Election 2019 live updates : நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, பிரசாரம் மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்துள்ளார். மதுரையில் தங்கியுள்ள அவர், தேனி மற்றும் ராமநாதபுரம் பகுதிகளில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் இன்று கலந்துகொள்கிறார்.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தமிழகத்தில் சென்னை மற்றும் கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே கலந்துகொண்டார். இந்நிலையில், இன்று மீண்டும் பிரசாரம் செய்ய உள்ளார். இதற்காக கேரளாவிலிருந்து நேற்றிரவு 10 மணியளவில், விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்.
அவரை துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், மதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யன் ஆகியோர் வரவேற்றனர். அங்கிருந்து போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்ட மோடி, பசுமலையில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளார். தேனியில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார்.
Election 2019 PM modi aiadmk dmk campaign live updates :
ஏப்ரல் 18ல் மக்களவை தேர்தலுக்கு வாக்களிப்பவர்கள், மே 19 ஆம் தேதி 4 தொகுதி இடைத்தேர்தலிலும் வாக்களிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் 4 தொகுதிகள் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு நடு விரலில் மை வைக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அரக்கோணம் நெமிலி அருகே வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக காங்கிரஸ். பிரமுகர் வினோபா, திமுக பிரமுகர் ரமேஷ் ஆகியோரிடம் இருந்து ரூ.2.04 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பணப் பட்டுவாடா செய்து கொண்டிருந்தபோது பறக்கும் படை அதிகாரி இருவரையும் மடக்கிப் பிடித்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
*முத்தலாக் முறை தடை செய்யப்பட்டதன் மூலம் இஸ்லாமிய பெண்களின் உரிமை மீட்கப்பட்டுள்ளது . இஸ்லாமிய பெண்களுக்கு பாஜக அரசு உரிய உரிமையை கொண்டு வந்துள்ளது.
*காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதிகள் தாக்கியபோது அமைதியாக இருந்தார்கள். இந்தியாவில் ஒரு தீவிரவாதியை கூட அனுமதிக்க முடியாது . நாட்டுக்காக உழைத்த தலைவர்களை போற்ற காங்கிரஸ் எதுவும் செய்ததில்லை.
*கூட்டாட்சி தத்துவத்தில் பாஜக வலிமையான நம்பிக்கை வைத்துள்ளது. காங்கிரசுக்கு வாக்களித்தால் அதிக வரி விதிப்புக்கு வழி வகுக்கும். சபரிமலை விவகாரத்தில் காங்கிரஸும், கம்யூனிஸ்ட் கட்சியும் கலாச்சாரத்தை அழிக்க நினைக்கின்றன.
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நீர் மேலாண்மைக்கு தனி அமைச்சகம், மீனவர்களுக்கான தனி அமைச்சகம் மற்றும் மீனவர்களுக்கும் கிஷான் கிரெடிட் கார்டு வழங்கப்படும் , பாஜகவின் தேர்தல் அறிக்கையில் நீர் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது : மோடி
PM Modi Election Campaign at Ramnathapuram Constituency #ElectionsWithPT https://t.co/HU1TXJB6e5
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) 13 April 2019
‘கழக தலைவர் @mkstalin அவர்கள் அறிவிப்பு’
19-05-2019 அன்று நடைபெறும் 4 சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள்:
சூலுர்: பொங்கலூர் நா.பழனிசாமி
அரவக்குறிச்சி: வி.செந்தில்பாலாஜி
திருப்பரங்குன்றம்: டாக்டர் பி.சரவணன்
ஒட்டபிடாரம்: எம்.சி.சண்முகய்யா#DMK4TN pic.twitter.com/MYdNPs7VIq
— DMK - Dravida Munnetra Kazhagam (@arivalayam) 13 April 2019
திருப்பரங்குன்றம், சூலூர் உள்ளிட்ட 4 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!
சூலூர்- பொங்கலூர் நா.பழனிசாமி
அரவக்குறிச்சி- செந்தில் பாலாஜி
திருப்பரங்குன்றம்- பி.சரவணன்
ஒட்டப்பிடாரம்- எம்.சி.சண்முகையா
* இது எம்ஜிஆர், ஜெயலலிதா தொகுதி, இவர்களின் மண்ணில் காங்கிரஸ் வேட்பாளரால் ஒன்றும் செய்ய முடியாது.
*மத்திய அரசின் திட்டங்கள் மூலம் தமிழக விவசாயிகன் பயனடைந்து வருகின்றனர்
*தேச பாதுகாப்பை அரசியலாக்கி, ராணுவத்தினரை காங்கிரஸ் அவமதிக்கிறது. நமது எதிராளிகளின் ஊழல்கள் பற்றி நான் கணக்கில் வைத்திருக்கிறேன்.
*மக்களை திமுகவும், காங்கிரசும் தவறாக வழிநடத்த முயற்சி செய்கின்றன.பாஜக ஆட்சியில் நாடு அடைந்து வரும் வளர்ச்சியை காங்கிரஸ், திமுகவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
*கங்கையை போல் வைகையை தூய்மைப்படுத்த விரும்புகிறேன்
துணை முதல்வர் மகனும் தேனி வேட்பாளருமான ரவீந்திரநாத் குமார் மோடி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்.பிரதமர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார், மோடியின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்#PMModi | #Theni | #RavindranathKumar | #ElectionswithThanthiTV pic.twitter.com/RSXUZbjriz— Thanthi TV (@ThanthiTV) 13 April 2019
#PMNarendraModi #ElectionCampaign at Theni Constituency #ElectionsWithPT https://t.co/WYBYWhtK4O
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) 13 April 2019
இன்று தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் நடைபெறும் பிஜேபி தேர்தல் பிரச்சாரத்தில் அனைவரும் கலந்துக் கொள்ளுமாறும் பிரதமர் மோடி ட்விட்டரில் அழைப்பு விடுத்துள்ளார்.
Today’s rallies will take place in Tamil Nadu and Karnataka.
I invite you all to join the rallies in Theni, Ramanathapuram, Mangaluru and Bengaluru.
— Chowkidar Narendra Modi (@narendramodi) 13 April 2019
மத்திய சென்னை பாமக வேட்பாளர் சாம்பால் மீது எழும்பூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக பிரசாரத்தில் ஈடுபட்டதாக தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Election 2019 PM modi aiadmk dmk campaign live updates :
மதுரையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம், தேனிக்கு செல்கிறார். தேனி தொகுதி அதிமுக வேட்பாளரும், ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத் குமார் மற்றும் திண்டுக்கல், மதுரை, விருதுநகர் தொகுதி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார்.
அதைத் தொடர்ந்து ராமநாதபுரம் செல்லும் பிரதமர் மோடி, பாஜக வேட்பாளர்கள் நயினார் நாகேந்திரன், ஹெச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் கிருஷ்ணசாமி ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார். இதையடுத்து, ஹெலிகாப்டர் மூலம் மதுரை வரும் பிரதமர், அங்கிருந்து விமானம் மூலம் பெங்களூரு செல்ல உள்ளார்.
read more.. கார்த்தி சிதம்பரம் - ஹெச் ராஜா மோதல் எப்படி? கள நிலவரம்
முன்னதாக, மோடியை வரவேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், 40 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும்,இடைத்தேர்தல் வேட்பாளர் பட்டியல் குறித்து விரைவில் அறிவிக்கபடும் என்றும் தெரிவித்தார்.
முன்னதாக, கேரள மாநிலத்தின் கோழிக்கோட்டில் நேற்று மாலை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரதமர், அமைதியின் நிலமான கேரளத்தில் அரசியல் வன்முறையை காங்கிரஸும், இடதுசாரிக் கட்சிகளும் கொண்டு வந்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
ஐக்கிய ஜனநாயக முன்னணி, இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சிகளால் கேரளாவின் கலாசாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கேரளா என்பது அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் நிலமாக உள்ளது. பொறுப்பற்ற கம்யூனிஸ்ட்கள் மற்றும் காங்கிரஸால், அரசியல் வன்முறை கலாசாரம் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும் படிக்க.. 1,114 வாட்ஸ் ஆப் குரூப்களுக்கு அட்மினாக செயல்படும் பா.ஜ.க ஐ.டி பிரிவு தலைவர்!
மக்களுக்காக சேவையாற்றியதற்காக தேசப்பற்றுமிக்க பல்வேறு ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தொண்டர்கள் தாக்கப்பட்டும், கொல்லப்பட்டும் உள்ளனர் எனக் கூறினார்.அதனைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட்கள் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் பெயரளவில் மட்டுமே வேறுபட்டிருப்பதாகவும், மாநிலத்தை கொள்ளையடிப்பதில் இரு கூட்டணியும் ஒரே மாதிரியாக இருப்பதாகவும் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.
மேலும் படிக்க.. காங்கிரஸ் ஹீரோ.. பிஜேபி ஜீரோ! சேலத்தில் ஸ்டாலின் பரப்புரை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights