டிடிவி தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னம் தரமுடியாது என்று தலைமை தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர், டிடிவி தினகரன், ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட இந்த சின்னம் ஒதுக்கப்பட்டது.
குக்கர் சின்னம் ஒதுக்கக் கோரிய மனு
அந்த இடைத்தேர்தலில், குக்கர் சின்னத்தில் நின்ற டிடிவு தினகரன் வெற்றி பெற்றார். பின்பு திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அங்கும், நடைபெற இருக்கும் பொதுத்தேர்தலுக்கும் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னத்தையே ஒதுக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
அதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தேர்தல் ஆணையம் தரப்பில் இருந்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இன்று தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கு மட்டுமே பொதுப்பட்டியலில் இருக்கும் சின்னத்தை ஒதுக்க இயலும். அங்கீகரிக்கப்படாத ஒரு அரசியல் கட்சிக்கு பொதுப்பட்டியலில் உள்ள சின்னத்தை தர இயலாது என்றும் அது நடைமுறையில் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : கொடநாடு கொலைகள் தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கக் கோரி திமுகவினர் போராட்டம்