திமுக கூட்டணி: மதிமுக, விடுதலை சிறுத்தைகள் பேச்சுவார்த்தையில் கேட்கப்பட்ட தொகுதிகள் இவைதான்…

MK Stalin meet Vijayakanth Live Updates: பரபரப்பான தேர்தல் களத்தில் விஜயகாந்தை சந்தித்து அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் மு.க.ஸ்டாலின்.

DMK Alliance, vck, mdmk
DMK Alliance, vck, mdmk

திமுக கூட்டணிப் பேச்சுவார்த்தையில் மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கேட்ட தொகுதிகள் விவரம் தெரிய வந்திருக்கிறது. மதிமுக 4 தொகுதிகள் அடங்கிய பட்டியலையும், விடுதலை சிறுத்தைகள் 3 தொகுதிகள் அடங்கிய பட்டியலையும் சமர்ப்பித்தன.

பொதுத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. தமிழகத்தின் பிரதான கட்சிகளான தி.மு.க-வும், அ.தி.மு.க-வும் கூட்டணி வேலைகளில் படு பிஸியாக இருக்கின்றன.

Read More: விஜயகாந்துக்கு திடீர் மவுசு: மு.க.ஸ்டாலின் சந்திப்பால் அதிரடி திருப்பம்

பா.ஜ.க மற்றும் பா.ம.க-வுடன் அ.தி.மு.க தனது கூட்டணியை உறுதிப் படுத்தியிருக்கும் நிலையில், காங்கிரஸுடன் மீண்டும் இணைந்திருக்கிறது தி.மு.க. இந்நிலையில் தே.மு.தி.க யாருடன் கூட்டணி வைத்துக் கொள்ளும் என்ற எதிர்பார்ப்பும் தமிழக மக்களுக்கு அதிகரித்து வருகிறது.

என்.ஆர்.காங்கிரஸுடன் நேற்று அ.தி.மு.க தனது கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவனையும், ம.தி.மு.க-வின் வைகோவையும் இன்று மதியம் தி.மு.க சந்திக்கிறது.

LIVE UPDATES:

ஸ்டாலின் – விஜயகாந்த் சந்திப்பு

4:00 PM: காலையில் திமுக குழுவை சந்தித்த கணேசமூர்த்தி தலைமையிலான பேச்சுவார்த்தைக் குழுவினர் திருச்சி, விருதுநகர், காஞ்சிபுரம் உள்பட 4 தொகுதிகளை கேட்டதாக தெரிகிறது. திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் குழுவினர் விழுப்புரம், சிதம்பரம் உள்பட 3 தொகுதிகளை குறிப்பிட்டு கேட்டனர்.

2 தொகுதிகளை பெற்றுவிடுவதில் சிறுத்தைகளும், 3 தொகுதிகளை பெறுவதில் மதிமுக.வும் உறுதி காட்டுகின்றன.

15:31 pm: தமிழகத்தில் இருந்து 35 எம்.பி-க்கள் மோடியை மீண்டும் பிரதமராக்கும் யுத்தத்தில் இருப்பார்கள் என நம்புகிறேன். ராகுலிடமும் ஸ்டாலினிடமும் ஊழல் தான் உள்ளது – மதுரையில் அமித்ஷா பேச்சு

15:20 pm: மு.க.ஸ்டாலின் – விஜயகாந்த் சந்திப்பையடுத்து, தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க இடம் பெறலாம் என்ற தகவல் பரவி வருகிறது.

13:40 pm: அமெரிக்கா சென்று சிகிச்சை முடிந்து திரும்பிய விஜயகாந்தின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தேன். என்னை விட 1 வயது மூத்தவராக இருந்தாலும் கூட என்னை அன்போடு அண்ணன் என்றழைக்கக் கூடியவர். தலைவர் கலைஞரிடத்தில் மிகுந்த பற்றும் பாசமும் ஏன் பக்தியும் கொண்டவர்.  தலைவர் மறைந்த சமயத்தில் வெளிநாட்டில் இருந்து வீடியோவில் இரங்கல் செய்தியை தெரிவித்த அந்தக் காட்சி இன்னும் நம்மிடையே நிழலாடிக் கொண்டிருக்கிறது. சிகிச்சை முடிந்து சென்னை திரும்பிய அவர், நேரடியாக விமானநிலையத்திலிருந்து கலைஞர் நினைவிடம் வந்து அஞ்சலி செலுத்திய அந்தக் காட்சிகளும், தலைவரிடத்தில் அவர் கொண்டுள்ள பற்றை உணர்த்தும். அவர் உடல் நலம் பெற்று மீண்டு வந்து நாட்டு மக்களுக்கு பணியாற்ற என் வாழ்த்துகள். இது கூட்டணிக்கான சந்திப்பு அல்ல. தி.மு.க – தே.மு.தி.க கூட்டணி குறித்த உங்கள் எண்ணத்துக்கு வாழ்த்துகள் – ஸ்டாலின்

Read More: ‘நல்ல மனிதர், ஆரோக்கியமா இருக்கணும்’ விஜயகாந்தை சந்தித்து உருகிய ரஜினிகாந்த்

13:24 pm: விஜயகாந்தை சந்திக்க மு.க.ஸ்டாலின் வருகை.

13:14 pm: இன்னும் சற்று நேரத்தில் விஜயகாந்தை சந்திக்கிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

12:25 pm: தி.மு.க-வுடன் வி.சி.க கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.

ரஜினி – விஜயகாந்த் சந்திப்பு

தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் விஜயகாந்தை சந்திக்க வருகை புரிந்திருக்கிறார்.

12:30 pm: கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை. ஒரு வாரத்துக்குள் நல்ல முடிவை தலைவர் அறிவிப்பார் – பிரேமலதா

11:45 am: ”எனக்கு உடல்நிலை சரியில்லாமல், ராமச்சந்திரா மருத்துவமனையில் இருக்கும் போது, என்னை பார்க்க வந்த முதல் ஆள் கேப்டன் தான். சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று முடிந்து வந்ததும் என்னை முதலில் நலம் விசாரித்தவரும் கேப்டன் தான். அந்த வகையில் தற்போது, அவரது உடல்நலம் குறித்து விசாரிக்க நான் வந்தேன். நல்ல நண்பர், அவர் அமெரிக்காவில் இருக்கும் போதே அவரை நலம் விசாரிக்க முயற்சி செய்தேன். இப்போது அவரது உடல் நலம் குறித்து விசாரிக்கவே இங்கு வந்தேன். இதில் துளியும் அரசியல் கிடையாது” – ரஜினிகாந்த்

11:40 am: பத்து நிமிடத்திற்கும் மேலாக ரஜினி – விஜயகாந்த் சந்திப்பு நீடிக்கிறது.

11:35 am: விஜயகாந்தின் உடல்நலம் குறித்து ரஜினி விசாரிப்பு. விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, மகன் சண்முக பாண்டியன், தே.மு.தி.க துணை பொது செயலாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோரும், இந்த சந்திப்பில் உடனிருக்கிறார்கள்.

11:21 am: விஜயகாந்த் இல்லத்துக்கு ரஜினிகாந்த் வருகை.

11:15 am: தி.மு.க – ம.தி.மு.க இடையேயான தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை தொடக்கம்.

11:00 am: நேற்று விஜயகாந்தை திருநாவுக்கரசர் சந்தித்த நிலையில், இன்று ரஜினிகாந்த் அவரை சந்திக்கிறார். விஜயகாந்தின் உடல்நலத்தை விசாரிக்கும் ரஜினி, அரசியல் பற்றி விவாதிக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

10:00 am: தவிர, நேற்று காங்கிரஸ் கட்சியின் திருநாவுக்கரசர், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தை சந்தித்தார். இந்நிலையில் அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் தமிழக மக்கள்.

 

Get the latest Tamil news and Election news here. You can also read all the Election news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Dmk alliance with vijayakanth seat sharing live updates

Next Story
அமைச்சர் வீரமணிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் ஐ.டி ரெய்டுk.c.veeramani
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com