Advertisment

ஆவின் பால் விலை குறைப்பு, மகளிர் பேறுகால நிதி உயர்வு... திமுக தேர்தல் அறிக்கை ஹைலைட்ஸ்

Tamil Nadu Election News : அரிசி அட்டை வைத்துள்ள குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண தொகையாக ரூ.4000 வழங்கப்படும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
DMK Election manifesto , Tamilnadu assembly election news , DMK 500 promises , MK Stalin Election announcement

DMK's Manifesto 500 Promises Highlights: திமுக தலைவர் மு. க ஸ்டாலின், 2021-சட்டப்பேரவை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை, இன்று சென்னை – அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார். முன்னதாக, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா – தலைவர் கலைஞர் ஆகியோரின் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.

Advertisment

இன்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 500க்கு மேற்பட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தன. அதில், மிக முக்கிய அம்சங்களை இங்கே காண்போம்

நீட் தேர்வை ரத்து செய்ய முதல் சட்டமன்ற தொடரிலேயே தீர்மானம்

தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்

பொங்கல் திருநாள் மாபெரும் பண்பாட்டு திருநாளாக மாநிலம் முழுவதும் நடத்தப்படும்

அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப்படும்

ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும்

பெட்ரோல் விலை ரூ.5, டீசல் விலை ரூ.4 குறைக்கப்படும்

அரிசி அட்டை வைத்துள்ள குடும்பங்களுக்கு கொரோனா நிவாரண தொகையாக ரூ.4000 வழங்கப்படும்

அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க தனி நீதிமன்றம்

மாதம் ஒரு முறை மின்கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும்

சிலிண்டருக்கு மானியமாக 100 ரூபாய் வழங்கப்படும்

தனியார்துறையில் தமிழகர்களுக்கு 75 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு

ஆலயங்களுக்கு குடமுழுக்கு நிதி ஒதுக்கப்படும்

நீட் தேர்வை ரத்து செய்ய முதல் சட்டமன்ற தொடரிலேயே தீர்மானம்

தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்

கல்வி மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆட்டோ ஓட்டுநர்கள் சொந்தமாக ஆட்டோ வாங்க ரூ 10 ஆயிரம் மானியம் வழங்கப்படும்

நடைபாதை வாசிகளுக்கு இரவு நேர காப்பகங்கள் திறக்கப்படும்

பத்திரிக்கையாளர்கள், ஊடக துறையினர் நலனுக்கு தனி வாரியம் அமைக்கப்படும்

ரேஷனில் கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும்

ரேஷனில் உளுத்தம் பருப்பு மீண்டும் வழங்கப்படும்

முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்கப்படும்

மகளிர் பேறு கால உதவித்தொகை ரூ 24 ஆயிரமாக உயர்த்தப்படும்

ஈழத் தமிழர் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்.

சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்

ஆலயங்களுக்கு குடமுழுக்கு நிதி ஒதுக்கப்படும்

மருத்துவ படிப்புகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படும்

இந்து கோவில்களுக்கு ஆன்மீக சுற்றுலா செல்ல 1 லட்சம் பேருக்கு தலா ரூ1,000 வழங்கப்படும்

விவசாய துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணைய அறிக்கையை விரைவில் பெறுவோம்

வாக்குறுதிகளை நிறைவேற்ற திட்டங்கள், செயலாக்கதுறை என தனி அமைச்சகம் உருவாக்கப்படும்

சத்துணவு திட்டத்தில் காலையில் பால் வழங்கப்படும்

இந்தியாவில் வசிக்கும் ஈழத் தமிழருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்

வள்ளலார் பெயரில் சர்வதேச மையம் அமைக்கப்படும்

நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்க நடவடிக்கை எடுக்கப்படும்

சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் அரசு பணியாளர்களாக்கப்படுவர்

மகளிர் சுய உதவிக்குழுவினரின் நிலுவையில் உள்ள கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி செய்யப்படும்

500 இடங்களில் கலைஞர் உணவகங்கள் அமைக்கப்படும்

மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்

அரசு பணியில் உள்ள பெண்களுக்கு பேறுகால விடுப்பு 12 மாதமாக அதிகரிக்கப்படும்

நீர்மேலாண்மை ஆணையம் அமைக்க சட்டம் கொண்டுவரப்படும்

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை ரூ 2500 ஆக உயர்த்தப்படும்

ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பவர்களுக்கு ஊக்கத் தொகையாக மாதந்தோறும் ரூ 1000 வழங்கப்படும்

சென்னையை போல் சேலம், மதுரை, திருச்சி, நெல்லையில் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படும்

100 நாள் வேலைத்திட்டம் 150 நாளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Tamilnadu Election 2021
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment