திமுக எம்.பி கனிமொழிக்கு கொரோனா தொற்று : பிரசாரம் ரத்து

TN ASSEMBLY ELECTION LIVE UPDATES : பிரசாரத்தை முடித்த பின், விமானம் மூலம் சென்னை திரும்பிய கனிமொழிக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து, வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6-ம் தேதி நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக மகளிர் அணிச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். திமு கழகத்தின் பிரசார திட்டத்தில், தெற்கு மண்டல பொறுப்பாளராக கனிமொழி நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், நேற்று ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனிமொழி பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்தை முடித்த பின், விமானம் மூலம் சென்னை திரும்பிய கனிமொழிக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து, வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில், மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இறுதிக் கட்ட பிரசாரத்தில் கனிமொழி பங்குகொள்ள இயலாததால், அவரின் பிரசார பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, கனிமொழி விரைந்து குணமடைய வேண்டுவதாக மகாராஷ்ட்டிரா மாநிலம் பரமதி நாடாளுமன்ற உறுப்பினர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Election news here. You can also read all the Election news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Dmk mp kanimozhi tested positive for corona campaigns cancel

Next Story
தமிழகத்தின் பிரபல பாஜக தலைவர்; கமல் ஹாசனுக்கு எதிராக களம் இறங்கும் வானதி குறித்து ஒரு பார்வைKamal Haasan vs star in her own right: a popular Tamil Nadu BJP leader
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com