22 தொகுதியில் சூரியன், 18 தொகுதியில் கூட்டணி சின்னம்- திமுக இறுதி கணக்கு இதுதான்

விடுதலை சிறுத்தைகள், மதிமுக ஆகிய கட்சிகள் தனி சின்னமா, உதயசூரியனா என அறிவிக்காவிட்டாலும், அவை தனி சின்னத்தில் போட்டியிடும் வாய்ப்பே அதிகம்!

By: Updated: March 5, 2019, 06:37:34 PM

election 2019 alliance : பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகிறது.  உச்சக் கட்ட அரசியல் பரபரப்பில்  கூட்டணி கட்சிகள்  குறித்து அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

இதோ அதுக் குறித்து live updates உடனக்குடன் உங்கள் பார்வைக்கு..

5:20 PM: ‘பாஜகவுடன் அதிமுக அமைத்துள்ள கூட்டணி, தேர்தலுக்காக வைக்கப்பட்ட கூட்டணி தானே தவிர கொள்கை அளவிலானது அல்ல. ஜெயலலிதாவிற்கு இருந்த துணிச்சல் அதிமுகவில் யாருக்கும் இல்லை’ என அன்வர்ராஜா எம்.பி. கூறினார்.

4:45 PM: அரசு நிகழ்ச்சி, பொதுக்கூட்டத்திற்காக நாளை சென்னை வரும் பிரதமர் மோடி எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர் சிலையை காணொலி காட்சியில் திறந்து வைக்கிறார்.

மோடியின் பொதுக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சியினர் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

4:00 PM: திமுக கூட்டணி இறுதி நிலவரப்படி,

திமுக 20
காங்கிரஸ் 10
மார்க்சிஸ்ட் 2
இந்திய கம்யூனிஸ்ட் 2
விடுதலை சிறுத்தைகள் 2
மதிமுக 1 (கூடுதலாக ஒரு ராஜ்யசபை)
முஸ்லிம் லீக் 1
கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி 1
ஐ.ஜே.கே 1

என தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. ஐஜேகே, கொமதேக ஆகிய கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதை உறுதி செய்திருப்பதால், 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் களம் இறங்க இருக்கிறார்கள். விடுதலை சிறுத்தைகள், மதிமுக ஆகிய கட்சிகள் தனி சின்னமா, உதயசூரியனா என அறிவிக்காவிட்டாலும், அவை தனி சின்னத்தில் போட்டியிடும் வாய்ப்பே அதிகம்!

3.30 PM  திமுக தலைமையிலானக் கூட்டணியில் மதிமுகவுக்கு 1 மக்களவைத் தொகுதி மற்றும் 1 ராஜ்யசபா தொகுதி ஒதுக்கியுள்ளனர்வைகோ ராஜ்ய சபா எம்.பி.யாக ஆக வேண்டும் என்றும் அவரின் சேவை நாடாளுமன்றத்துக்குத் தேவை என வைகோவிடம் திமுக தலைமை கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

01:25 PM – மக்களவை தேர்தலில் மதிமுகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால், திமுக 20 இடங்களில் போட்டியிடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. தவிர, கூட்டணிப் பேச்சுவார்த்தை முழுமையாக முடிவடைந்து இருப்பதாகவும், இம்முறை மனிதநேய மக்கள் கட்சிக்கு இம்முறை சீட் ஒதுக்கப்பட முடியவில்லை என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

1.00 PM :மக்களவை தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக-மதிமுக 3ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது.

12. 30 PM :  செய்தியாளர்களை சந்தித்த சந்தித்த மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்,  பாராளுமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக அறிவித்தார்.பாராளுமன்றத் தேர்தலுடன் இடைத்தேர்தல் வந்தால் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரிப்பது என ஏற்கனவே முடிவு எடுத்திருப்பதாக கூறினார்.

12. 10 PM : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக-மனித நேய மக்கள் கட்சி இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

12.00 PM : திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

11:50 AM :சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் 3ம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது.

11:40 AM : போட்டியிடும் தொகுதிகள் மற்றும் சின்னம் தொடர்பாக வைகோ தலைமையில் மதிமுகவின் உயர்நிலைக்குழு ஆலோசனை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மதிமுகவிடமும் திமுக வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

11:30 AM : சென்னை கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் தேமுதிக அவசர ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது

08:30 AM : நேற்றைய தினம், அதிமுக-புதிய நீதிக்கட்சி இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது . மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் புதிய நீதிக்கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. புதிய நீதிக் கட்சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அதிமுக மற்றும் திமுக ஆகிய முக்கிய கட்சிகள் அவர்களது கூட்டணி கட்சிகளை முடிவு செய்துள்ளது.

அதிமுக கூட்டணியை பொறுத்தவரையில் இறுதி வடிவத்தை பெற்று இருக்கிறது. அதிமுக, பாமக, பாஜக, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி கூட்டணி உறுதியாகி உள்ளது. அதிமுக கூட்டணியில் பாமக 7 தொகுதிகளில், பாஜக 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த கூட்டணியில் தேமுதிக சேருமா என்பதுதான் தற்போது பெரிய கேள்வி. இதற்காக பல நாட்களாக தேமுதிக – அதிமுக பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு வருகிறது.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், இந்திய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. மதிமுக மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியுடனான தொகுதி பங்கீடு கூட்டணி இன்று இறுதியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் திடீரென்று சந்திப்பு நடத்தி இருக்கிறார்.விஜயகாந்த் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. அதிமுக தேமுதிக கூட்டணி குறித்து இதில் ஆலோசித்தனர். இதன் முடிவில் தேமுதிக இரண்டு நாட்களில் நல்ல முடிவு எடுக்கும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

மேலும் படிக்க.. 7 தொகுதிகள் கேட்கும் தேமுதிக…! ‘கூட்டணி விரைவில் உறுதி

இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க அலுவலகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று (5.3.19) நடைபெறுகிறது. கூட்டணி தொடர்பான தனது முடிவை விஜயகாந்த் இதில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Get all the Latest Tamil News and Election 2021 News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Lok Sabha Election 2019 Schedule by following us on Twitter and Facebook

Web Title:Election 2019 alliance finalizing live updates

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X