இந்த வேட்பாளர்களின் சொத்து மதிப்புகள் எவ்வளவு தெரியுமா ?

230 கோடி ரூபாய் அசையும் சொத்துகளும், ரூ. 182 கோடி அளவிலான அசையா சொத்துகளும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

230 கோடி ரூபாய் அசையும் சொத்துகளும், ரூ. 182 கோடி அளவிலான அசையா சொத்துகளும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Election 2019 Assets Value of Tamil Nadu Star Candidates

Election 2019 Assets Value of Tamil Nadu Star Candidates

Election 2019 Assets Value of Tamil Nadu Star Candidates : தமிழகம் முழுவதும் இன்று முடிவடைகிறது வேட்புமனு தாக்கல். அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக, மற்றும் இதர கட்சிகள் சார்பில் நிறுத்தப்படும் மிக முக்கியமான கட்சித் தலைவர்கள் தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

Election 2019 Assets Value of Tamil Nadu Star Candidates

தூத்துகுடி நட்சத்திர வேட்பாளர்களின் சொத்து மதிப்பு என்ன ?

Advertisment

பாஜக சார்பில் தூத்துக்குடியில் போட்டியிடும் தமிழிசை சௌந்தரராஜன் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அதில் அவருக்கு 1.50 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் அவருக்கு இருப்பதாகவும், அசையா சொத்துகள் ரூ.50 மதிப்பில் இருப்பதாகவும் அவருடைய வேட்புமனுதாக்கலில் குறிப்பிட்டார்.

கடந்த நிதியாண்டில் தனக்கு ரூ.93,000 வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும்.அவர் பெயரில் ரூபாய் 1.87 லட்சம் கடன் இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

கனிமொழி

அதே தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிடுகின்றார். அவரின் சொத்து மதிப்பு பின்வருமாறு வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 21 கோடி மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ.8.92 கோடி அசையா சொத்துகளும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த நிதி ஆண்டில் அவருக்கு கிடைத்த வருமானம் ரூ.1.40 கோடியாகும். கடன் ரூபாய் 1.92 கோடி அவர் பெயரில் வங்கியில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆ.ராசா

Advertisment
Advertisements

நீலகிரியில் திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவிற்கு ரூ.2.80 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகளும், 31 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துகளும் உள்ளன. கடந்த நிதியாண்டில் அவரின் வருமானம் 9.95 லட்சம் என்று தன்னுடைய வேட்புமனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.

வசந்தகுமார்

கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வசந்தகுமார் தன்னுடைய சொத்துகளை பட்டியலிட்டுள்ளார்.

230 கோடி ரூபாய் அசையும் சொத்துகளும், 182 கோடி அளவிலான அசையா சொத்துகளும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த நிதியாண்டில் அவருடைய வருமானம் ரூ.29 கோடி கிடைக்கப்பெற்றதாகவும், 154 கோடி ரூபாய் மதிப்பில் வங்கிக் கடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க : சபாஷ் சரியான போட்டி… நேருக்கு நேர் களம் காணும் தமிழக அரசியல் தலைவர்கள்!

திருநாவுக்கரசர்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் செய்த வேட்புமனுத் தாக்கலில் ரூ.4.38 லட்சம் அசையும் சொத்துகளும், 27 லட்சம் மதிப்பில் அசையா சொத்துகளும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த நிதியாண்டில் அவருக்கு 5.57 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்ததாகவும், 40 ஆயிரம் ரூபாய் வரையில் வங்கிக்கடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கார்த்தி சிதம்பரம்

சிவகங்கையில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தின் சொத்துப்பட்டியல் இதோ. அவரிடம் அசையும் சொத்துகள் ரூ.24 கோடியே 13 லட்சத்து 73 ஆயிரத்து 158 உள்ளன என்றும், அவருடைய மனைவி பெயரில் 9 கோடியே 37 லட்சத்து 99 ஆயிரத்து 140 ரூபாய் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அசையாச் சொத்து மதிப்புகள் : 22 கோடியே 88 லட்சம் தனது பெயரிலும், மனைவி ஸ்ரீநிதி பெயரில் 22 கோடியே 96 லட்சம் ரூபாய் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

எச்.ராஜா

சிவகங்கையில் கார்த்தி சிதம்பரத்தை எதிர்த்து போட்டியிடுகிறார் எச்.ராஜா. அவரின் சொத்து மதிப்பு முறையே அசையும் சொத்துகள் 50 லட்சத்து 97 ஆயிரத்து 544 ரூபாய் மதிப்பில் உள்ளதாகவும், தன்னுடைய மனைவி பெயரில் 19 லட்சம் ரூபாய் இருப்பதாகவும், கூட்டுக்குடும்ப சொத்தாக ரூபாய் 15 லட்சம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அசையா சொத்து மதிப்புகள் ரூ 77 லட்சத்து 90 ஆயிரம் ராஜா பெயரிலும், மனைவி லலிதா பெயரில் 94 லட்சம் ரூபாய் சொத்துகள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

General Election

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: