திருமா போட்டியிடும் சிதம்பரம் தொகுதியில் கடும் மோதல்! 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

இரு தரப்புக்கும் மோதல் வெடித்தது. இதில் அந்த கிராமத்திலுள்ள 20க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன

By: April 18, 2019, 6:09:38 PM

சிதம்பரம் தொகுதியில் உள்ள அரியலூரில் உள்ள பொன்பரப்பி கிராமத்தில் இருதரப்பினர் இடையே நடந்த மோதலில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளது.

நாடு முழுவதும் இன்று இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்தது. தமிழகத்திலும் 37 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் விறுவிறுப்பாக தேர்தல் நடந்து முடித்து. கடந்த காலங்களில் இல்லாத அளவிற்கு இம்முறை திரளான மக்கள் வாக்களிக்க அதிக ஆர்வம் காட்டினார்கள். மாலை 5 மணி நிலவரப்படி தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் 63.73% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். இருப்பினும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளானார்கள். கடும் வெயிலையும் பொருட்படுத்தாது தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வந்த மக்களுக்கு, இயந்திர கோளாறுகள் மன உளைச்சலையே ஏற்படுத்தின.

அதேசமயம் தமிழகம் முழுவதும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாக தலைமைத்  தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களிடம் ஒருபக்கம் பேட்டியளிக்க, மறுபக்கம் சிதம்பரத்தில் இரு தரப்பினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

சிதம்பரம் தொகுதியில் உள்ள அரியலூர் பொன்பரப்பி கிராமத்தில்  இருதரப்பினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிகிறது. சிதம்பரம் (தனி) தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், திமுக கூட்டணியில், பானை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், இன்று மதியம் தொகுதிக்கு உட்பட்ட பொன்பரப்பி கிராமத்தில் வேறொரு கட்சியை சேர்ந்தவர்கள் பானையை தெருவில் போட்டு உடைக்கும் போராட்டத்தை நடத்தியதாக தெரிகிறது. இதை பார்த்த, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சிலர், பானையை உடைத்த கட்சியினரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, இரு தரப்புக்கும் மோதல் வெடித்தது. இதில் அந்த கிராமத்திலுள்ள 20க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன.

இதையடுத்து மாவட்ட எஸ்பி தலைமையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாலை 5 மணி நிலவரப்படி, சிதம்பரம் தொகுதியில் தான் அதிகபட்சமாக 70.73 வாக்குகள் பதிவாகி இருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Election 2021 News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Lok Sabha Election 2019 Schedule by following us on Twitter and Facebook

Web Title:Election 2019 thirumavalavan chidambaram constituency faced huge violence

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X