Election 2019 tamilnadu campaign : நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. தமிழக்கத்தில் இதனுடன் சேர்த்து 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தலில் களம் காணும் தங்களது கட்சியினருக்கும், கூட்டணி கட்சியை சேர்ந்த வேட்பாளர்களுக்கும் ஆதரவாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க.. வரலாறு பேசும் திண்டுக்கல் தொகுதியை கோட்டை விட்ட அதிமுக !
Election 2019 tamilnadu campaign live update: பிரச்சார பீரங்கியாக களம் இறங்கியுள்ள் நட்சத்திர பேச்சாளர்கள். அனல் பறக்கும் தேர்தல் களத்தின் நேரடி தகவல்கள்!
Live Blog
வாக்குச்சாவடிகளை அபகரிக்க திட்டமிட்டுள்ளனர் என பாமகவை சேர்ந்த அன்புமணி ராமதாஸ் மீது தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது.
முதலமைச்சர், துணை முதலமைச்சர் தொடர்பாக அவதூறு கருத்துகளை பரப்புவதாக அதிமுக அளித்த புகாரின் அடிப்படையில் திமுக ஐ.டி பிரிவு மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சென்னை குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.
தேனி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமாரை ஆதரித்து, அலங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ‘முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உச்சநீதிமன்ற அனுமதியுடன் 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் மாபெரும் கல்வி புரட்சி நிகழ்ந்துள்ளது. விவசாயிகளுக்கு உதவும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.’ என்றார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.
கிருஷ்ணர் குறித்து திராவிடர் கழகத் தலைவர் வீரமணி விமர்சனம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியில், ‘கி. வீரமணி விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இயக்கங்கள் சதி செய்து, திரித்து பரப்புகின்றன. கிருஷ்ணர் குறித்து திராவிட கழக தலைவர் கி. வீரமணி பேசியது உண்மையாக இருந்தால் அது தவறு தான். கிருஷ்ணர் குறித்து மேற்கோள் காட்டிதான் பேசினாரே தவிர, உள்நோக்கத்துடன் கூறவில்லை. மேலும் கி. வீரமணி, கிருஷ்ணர் குறித்து பேசியது பெரியார் திடலில் தானே தவிர, தேர்தல் பிரசார கூட்டத்தில் அல்ல.’ என்றார்.
மத்திய சென்னை பாமக வேட்பாளரான சாம் பால் மது அருந்துவது போன்ற புகைபடமொன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இது தொடர்பாக விளக்கமளித்த சாம் பால் எதிர்கட்சிகள் மார்ஃபிங் செய்து பரப்பி அவதூறு செய்வதாக குற்றம்சாட்டினார்.திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் பிரச்சாரத்தின் போது இந்த படம் குறித்து அவதூறு பரப்புரை செய்ததாகவும், செய்தி வெளியிட்ட தனியார் தொலைக்காட்சிகள் மீதும் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தார்.
Is PMK leader Anbumani Ramadoss hinting at a possible booth capture in Kancheepuram constituency? Very controversial statement. #PMK #AIADMK #Elections2019 #TNPolitics pic.twitter.com/iSF2cN4e0r
— Shilpa Nair (@NairShilpa1308) 5 April 2019
திருப்போரூரில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்த அன்புமணி, தேர்தல் அன்று என்ன நடக்கும்? பூத்தில் என்ன நடக்கும்? பூத்தில் நாம் தான் இருப்போம். நம்முடைய ஆட்கள் மட்டும் தான் இருப்பார்கள். அப்புறம் என்ன சொல்ல வேண்டுமா வெளியில், என்ன புரிகிறதா? என பேசினார்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Highlights