திமுக - தேமுதிக கூட்டணி : சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று, நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் மு.க.ஸ்டாலின். தொகுதி பங்கீடுகள் குறித்து பேச்சுவார்த்த நடத்தப்பட்ட பின்பு, தேமுதிகவை கூட்டணியில் இணைப்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
திமுக - தேமுதிக கூட்டணி உறுதி செய்யப்படுமா ?
ஒரு வேளை நாளைக்குள், தேமுதிக இந்த கூட்டணிக்கு தயாராகவில்லை என்றால், கூட்டணி கட்சிகளுக்குள் கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு செய்ய முடிவு மேற்கொள்ளப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 10 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய க்ட்சிக்கு தலா 1 தொகுதிகள் என்று இதுவரை 12 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய தோழமை கட்சிகளுடன் முதல் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
ஓரிரு நாட்களில் தொகுதி பங்கீடு உறுதி செய்யப்படும் நிலையில், தேமுதிகவின் கூட்டணி அமைந்தால் நன்றாக இருக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. கோபாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார். தேமுதிகவின் வருகையால் தான் தொகுதிப் பங்கீடில் இழுபறி நீடித்துவருகிறது என்றும் அவர் அறிவித்துள்ளார்.