திருப்பரங்குன்றம் தேர்தலுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற திமுக!

அனைத்து கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்

Election 2019 Seat Sharing Live Updates : தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழக்கத்தில் உள்ள அனைத்து கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.

தமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் மாதம் 18-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தின் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடை தேர்தலும் மக்களவைத் தேர்தலுடன் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத் தேர்தலும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Election 2019 : தேர்தல் 2019 களப்பணி ஏற்பாடுகள்

நேற்று மதியம் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே தேமுதிகவுடன் கூட்டணி சேர்ந்தது அதிமுக. இவ்வாறு ஒவ்வொரு கட்சியும் மும்முரமாக களப்பணியில் இறங்கியுள்ளது.

05:10 PM : தலைமைச் செயலகத்தில் தேர்தல் ஆணையத்தின் அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியுள்ளது.

04:45 PM : திருப்பரங்குன்றம் தேர்தலுக்கு எதிரான வழக்கை திரும்பப் பெறுவதாக தேர்தல் ஆணையத்திற்கு திமுகவின் சரவணன் கடிதம் அளித்துள்ளார். வழக்கு நிலுவையில் இருப்பதால் தேர்தல் நடத்தவில்லை என்பதை தொலைக்காட்சி மூலம் அறிந்தவுடன் கடிதம் அளிக்க வந்ததாக கூறினார்.

4:30 PM : ஓ.பி.எஸ் மகனிடம் நேர்காணல்

ஓ. பன்னீர்செல்வம் மகனிடம் தேர்தலுக்காக நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது

2:30 PM : காங்கிரஸ் கட்சிக்கு என்னென்ன தொகுதிகள்

கன்னியாகுமரி, விருதுநகர், சிவகங்கை உட்பட 5 தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்ய திமுக பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்.

1:30 PM : அதிமுக அறிவிப்பு

17 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் 13ம் தேதி விருப்பமனு அளிக்கலாம். திருவாரூருக்கு ஏற்கனவே விருப்பமனு பெறப்பட்டுள்ளதால் அதற்கு விருப்ப மனு அளிக்க தேவையில்லை என்று அதிமுக அறிவித்துள்ளது.

12:45 PM : அதிமுக நேர்காணல் இன்று

மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம் ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேர்காணல் தொடங்கியது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி முன்னிலையில் நேர்காணல் நடைபெற்று வருகிறது.

12:45 PM : மக்கள் நீதி மய்யம் கட்சி நேர்காணல் இன்று

மக்கள் நீதி மய்யம் கட்சியில் மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு நேர்காணல் தொடங்கியது கட்சி தலைவர் கமல்ஹாசன், துணைத்தலைவர் மகேந்திரன் உள்ளிட்டோர் நேர்காணல் செய்கின்றனர்

12:30 PM : மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு

மதுரையில் மக்களவைத் தேர்தலை ஒத்திவைக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் அனைத்து கட்சிகள் சார்பில் கோரிக்கை மனு. மதுரையில் ஏப்ரல் 18ம் தேதி தேரோட்டம் நடப்பதால் வாக்குப்பதிவு நேரத்தை அதிகரிக்க தயார் என மதுரை ஆட்சியர் நடராஜன்.

12:15 PM : மு.க. ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பு

இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றும், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்து நாளை இரவுக்குள் அறிவிக்கப்படும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

12:00 PM : மு.க. ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பு

வழக்குகளை காரணம் காட்டி தேர்தல் அறிவிக்கப்படவில்லை என கூறுவதில் எந்த முகாந்திரமும் இல்லை; இதில் உள்நோக்கம் உள்ளது 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துவதே நியாயம் என மு.க. ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.

11:30 AM : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ ஆலோசனை கூட்டம்

மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் மாலை 5 மணிக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ ஆலோசனை நடத்தவுள்ளார்

11:00 AM : தேர்தலை தள்ளி வைக்க முறையீடு

ஏப்.18ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தேரோட்டம் வருவதால், மதுரையில் தேர்தலை தள்ளிவைக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு

10:50 AM : தேர்தல் அணையத்தை நாட திமுக முடிவு

அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாதது குறித்து தேர்தல் ஆணையத்தை நாட திமுக திட்டம். மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெறும் எம்.பி, எம் எல் ஏக்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்.

10:30 AM : காங்கிரஸ் – விசிக கட்சிகளுக்கு திமுக அழைப்பு

எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ், விசிகவுக்கு திமுக அழைப்பு. அண்ணா அறிவாலயத்தில் இன்று பேச்சுவார்த்தை நடத்த இரு கட்சிகளுக்கும் திமுக அழைப்பு விடுத்துள்ளது

9:45 AM : திமுக மாநாடு

திமுக வடக்கு மண்டல மாநாடு வரும் 17. 3 .2019ம் தேதி நடைப்பெற உள்ளது. வேலூர் மத்திய மாவட்டம் அணைக்கட்டு தொகுதி உட்பட்ட அணைக்கட்டு கிழக்கு ஒன்றியம் உட்பட்ட கந்தநேரியில் NHசாலையில் ஆரியாஸ் ஓட்டல் அருகில் மாநாடு வேலை நடைப்பெற்று வருகிறது.

Election 2019 Seat Sharing

9:30 AM : அதிமுக நேர்காணல்

அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைகள் அனைத்து நேற்றோரு நிறைவடைந்த நிலையில் இன்று நேர்காணல் நடத்த இருக்கின்றனர்.

Get all the Latest Tamil News and Election 2020 News at Indian Express Tamil. You can also catch all the latest Lok Sabha Election 2019 Schedule by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close