General Election 2019: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அனைத்துக் கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை தேர்வு செய்து, இறுதி பட்டியலை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் முதற் கட்டமாக 5 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தது அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணியில் இருக்கும் பா.ம.க. மொத்தம் 7 தொகுதிகளைப் பெற்றுள்ள அக்கட்சி தற்போது மீதமுள்ள இருவரின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.
தர்மபுரி – டாக்டர். அன்புமணி ராமதாஸ், விழுப்புரம் – வடிவேல் இராவணன், அரக்கோணம் – ஏ.கே. மூர்த்தி, மத்திய சென்னை – சாம் பால், கடலூர் – டாக்டர். கோவிந்தசாமி, என முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியிருந்தது. தற்போது ஸ்ரீபெரும்புதூரில் வைத்திலிங்கமும், திண்டுக்கல்லில் ஜோதி முத்துவும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் விழுப்புரம் தவிர்த்து மற்ற 6 தொகுதிகளில் பா.ம.க - தி.மு.க நேரடியாக மோதுகிறது. டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க 2 இடங்களில் பா.ம.க-வை எதிர்த்து நிற்கிறது.
அதன் விபரங்கள் பின் வருமாறு:
தர்மபுரி – டாக்டர். அன்புமணி ராமதாஸ் (பா.ம.க) - டாக்டர் எஸ்.செந்தில்குமார் (தி.மு.க)
அரக்கோணம் – ஏ.கே. மூர்த்தி (பா.ம.க) - எஸ். ஜெகத்ரட்சகன் (தி.மு.க)
மத்திய சென்னை – சாம் பால் (பா.ம.க) - தயாநிதி மாறன் (தி.மு.க)
கடலூர் – டாக்டர். கோவிந்தசாமி (பா.ம.க) - டி.ஆர்.பி.எஸ். ஸ்ரீரமேஷ் (தி.மு.க)
ஸ்ரீபெரும்புதூர் - வைத்திலிங்கம் (பா.ம.க) - டி.ஆர்.பாலு (தி.மு.க) - தாம்பரம் நாராயணன் (அ.ம.மு.க)
திண்டுக்கல் - ஜோதி முத்து (பா.ம.க) - ப. வேலுச்சாமி (தி.மு.க)
விழுப்புரம் தொகுதியை கூட்டணிக் கட்சியான வி.சி.க-வுக்குக் கொடுத்திருக்கிறது தி.மு.க. அங்கு பா.ம.க-வின் வடிவேல் இராவணனுடன் வி.சி.க-வின் ரவிக்குமார் மோதுகிறார். அ.ம.மு.க-வில் வானூர் என்.கணபதி போட்டியிடுகிறார்.
டி.டி.வி தினகரன் முதற்கட்டமாக 24 நாடாளுமன்ற வேட்பாளர்களை மட்டும் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.