Election 2019 Tamil Nadu alliance : 2019ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் என்பதில் தொடர் இழுபறி நீடித்து வருகிறது. தேமுதிக யார் பக்கம் என்ற குழப்பம் இன்று வரை நீடித்து வருகின்ற நிலையில், திமுக, அதிமுக கட்சிகள் தங்களின் கூட்டணிகள் மற்றும் தொகுதிப் பங்கீட்டிற்கு இறுதி வடிவம் கொண்டு வரத் துவங்கியுள்ளன.
மேலும் படிக்க : அதிமுக.வுக்கு கிருஷ்ணசாமி, திமுக.வுக்கு பாரிவேந்தர்: தொடரும் கூட்டணி வேட்டை
Election 2019 Tamil Nadu alliance
07:15 PM : கனிமொழி விருப்ப மனு தாக்கல்
திமுக சார்பில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட, நாளை(மார்ச்.4) காலை விருப்ப மனு தாக்கல் செய்கிறார் எம்.பி. கனிமொழி.
07:00 PM : 6ம் தேதிக்குள் கூட்டணி இறுதியாகும்
சென்னையில் 6ஆம் தேதி நடைபெறும் தேர்தல் பிரசார மாநாட்டிற்கு முன் கூட்டணி இறுதிவடிவம் பெறும். தமிழகம், புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
03:50 PM : பணி நிமித்தமாக தொகுதிப் பங்கீட்டிற்கு வர இயலவில்லை
பணி நிமித்தம் காரணமாக தொகுதி பங்கீட்டு ஆலோசனைக்கு இன்று வர இயலவில்லை என்று தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். மேலும் இன்று நடைபெற இருந்த ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
13:30 PM : தேமுதிக அவசர ஆலோசனைக் கூட்டம்
மார்ச் 5ம் தேதி தேமுதிக சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
12:00 PM : தொல்.திருமாவளவன் வருகையில் தாமதம்
விடுதலை சிறுத்தைக் கட்சியினருடனான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று காலை 11 மணிக்கு நடைபெற இருப்பதாக இருந்த நிலையில், தற்போது வரை அண்ணா அறிவாலயம் வரவில்லை தொல்.திருமாவளவன் என்பது குறிப்பிடத்தக்கது.
11:45 AM : அரசியல் நிமித்தமான சந்திப்பு
விஜயகாந்தை சந்தித்து தன்னுடைய அரசியல் நிலைப்பாடு குறித்து பேசியதாக சரத் குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
11:30 AM : சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத் குமார் - விஜயகாந்த் சந்திப்பு
சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் மற்றும் நடிகருமான சரத்குமார் தற்போது சாலிகிராமத்தில் விஜயகாந்தை சந்தித்து பேசி வருகிறார்.
11:15 AM : அண்ணா அறிவாலயம் விரைந்தார் முக ஸ்டாலின்
விடுதலை சிறுத்தைக் கட்சி சார்பில் திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோர் இன்னும் சற்று நேரத்தில் அண்ணா அறிவாலயம் வர உள்ளனர்.
11:00 AM : இந்திய ஜனநாயக் கட்சி திமுக கூட்டணிக்கு ஆதரவு
இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு தன்னுடைய ஆதரவை அளித்துள்ளார். நேற்று அண்ணா அறிவாலயம் வந்த அவர் முக ஸ்டாலினுக்கு பட்டாடை போர்த்தி வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்துக் கொண்டார்.
10:30 AM : கூட்டணி விவகாரத்தில் தேமுதிக தாமதிக்கவில்லை
அதிமுகவுடனான பாஜக கூட்டணியில் தேமுதிக இணைய தாமதம் செய்யவில்லை. மாறாக போதுமான அளவு கால அவகாசம் எடுத்துக் கொள்கிறது என பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் கூறியுள்ளார்.
10:00 AM : தேமுதிக யார் பக்கம் ?
தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த், அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவிட்டு வீடு திரும்பிய பின்னர், ஒவ்வொரு கட்சியினரும் நேரில் சென்று பார்வையிட்டனர். பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் மற்றும் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் முதலில் நேரில் சென்று பார்த்தார்.
பிறகு நடிகர் மற்றும் ரஜினி மக்கள் மன்றத்தின் தலைவர் ரஜினி காந்த் நட்பு ரீதியில் விஜயகாந்தை நேரில் சென்று பார்வையிட்டார். பின்பு திமுக தலைவர் ஸ்டாலினும் அவரை நேரில் பார்வையிட்டு வந்தனர். பிறகு கூட்டணிக்கான பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதிமுக மற்றும் பாஜக வலுவான மெகா கூட்டணியை அமைத்துள்ளது. விரைவில் தேமுதிகவும் இந்த கூட்டணியில் இணையும் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று அறிவித்தார்.
09:30 AM : ராகுல் காந்தி தமிழகம் வருகை
மார்ச் 13ம் தேதி, நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழகம் வருகிறார் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
09:15 AM : திமுக கூட்டணி
திமுக கூட்டணியில் ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டன. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒரு இடம் போக மீதமுள்ள 28 இடங்களில் மதிமுக, விசிக, சி.பி.எம்., சி.பி.ஐ. ஆகிய கட்சிகள் தங்களுக்கு அளிக்கப்படும் தொகுதிகள் குறித்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க
09:00 AM : அதிமுக கூட்டணி
அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, புதிய தமிழகம் கட்சியினர் உள்ளனர்.