Advertisment

அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் : சென்னையில் பிரச்சாரத்தை தொடங்கிய கமல்ஹாசன்!

தேர்தல் களத்தில் அரசியல் தலைவர்கள் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் :  சென்னையில் பிரச்சாரத்தை தொடங்கிய கமல்ஹாசன்!

Election 2019 Tamil nadu : தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆனால் அதையும் ஓவர் டெக் செய்யும் அளவிற்கு நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சார களம் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.

Advertisment

அரசியல் கட்சிகள் தங்கள் கட்சியின் வேட்பாளர்களை மக்கள் முன்பு முன்னிறுத்தி வாக்கு சேகரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுப்பட்டு வருகின்றன.

பிரச்சார ஹைலைட்ஸ்:

மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் இன்று சென்னையில் பிரசாரத்தை தொடங்கினார்.  முதலில்  பல்லாவர பகுதியில் காரில் சென்றுக் கொண்டே மக்களிடம் பிரச்சாரம் செய்தார்.   அதனைத் தொடர்ந்து  தாம்பரம், படப்பை, ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார்.   ஸ்ரீபெரும்பத்தூர் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம்  வேட்பாளர் வழக்கறிஞர் ஸ்ரீதரை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம் செய்து வருகிறார்.

 Tamil nadu leaders today's campaign Tamil nadu leaders today's campaign : மக்களிடம் நேரடியாக உரையாற்றினார்

 

 Tamil nadu leaders today's campaign Tamil nadu leaders today's campaign : பல்லாவரத்தில் கமல்ஹாசன் பிரச்சாரம்

 Tamil nadu leaders today's campaign Tamil nadu leaders today's campaign : மக்கள் நீதி மைய்யம் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம்

 

வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை ஆகிய 3 மக்களவைத் தொகுதிகள், பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதி ஆகியவற்றுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர். தென்சென்னை மற்றும் மத்திய சென்னை தொகுதிகளில் அனல் பறக்கும் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

வடசென்னை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கலாநிதி திருவொற்றியூரில் பிரச்சாரத்தைத் தொடங்கினார். அவருடன் எம்எல்ஏக்கள் சுதர்சனம், கேபிபி.சாமி ஆகியோர் பிரச்சாரத்தில் பங்கேற்று வாக்கு சேகரித்தனர்.

திமுக கூட்டணி சார்பில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தருக்கு வாக்கு கேட்டு முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது 15 லட்சம் ரூபாய் தருவதாகக் கூறிய மோடி,கையில் இருந்த 500 மற்றும் ஆயிரம் ரூபாயையும் பறித்துக் கொண்டதாக விமர்சித்தார்.

ஊழலுக்கு மரண அடி கொடுக்கும் வகையில் திமுக வேட்பாளர் ஆ.ராசாவை டெபாசிட் இழக்க செய்யவேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார். கோவை மாவட்டம், அன்னூரில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். முன்னதாக பிரேமலதா பிரசாரத்தில் ஈடுபட்ட போது, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவை போல், கூடியிருந்த கூட்டத்தை பார்த்து “செய்வீர்களா” என மூன்று முறை கேட்டு பேச்சை தொடர்ந்தது அங்கு கூடியிருந்த தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் செ.ராமலிங்கத்திற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கக் கோரி கும்பகோணத்தில் உள்ள அரைக்காசு அம்மாள் பள்ளிவாசலில் தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் தி.மு.க. இளைஞரணி மற்றும் கழக பொறுப்பாளர்கள் வாக்கு சேகரித்தனர்.

Dmk Aiadmk Dmdk General Election
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment