மறுபடியும் அதிமுக அணியில் ஐக்கியமாகியிருக்கிறார்.
அதேபோல், அதிமுக - தேமுதிக கூட்டணியும் இன்று இறுதியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க - விஜயகாந்த் மறுபடியும் திசை மாறுகிறாரா? திரைமறைவு ‘மூவ்’
அதிமுக - திமுக அணிகள் பேச்சுவார்த்தை Live Updates:
4:30 PM: திமுக அணியில் இடதுசாரிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தர் மட்டுமே இன்று அறிவாலயம் வந்து திமுக.வுக்கு ஆதரவு கொடுப்பதாக அறிவித்தார்.
பாரிவேந்தருக்கு தொகுதி எதுவும் அறிவிக்கப்படவில்லை. எனினும் இதர கூட்டணிக் கட்சிகளுடன் பேசியபிறகு அவருக்கு கள்ளக்குறிச்சி தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது. ஐ.ஜே.கே. பிரமுகர்கள் இப்போதே சமூக வலைதளங்களில் பிரசாரத்தை ஆரம்பித்துவிட்டனர். எதிர் பிரசாரத்தை பா.ம.க.வினரும் தொடங்கியிருக்கிறார்கள்.
4:10 PM: 'திமுக கூட்டணி கொள்கை பூர்வமானது, எங்களுக்குள் எந்த பிரிவும் இல்லை. தொகுதி பங்கீடு குறித்து விரைவில் நல்ல முடிவு எட்டப்படும்' என இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.
3:30 PM : அதிமுக கூட்டணி விரைவில் முழு வடிவம் பெறும். விரைவில் நல்ல செய்தி வரும் என அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.
3:20 PM : அதிமுக-தேமுதிக கூட்டணியில் இழுபறி இல்லை என துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.
2:30 PM: ஒருபக்கம் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நகரும் சூழலில், பிரசாரத் திட்டங்களையும் கட்சிகள் முடுக்கி விட்டிருக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 1) கன்னியாகுமரியில் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். வருகிற 6-ம் தேதி மோடி சென்னை வருகிறார். சென்னையில் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.
மோடியின் வருகைக்கு முன்பு அதிமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டுவிடும். கூட்டணித் தலைவர்கள் மோடி நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல வரும் 13-ம் தேதி தமிழகம் வருகிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. அவரது பொதுக்கூட்டத்தில் திமுக கூட்டணித் தலைவர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
1:30 PM: தேமுதிக.வுக்கு லோக்சபா தேர்தலில் 5 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா தொகுதி, உள்ளாட்சித் தேர்தலில் 20 சதவிகித இடங்கள் என பேசப்பட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன.
நிறைந்த அமாவாசையான மார்ச் 6-ம் தேதி இதை அறிவிக்க அதிமுக, தேமுதிக கட்சிகள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
1:15 PM : தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் 2-வது நாளாக இன்றும் கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அங்கு தொகுதி பங்கீட்டு குழுவினரை சந்தித்தார்.
அதிமுக.வுடன் இறுதி கட்டத்தை எட்டியதாக கூறப்படும் தொகுதி பங்கீடு குறித்து அவர் விவாதித்ததாக கூறப்படுகிறது. விஜயகாந்த் கூட்டணி இல்லை என்றான பிறகே திமுக தரப்பில் ஐ.ஜே.கே. உள்ளிட்ட சிறு கட்சிகளை அழைக்க தயாரானதாக தகவல்கள் வருகின்றன.
12:45 PM : அதிமுக அணியில் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்படுகிறது. அங்கு தனிச் சின்னத்தில் போட்டியிட இருக்கிறார் கிருஷ்ணசாமி. தென்காசி தொகுதியில் புதிய தமிழகம் போட்டியிட இருப்பதை கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்திருக்கிறார்.
Puthiya Tamilagam joins NDA. To contest from Tenkasi. https://t.co/bcl5s60Xen
— Shyam Krishnasamy (@DrShyamKK) 2 March 2019
12:30 PM: திமுக கூட்டணியில் பாரிவேந்தருக்கு சீட் ஒதுக்கி அறிவிக்கப்படாவிட்டாலும்கூட, அவருக்கு கள்ளக்குறிச்சி தொகுதி ஒதுக்கப்படும் என தெரிகிறது. அவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார்.
11:50 AM - அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், 21 சட்டமன்ற இடைத் தேர்தலிலும், அதிமுகவுக்கு புதிய தமிழகம் கட்சி முழு ஆதரவு அளிக்கும் என துணை முதல்வர் ஓ.பி.எஸ் அறிவித்துள்ளார். இதற்கான ஒப்பந்தம் முறைப்படி இன்று கையெழுத்தானது.
11:30 AM - ஐஜேகே தலைவர் பாரிவேந்தர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழகத்திற்கு மாற்றம் தேவை என்பதால், திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பது என்று ஐஜேகே பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, திமுகவுக்கு நேரில் சந்தித்து எங்கள் ஆதரவை தெரிவித்துள்ளோம். கூட்டணி பேச்சுவார்த்தைக்கு திமுக அழைத்த பிறகு அதைப் பற்றி பேசலாம். இப்போதைக்கு ஆதரவு மட்டும் தெரிவித்துள்ளோம். மேலும், தனிப்பட்ட முறையில் எங்களுக்கு பெரும் தொந்தரவு அளித்து வந்த பாமக, அதிமுக கூட்டணியில் இணைந்ததால், அக்கூட்டணியில் இருந்து வெளியே வந்தோம்" என்று தெரிவித்துள்ளார்.
கழக தலைவர் திரு. @mkstalin அவர்களை சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்த இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் தலைவர் திரு. பச்சமுத்து பாரிவேந்தர் அவர்கள் மக்களவைத் தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். pic.twitter.com/jRydO9guX9
— DMK - Dravida Munnetra Kazhagam (@arivalayam) 2 March 2019
11:15 AM - இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர், அண்ணா அறிவாலயம் வந்து திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். திமுகவின் தொகுதிப் பங்கீட்டு குழுவுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.