/tamil-ie/media/media_files/uploads/2019/04/z377.jpg)
gift box symbol allocated for ammk
தமிழகத்தில் காலியாக உள்ள சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டபிடாரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வருகிற மே மாதம் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, மக்களவை தேர்தலில் ஒதுக்கியது போலவே, பரிசு பெட்டகம் சின்னத்தை மீண்டும் ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தில் தினகரன் சார்பாக அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், நான்கு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலிலும் அமமுக வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் பரிசுப் பெட்டகம் சின்னத்தை இன்று ஒதுக்கியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.