Tamilnadu Election 2019: தமிழகத்தில் இன்று மக்களவை மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.
முன்பு எப்போதையும் விட இந்தத் தேர்தலில் வாக்களிக்க பொதுமக்கள் அதிக ஆர்வம் செலுத்துகிறார்கள்.
தமிழகத்தின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் படிப்பு மற்றும் வேலைக்காக சென்னையில் வசிக்கிறார்கள். இந்நிலையில் ஓட்டுப் போடுவதற்காக நேற்று மாலை சொந்த ஊருக்குக் கிளம்பினர்.
பண்டிகை நாட்களைப் போல் சென்னை சென்ட்ரல், எழும்பூர் ஆகிய ரயில் நிலையங்களும், கோயம்பேடு பேருந்து நிலையமும் மக்கள் வெள்ளத்தில் தத்தளித்தது.
ஆனால், வெளியூருக்கு இயக்கப்படும் பேருந்துகள் குறித்து முன் கூட்டியே திட்டமிடப்படாததால், பேருந்துகள் இன்றி பொதுமக்கள் தவித்தனர்.
கிடைக்கும் பேருந்துகளில் பயணிகள் ஏறிக் கொண்டதால் பேருந்து நிரம்பி வழிந்தது. ஆர்வத்துடன் வந்தவர்கள் பேருந்து இல்லாத விரக்தியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு வந்த போலீசார், பயணிகள் மீது தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். இதனால் பலருக்கு காயம் ஏற்பட்டது.
பின்னர் கிடைத்த பேருந்துகளின் கூரையின் மீதேறி பயணிகள் பயணம் செய்தனர். சில மணிநேரங்களில் போய் சேரும் இடங்களுக்கு, காலை நேர பேருந்துகளின் மீதேறி பயணம் செய்தனர்.
முன்பு எப்போதையும் விட, இத்தேர்தலில் வாக்களிக்க பொதுமக்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவது குறிப்பிடத்தக்கது.