election photo gallery : மக்களவை பொதுத்தேர்தலை முன்னிட்டு தமிழகம், புதுச்சேரியில் 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 19 சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கியது.
தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் இன்று நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மற்ற எல்லா மாநிலங்களிலும் தமிழ்நாட்டைப்போலவே 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கினாலும், முடிகிற நேரம் மாறுபடுகிறது. அசாமில் மாலை 5 மணிக்கும், பீகாரில் 6 மணிக்கும், சத்தீஷ்காரில் சில இடங்களில் 3 மணிக்கும், சில இடங்களில் 5 மணிக்கும், காஷ்மீரில் 6 மணிக்கும், கர்நாடகத்தில் 6 மணிக்கும், மஹாராஷ்டிராவில் 6 மணிக்கும், மணிப்பூரில் 4 மணிக்கும், ஒடிசாவில் சில இடங்களில் 4 மணிக்கும், பல இடங்களில் 6 மணிக்கும், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகியவற்றில் 6 மணிக்கும் முடிகிறது.
இந்த முறை மின்னணு வாக்கு எந்திரங்களுடன் ‘விவிபாட்’ என்னும் வாக்கை உறுதி செய்கிற கருவியும் பொருத்தப்படுவதால், ஒவ்வொரு வாக்காளரும் தங்களது வாக்கு உரிய சின்னத்தில் பதிவாகி உள்ளதா என்பதை அதில் பார்த்து உறுதி செய்து கொள்ள முடியும்.
வாக்களிப்பது ஜனநாயக கடமை என உணர்ந்த வாக்காளர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று வாக்குசாவடியில் தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். இவர்களுடன் சேர்ந்து அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்கள் தங்களது வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.
காலை முதல் வாக்குசாவடிக்கு வருகை தந்த பிரபலங்கள் மற்றும் வாக்குசாவடியில் அரங்கேறிய சுவாரசிய தருணங்கள் புகைப்படங்களாக உங்கள் பார்வைக்கு...
1.
election photo gallery : சென்னை தி நகரில் மனைவியுடன் சேர்ந்து ஓட்டு போட்ட நடிகர் சூர்யா
2.
election photo gallery : வரிசையில் காத்திருந்த சூர்யா, ஜோதிகா
3.
election photo gallery : ஜனநாயக கடமையாற்றிய நடிகர் சிவக்குமார்
4.
election photo gallery : மனைவியுடன் ஓட்டு போட்ட நடிகர் ஸ்ரீகாந்த்
5.
election photo gallery : நடிகர் விஜய் ஆண்டனி ஓட்டு போட்ட காட்சி
6.
election photo gallery ; வாக்குசாவடிக்கு வருகை தந்த நடிக்ர் ரஜினிகாந்த்
7.
election photo gallery : திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் வாக்களித்த பின்பு
8.
election photo gallery : குடும்பத்துடன் சென்று வாக்களித்த நடிகர் பிரபு
9.
election photo gallery : தமிழிசை சவுந்தரராஜன் வாக்களித்த காட்சி
10.
election photo gallery : குடும்பத்துடன் ஓட்டு போட வந்த மு. க ஸ்டாலின்
11.
election photo gallery : வரிசையில் காத்திருந்த ஸ்டாலின்
12.
election photo gallery : குடும்பத்துடன் ஜனநாயக கடமை ஆற்றிய பொதுமக்கள்
13.
election photo gallery : எல்.கே சுதீஷ் குடும்பத்துடன் வருகை
14.
election photo gallery : நடிகர் நாசர் செல்பி
15.
election photo gallery : எல். கே. சுதீஷ் வாக்களித்த காட்சி
16.
election photo gallery : மகளுடம் வரிசையில் நின்ற கமல்
17.
election photo gallery : ஓட்டு போட ஆர்வம் காட்டும் பொதுமக்கள்
18.
election photo gallery : முதன்முறையாக ஓட்டு போட்ட உற்சாகத்தில் கல்லூரி மாணவி
19.
election photo gallery : ஜனநாயக கடமை ஆற்றிய இளைஞர்