Advertisment

பிரச்சாரத்தில் மாறி மாறி கலாய்த்துக் கொண்ட ஸ்டாலின் vs எடப்பாடி!

கட்டப்பஞ்சாயத்து இல்லை, ரவுடிஸம் இல்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கோடநாடு

கோடநாடு

எடப்பாடி vs ஸ்டாலின்: மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடக்க உள்ளது. இதற்கான தீவிர பிரச்சாரத்தில் தேசிய , மாநில கட்சிகளும் ஈடுபட்டுள்ளன. தேர்தலில் நம்பிக்கை மற்றும் வாக்கை பெற கட்சிகள் பெரிதும் நம்புவது பிரச்சாரத்தை தான்.

Advertisment

அதிலும் தமிழக தேர்தல் பிரச்சாரம் அனைவராலும் பெரிதும் கவனிக்க கூடியது. இந்த பிரச்சார பொதுக்கூட்டங்களில் அரசியல் கட்சிகள் வெளிப்படுத்தும் பேச்சு திறமையும் சிந்திக்க வைக்கவும் கருத்துக்கள் தான் நாளைய தேர்தலில் அவர்களின் வாக்கை தீர்மானிக்கும். அந்த வகையில் தமிழகத்தில் பிரதான கட்சிகளாக திகழும் அதிமுக - திமுக இரண்டுமே ஒரே நாளில் தேர்தல் அறிக்கை வெளியிட்டது மட்டுமில்லாமல் ஒரே நாளில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன.

திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் அவரின் கட்சி வேட்பாளர் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசி வருகிறார். அதே போல் அதிமுக சார்பில் முதல்வரும், அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசி வருகிறார். பிரச்சாரத்தில் இருவரும் ஒருவரையொருவர் மாறி மாறி குற்றம்சாட்டி பேசும் வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.

இதோ ஸ்டாலின், எடப்பாடி இன்றைய பிரச்சார ஹைலைட்ஸ்:

ஸ்டாலின் : தருமபுரி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்குமார் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் மணி ஆகியோரை ஆதரித்து, ஒடசல்பட்டியில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, “ பெட்ரோல் குண்டு வீசுவதிலும், வன்முறையை தூண்டுவதிலும் சோர்வு அடையாத கட்சி பாமக என கூறியவர் ஜெயலலிதா. அத்தகைய அதிமுகவுடன் இன்று அவர்கள் கூட்டணி வைத்திருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமியின் ஊழலை பாதுகாக்கும் காவலாளி சவுகிதார் மோடி. ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது என நீதிமன்றம் அறிவித்துள்ளதில் இருந்தே, மருத்துவமனையில் ஜெயலலிதா போட்ட கையெழுத்து போலி என தெரியவந்துள்ளது. இதன்மூலம் அப்போலோ மருத்துவமனையில், ஜெயலலிதாவின் உயிரற்ற உடலை வைத்துக் கொண்டு நாடகம் அரங்கேறி இருக்கிறது .

எம்ஜிஆர் ஜெயலலிதா பற்றி எடப்பாடி பழனிசாமி பேசுவதற்கு என்ன தகுதி உள்ளது. பாஜகவுடன் அதிமுகவை அடகு வைத்துவிட்டு ஆட்சி செய்கிறார் எடப்பாடி பழனிசாமி. டாக்டர் அன்புமணி, எப்போதும் கவர்ச்சியாகவும் கம்பீரமாகவும் இருப்பார். ஆனால், இப்போது அவர் முகத்தைப் பாருங்கள். கம்பீரமும் இல்லை, கவர்ச்சியும் இல்லை, அந்த வேகமும் இல்லை, அந்தத் துடிப்பும் இல்லை. ‘மாற்றம், முன்னேற்றம், அன்புமணி' என்று எல்லா இடத்திலேயும் போஸ்டர் அடித்து ஒட்டினார். ஆனால், இன்றைக்கு அவருடைய நிலை என்ன?

டயர நக்குனுவங்க என்று சொன்னது யார். எடப்பாடியையும் ஒபிஎஸ்-யும் அன்புமணி டயர் நக்கி என்று சொன்னார். டயர் நக்கி அருகில் நின்று ஓட்டுக் கேட்டுக் கொண்டு வருகிறீர்களே, வெட்கமாக இல்லையா?” என்றார்.

எடப்பாடி பழனிசாமி :

திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி, அ.தி.மு.க வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து, வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, “ திமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணி எந்த வித கொள்கையும் இல்லாத கூட்டணி, இந்த கூட்டணியை மக்கள் புறப்பணிப்பார்கள். தமிழகத்தில் எனது ஆட்சியில் கட்டப்பஞ்சாயத்து இல்லை, ரவுடிஸம் இல்லை.

டந்த காலத்தில் திமுக ஆட்சிக்காலத்தில் இருந்த மின்வெட்டை இப்போது எனது தலைமையிலான ஆட்சி இல்லாமல் செய்துள்ளது. திமுகவினர் விஞ்ஞான மூளை படைத்தவர்கள்; தேர்தலின் போது தில்லுமுல்லு செய்வார்கள்; அதனால், வாக்குசாவடிகளில் நாம் கவனமுடன் இருக்க வேண்டும்.

திமுக- காங்கிரஸ் கூட்டணி கொள்கை இல்லாத கூட்டணி, திமுக வெற்றி பெற்றால் ஒரு குடும்பம் மட்டுமே பயன்பெறும். ஸ்டாலின் வளர்ப்பு சரி இல்லை. அதனால் தான் மிகவும் தரக்குறைவாக பேசி வருகிறார். ஸ்டாலினுக்கு நாவடக்கம் தேவை இல்லை என்றால் விரைவில் கீழ்ப்பாக்கம் தான்.

தி.மு.க-வினர், அழகு நிலையத்தில் புகுந்து பெண்ணைத் தாக்கினார்கள். பரோட்டா கடையில் வயிறு முட்டச் சாப்பிட்டு பணம் கொடுக்காமல் கடை உரிமையாளரை அடித்தார்கள். செல்போன் கடையில், செல்போன் வாங்கிவிட்டு பணம் கேட்ட உரிமையாளரைத் தாக்கினார்கள். பஜ்ஜியைக் கூட ஓசியில் பிடுங்கி சாப்பிடுகிறார்கள்.

ஒரு நிறுவனத்தின் இயக்குநராக இருந்த சாதிக்பாட்சா என்பவர், தி.மு.க ஆட்சியில் மர்மமாக இறந்தார். அவரின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்காக, சாதிக்பாட்சாவின் மனைவி விளம்பரம் செய்திருந்தார். அதைப் பார்த்த தி.மு.க-வினர் பொறுத்துக்கொள்ள முடியாமல், நான்கு நாள்களுக்கு முன்பு சாதிக்பாட்சா மனைவி சென்ற காரை தாக்கினர். எதிர்க்கட்சியாக இருக்கும்போதே ரௌடித்தனம் செய்யும் தி.மு.க-வினர், ஆட்சிக்கு வந்தால் தமிழகம் தாங்காது

Dmk Aiadmk General Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment