Lok Sabha Election Results 2019: மக்களவை தேர்தல் 2019 முடிவுகள் நாளை(மே.23) வெளியாகிறது. இதைமுன்னிட்டு திமுக, அதிமுக கட்சிகள் தங்கள் கழக நிர்வாகிகளுக்கு சில தேர்தல் குறிப்புகளை அனுப்பியுள்ளன.
election results 2019 : திமுக தலைமைக் கழக அறிவிப்பு
வாக்கு எண்ணிக்கை முகவர்கள், வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் படிவம் 17C, வெள்ளை காகிதம், பென்சில் கொண்டுச் செல்லலாம்.
ஒவ்வொரு சுற்று முடிவிலும், எண்ணப்பட்ட வாக்குகள் விபரம், ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகள் விபரம் குறித்து 17C-யின் பாகம் 2ல் பதிவு செய்து, வாக்கு எண்ணிக்கை பார்வையாளரின் கையொப்பமிட்ட பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தில், வேட்பாளருடைய முகவரின் கையொப்பம் பெற்று அதனுடைய ஜெராக்ஸ் நகலை மேசை வாரியாக வழங்க வேண்டும். அதனை அந்த மேசைக்கான முகவர் கண்டிப்பாக பெற வேண்டும்.
ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தில் (VVPAT) உள்ள பதிவுச் சீட்டுக்கள் எண்ணப்பட்ட பிறகு அதன் விபரங்களை படிவம் 17Cயில் உள்ள இணைப்பு படிவத்தில் பூர்த்தி செய்து அதன் நகல்களும் முகவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அதனையும் நமது முகவர்கள் கண்டிப்பாக பெற வேண்டும்.
மேலும் படிக்க - வாக்கு எண்ணிக்கை நடைபெறுவது எப்படி? தேர்தல் ஆணையர் விளக்கம்
முகவர்களுக்கு அதிமுக வெளியிட்ட அறிவிப்பு
அதிமுக வாக்கு மைய முகவர்கள் அனைவரும் காலை 6 மணிக்கே மையங்களுக்கு சென்றுவிட வேண்டும்.
வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஏற்பாடுகள் முறையாக செய்யப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
வாக்குப்பதிவு இயந்திரத்தில் வைக்கப்பட்டுள்ள சீல் முறையாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
பதிவான வாக்குகளும், எண்ணிக்கையில் காட்டப்படும் வாக்குகளும் ஒரே எண்ணிக்கையில் உள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
ஒவ்வொரு சுற்று முடிவிலும், வேட்பாளருக்கு எவ்வளவு வாக்குகள் கிடைத்தது என்பதை எழுதி வைத்து, தேர்தல் அதிகாரியிடம் சரிபார்த்த பிறகு தான், அடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
வாக்கு எண்ணிக்கை பணியில் இருப்பவர்கள் யாரேனும் மாற்றுக் கட்சியினருக்கு ஆதரவாகவோ, முறைகேடாகவோ செயல்பட்டால், மேலதிகாரிக்கு தெரிவித்து உடனே தீர்வு காண வேண்டும். குறிப்பாக திமுகவினரை கவனமாக கண்காணிக்கவும்.
கழக முகவர்கள், முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர் தான் மையத்தில் இருந்து வெளியேற வேண்டும்.
கழக மற்றும் தோழமை கட்சி வேட்பாளர்களும், அவர்களின் Chief Agent-களும், வாக்கு எண்ணும் பணி முறையாக நடக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.