திமுக, தேமுதிக சார்பில் போட்டிய விருப்ப மனுக்கள் விநியோகம் : 2019ம் ஆண்டிற்கான தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ள இந்த சமயத்தில், தேமுதிக கட்சி யாருடன் கூட்டணி வைத்துக் கொள்ளும் என்று பெரிய எதிர்ப்பார்ப்பு மக்கள் மத்தியிலும், தொண்டர்கள் மத்தியிலும், கட்சிகள் மத்தியிலும் நிலவி வருகின்றது.
இந்நிலையில், அதிமுக, திமுக போன்ற கட்சிகள் ஏற்கனவே விருப்ப மனுக்களை விநியோகம் செய்யத் துவங்கியுள்ளது. தற்போது தேமுதிகவும் தங்களின் விருப்ப மனுக்களை விநியோகம் செய்ய துவங்கியுள்ளான.
திமுக, தேமுதிக சார்பில் போட்டிய விருப்ப மனுக்கள் விநியோகம்
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் உடையவர்கள் இந்த மனுக்களை வாங்கி சமர்பிக்கலாம். இந்த மனுக்கள் சென்னை, கோயம்பேட்டில் அமைந்திருக்கும் கட்சித் தலைமை அலுவலகத்தில் அளிக்கப்பட்டு வருகிறது.
அதிமுக சார்பில் போட்டியிட 1700க்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
திமுக சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் தங்களின் விருப்ப மனுக்களை மார்ச் மாதம் 1ம் தேதி முதல் 7ம் தேதிக்குள், படிவங்களை பூர்த்தி செய்து அண்ணா அறிவாலயத்தில் சமர்ப்பிக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான படிவங்கள் இன்று முதல் விநியோகப்படுகிறது.
திமுக போட்டியிடும் 21 இடங்களில் வேட்பாளராக போட்டியிட விரும்புபவர்கள் 25000 ரூபாய் கட்டணம் செலுத்தி இந்த படிவங்களை பெற்றுக் கொள்ளலாம். கூட்டணிக் கட்சியினர் போட்டியிட இருக்கும் தொகுதியில் விண்ணப்பம் செய்தவர்கள் தாங்கள் கட்டிய பணத்தினை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.