Electors verification program : வாக்காளர் பெயர் சரிபார்ப்பு திட்டப்பணி இன்று துவங்கி இம்மாதம் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. வாக்காளர்கள் தங்களின் பெயர், முகவரி, வயது, புகைப்படம் ஆகியவற்றை தாங்களே திருத்தம் செய்து கொள்ளும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம்.
Electors verification program
www.nvsp.in என்ற இணைய தளத்திற்கோ, voter helpline எனும் ஆப் மூலமாகவோ இந்த திருத்தங்களை வாக்காளர்கள் தாங்களாகவே மேற்கொள்ளலாம் என்று கூறுகிறார் தமிழக தேர்தல் அலுவலர் சத்யப்ரதா சாஹூ.
இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கிகரிக்கப்பட்ட ஆவணங்களான ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் மற்றும் ரேசன் கார்ட் ஆகியவற்றை கொடுத்தும் வாக்காளர் சேவை மையங்களில் வாக்காளர்கள் இந்த திருத்தல் பணியை மேற்கொள்ளலாம்.
வாக்குச்சாவடி அதிகாரிகள் வீடு தோறும் வந்து வாக்காளர்கள் குறித்த சரிபார்ப்பு பணிகளை மேற்கொள்வார்கள். அக்டோபர் 15ம் தேதி வரைவு வாக்காளர்கள் பட்டியல் வெளியிடப்படும்.
அக்டோபர் 15 முதல் நவம்பர் 31ம் தேதி வரை சிறப்பு வாக்காளர்கள் பட்டியலில் பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல், மறைந்து போன வாக்காளர்கள், காணாமல் போன வாக்காளர்கள், திருமணமாகி வேறு இடத்திற்கு குடிபெயர்ந்த வாக்காளர்களின் பெயர் பட்டியல் சரிபார்க்கும் பணிகள் ஆகியவை நடைபெறும்.
புதிதாக தங்களின் பெயர்களை இணைக்க விரும்பும் வாடிக்கையாளர்கள் நவம்பர் 2,3,9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களில் இணைத்துக் கொள்ளலாம். 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க : இன்று தமிழகத்தில் நடைபெறும் முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள