Election 2019 Prakash Raj campaigning in Tamil : எழுத்தாளர் கௌரி லங்கேஷ் கொலை செய்யப்பட்ட பின்பு, ஜெஸ்ட் அஸ்கிங் என்ற பெயரில் ஆளும் கட்சிக்கு எதிராக நிறைய நிறைய கேள்விகளை தொடுத்து வந்தார் நடிகர் பிரகாஷ் ராஜ். பல்வேறு பக்கங்களில் இருந்து தொடர்ந்து அழுத்தம் வந்தாலும், தான் கொண்ட கொள்கையில் உறுதியாக நிலைத்து நின்றவர் பிரகாஷ் ராஜ்.
தமிழில் பேசிய பிரகாஷ் ராஜ்
அதனால் தான் இம்முறை சுயேச்சையாக தேர்தலில் போட்டியிடுகின்றேன் என்று கூறி தமிழர்கள் அதிகம் வாழும் கர்நாடகாவின் மத்திய பெங்களூர் தொகுதியில் வேட்பாளராக நிற்கிறார். இந்நிலையில் நேற்று மத்திய பெங்களூரில் இருக்கும் ஒக்கலிபுரம் குடிசை பகுதியில் தமிழில் பேசி வாக்கு சேகரித்தார்.
“ஜெயித்தவனின் சம்பளம் நம்ம காசு, அவன் கார் நம்ம காசு, அவன் செக்கியூரிட்டி நம்ம காசு, அவன் ப்ளைட் நம்ம காசு... 5 வருசம் கழிச்சு வாழ்நாள் முழுவதும் அவன் வாங்குற பென்சன் நம்ம காசு... என் வீட்டு தெருவுக்கு தண்ணீ கொடுக்காம யாரு வீட்டுக்கு கொடுத்தன்னு கேக்கமாட்டீங்களா என்று தமிழில் பேசி வாக்கு சேகரித்தார்.
Read More : வறுமையை ஒழிக்க இறுதி ஆயுதம்… ஏழை குடும்பங்களுக்கு ரூ.72 ஆயிரம் நிதி உதவி – ராகுல் காந்தி